கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, December 18, 2010

அண்ணாவின் சமதர்மக் கொள்கையை நிறைவேற்றுகிறார் கலைஞர் - நிதியமைச்சர் பேராசிரியர் உரை


அண்ணாவின் சம தர்மக் கொள்கையை நிறைவேற்று கிறார் தமிழக முதல்வர் கலைஞர் என்றும், தமிழக முதல்வர் கலை ஞரைபோல 24 மணி நேரமும் உழைக் கும் முதல்வர் வேறெந்த மாநிலத் திலும் கிடையாது. அடித்தட்டு மக்கள் அல்லல்படாமல் காக்கும் அரசு கலைஞர் தலைமையிலான கழக அரசு எனவேதான் பெரியார் - அண்ணா வழியில் நடந்து ஏழைகளுக்காக 21 லட்சம் வீடுகளை கட்டித்தருகிறார் முதல்வர் கலைஞர் என கடலூரில் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கி நிதியமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் உரையாற்றினார்.

கடலூர் மாவட்டத்தில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பய னாளிகளுக்கு தகுதி அட்டை வழங் கும் தொடக்க விழா கடலூர் நகர அரங்கில் நடைபெற்றது.

விழாவிற்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கி னார். பயனாளிகளுக்கு அடையாள அட் டைகளை வழங்கி நிதியமைச்சர் பேரா சிரியர் க. அன்பழகன் பேசியதாவது:-

கடலூர் மாவட்டத்தில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் குடிசை களுக்கு பதிலாக கான்கிரீட் வீடு வழங்கும் பயனாளிகளுக்கு, அவர் களுக்குதான் வீடு என்ற அத்தாட்சி யைப் பெறுவதற்கு இந்த விழா நடை பெறுகிறது.

அங்கு கடுமையான மழை பெய்து, புயல் அடிக்கும் போது குடிசைகள் பிய்ந்துபோய், குடிசைக்குள் மழை தண்ணீர் புகுந்து, குடிசைகள் வெள் ளத்தில் மிதப்பதை கலைஞரும் அறிந்தவர், நானும் அறிவேன்.

அதனால்தான் கலைஞர் 5 ஆவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற வுடன் தமிழகத்தில் நம்முடைய காலத்தோடு இந்நிலையைப் போக் கிட வேண்டும் என்று எண்ணி தமி ழகத்தில் அதனால்தான் அந்த நிலையை மாற்றிட வேண்டும் என் பதற்காக, மழை பெய்தாலும் பாது காப்பாக கான்கிரீட் வீட்டில் இருக் கிறோம் என்ற நம்பிக்கையை அடித் தட்டு மக்களுக்கு ஏற்படுத்துவதற்காக கான்கிரீட் வீடு வழங்கும் திட்டத்தை கலைஞர் கொண்டு வந்தார்.

இந்த திட்டத்தின் கீழ் 6 ஆண்டு களில் 21 லட்சம் வீடுகள் கட்டப்பட வுள்ளது. முதல்கட்டமாக நடப்பு ஆண்டில் 3 லட்சம் வீடுகள் கட்டப் படுகிறது.

இந்தத் திட்டத்தை கலைஞர் அறி வித்தபோது, இவ்வளவு வீடுகள் கட்டிக் கொடுக்க முடியுமா என்றெல் லாம் சட்டமன்றத்தில் சில பேர் கேள்வி கேட்டார்கள். 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போடுவோம் என்று சொன்ன கலைஞர் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போடவில்லையா, அதே போலத்தான் 21 லட்சம் வீடுகளையும் கட்டிக்கொடுப்பார் என்று சொன்னேன்.

இன்னும் 6 மாதக் காலத்தில் தேர்தல் வருகிறது. அதற்குப் பிறகு யார் ஆட்சிக்கு வரப்போகