கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, December 5, 2010

செம்மொழி பூங்காவில் மல்லிகை, ரோஜாக்களை பூங்காவில் கண்டேன் மலர்ந்த பூக்களை மக்கள் முகத்தில் கண்டேன் - முதல்வர் கருணாநிதி



முதல்வர் கருணாநிதி 03.12.2010 அன்று வெளி யிட்ட கேள்வி பதில் அறிக்கை:

மிகவும் உருக்கத்தோடு உங்கள் வாழ்க்கை கணக்கை எழுதிய தாங்கள் சேலத்தில் குடியிருந்ததைப் பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். கோவையில் குடியிருந்ததைப் பற்றிச் சொல்லவில்லையே?
கட்டுரை மிகவும் நீண்ட தாக ஆகிவிட்ட காரணத்தாலும், நேரம் இல்லை என்பதாலும் கோவையில் குடியிருந்ததை நான்எழுத வில்லை. ஏன் அதற்கு முன்பாக புதுவையில் பிரசா ரக் கூட்டத்திற்கு சென்ற நான் ஒரு சிலரால் கடுமையாகத் தாக்கப்பட்டு, இறந்து விட்டதாகக் கருதி அவர்கள் சாலையோரத்தில் தூக்கிப் போட்டுவிட்டுச் சென்று விட்டார்கள்.
அந்த நேரத்தில் புதுவை யில் இருந்த தந்தை பெரியார் எனக்கு ஆறுதல் கூறி என்னை அவருடன் ஈரோட்டிற்கு அழைத்துச் சென்று, குடியரசு வார இதழுக்கு துணை ஆசிரியனாக இரு என்று பணித்தார்கள். அதற்கு மாதம் நாற்பது ரூபாய் சம்பளம்.
மதியம் சாப்பிடுவதற்காக 20 ரூபாய், காலைச் சிற்றுண்டிக்காக மாதம் 10 ரூபாய் ஆகிவிடும். இதரச் செலவுகளுக்காக ஐந்து ரூபாயை வைத்துக்கொண்டு, மீதம் ஐந்து ரூபாயை திருவாரூரில் இருந்த என் மனைவி பத்மாவிற்கு மாதந்தோறும் மணியார்டர் செய்வேன்.
நான் எழுதிய திரைப்படங்களைப் பற்றி விவரமாக எழுதவில்லை. அதற்கும் நேரமும், இடமும் போத வில்லை. திரும்பிப்பார் திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதியமைக்காக, அப்போது 20 ஆயிரம் ரூபாய் ஊதியமாக கிடைத்தபோது, அந்தத் தொகை யைக் கொண்டு அப்போது திருவாரூருக்கு பக்கத்தில் காட்டூர் கிராமத்தில் அந்த இளம் வயதிலேயே நன்செய் நிலம் வாங்கி குத்தகைக்குக் கொடுத்திருந்தேன்.
பின்னர் நான் முதல்வராக இருந்த போது லண் டன் சென்றிருந்தேன். அப் போது பெர்கூசன் கம்பெனியார் சார்பில் நண்பர் சிவ சைலம் எனக்கு லண்டனில் ஒரு டிராக்டர் அன்பளிப்பாகக் கொடுத்து, அதனை நான் அப்போதே கோவை யில் உள்ள விவசாயப் பல்கலைக்கழகத்திற்கு அன்பளிப்பாகக் கொடுத்து விட்டேன். ஆனால் காட்டூர் வயலுக் காக எடுத்துச் சென்று விட் டதாக புகார் மனு கொடுத்தனர். என்னுடைய கட்டுரையில் விட்டுப்போன இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் நினைவூட்டுவதற்காகவே குறிப்பிட்டேன்.
2ம் தேதி மாலையில் திடீரென சென்னையிலே புதி தாக திறக்கப்பட்ட செம் மொழிப் பூங்காவிற்கு மக்க ளோடு மக்களாக நீங்களும் வருகை தந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்து விட்டீர்களே?
திடீரென முடிவு செய்து செம்மொழிப் பூங்காவினை கடந்த திங்கள் 24ம் தேதி திறந்து வைத்தோமே, எவ் வாறு உள்ளது, மக்கள் வருகிறார்களா என்று கண்டுவரலாம் என்றெண்ணி, முன்கூட்டியே யாருக்கும் தெரிவிக்காமல் திடீரென செம்மொழிப் பூங்காவிற்குச் சென்றேன்.
முன்கூட்டியே தெரிவித்திருந்தால், காவல் துறை யினர் பொது மக்களைத் தடுத்து நிறுத்தி இருப்பார் கள். திடீரென சென்ற காரணத்தால், செம்மொழிப் பூங் காவைக் காண வந்த மக்கள் கூட்டம் என்னை மொய்த்துக்கொண்டது.
மலர்களையும், கொடிகளையும், செடிகளையும் காணச் சென்ற என்னைச் சுற்றி மழலைகளும், அவர்களது பெற்றோர்களும், வயதானவர்கள் கூடிக் கொண்டு அளித்த வரவேற்பு இருக்கிறதே, அது மறக்க முடியாத ஒன்று. சாதாரண மக்கள் நம்மிடம் எந்த அளவிற்கு அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதை பரிபூரணமாக காண முடிந்தது. மல்லிகை, ரோஜாக்களை பூங்காவில் கண்டேன், அந்த மலர்ந்த பூக்களை அங்கேயிருந்த மக்களின் முகத்திலும் கண்டேன்.
அந்த மழலைச் செல்வங்கள், தாத்தா, தாத்தா என்று என்னை அன்பொழுக சூழ்ந்து கொண்டு கை கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். என் கை வலிக்க, வலிக்க அந்தக் குழந்தைகள் தங்களின் சிறு சிறு கரங்களால் குலுக்கினர். அந்த வரிசையில் ஒன்றரை வயது குழந்தை திடீரென தன் கையை இழுத்துக் கொண் டது. ஏன் நீ கை கொடுக்கவில்லை என்று ஆச்சரியத்தோடு நான் கேட்ட போது, “தாத்தா, நான் ஐஸ் ஸ்கிரீம் சாப்பிட்டேன், கை டர்ட்டியாக உள்ளது, உங் கள் கை கெட்டுவிடும் அல் லவா?” என்றுரைத்தது.
இன்னொரு சிறுமி, “தாத்தா நான் உங்களுக்குத் தான் ஓட்டுப் போடுவேன்” என்று கூறினாள். நான் உடனே உனக்குத்தான் ஓட்டு கிடையாதே என்றேன். அடுத்த நிமிடமே அந்தச் சிறுமி, தாத்தா, எனக்கு ஓட்டு இல்லாவிட்டால் என்ன, நான் உங்களுக்காக Òகேன்வாஸ்Ó(பிரசாரம்) செய் வேன் அல்லவா?Ó என்றது.
வயதிலே மூத்தவர்கள் எல்லாம், Òஅய்யா, நல்லா இருக்கீங்களா, முதலமைச்சரா இருந்துகிட்டு, இப்படியெல்லாம் கூட்டத்திற்குள் வரலாமா?Ó என் றும், Òதலைவரே, நாங்கள் எல்லாம் ஆயிரம்விளக்கு தொகுதிதான், எங்க குடும் பமே உங்களுக்குத்தான் சொந்தம்Ó என்று உரிமை கொண்டாடினார்கள்.
உள்ளத்தில் எந்தவிதமான களங்கமும் இல்லாத அந்த குழந்தைகள், அவர்களின் பெற்றோர் மத்தியில் அரை மணி நேரம்தான் இருந்திருப்பேன். அதற்குள் செம்மொழிப் பூங்காவிற்குள் இருந்த முழு கூட்டமும் என்னுடைய மூன்று சக்கர தள்ளுவண்டியை சூழ்ந்து கொள்ளத் தொடங்கின.
அங்கிருந்த ஒரு சில காவலர்களால் கூட்டத்தினரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒவ்வொருவரும் என்னிடம் கை கொடுக்கவும், புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் போட்டியிட்ட காரணத்தால், எப்படியோ அவர்கள் அன்புப் பிடியிலிருந்து மீண்டு வந்தால் போதும் என்ற எண்ணத் தோடு அவசர அவசரமாக வந்து என்னு டைய காரில் ஏறிக்கொண் டேன். அதற்காக நான் செல விட்ட அந்த அரை மணி நேரம் அன்றிரவு முழுவதும், இந்த மக்கள் தான் இந்த வயதில் நம்மிடம் எந்த அளவிற்கு பாசமாக இருக்கிறார்கள் என்பதை நினைத்துக் கொண்டே து£ங்காமல் அதையே எண் ணிக் கொண்டிருந்தேன்.
இவ்வாறு முதல்வர் அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment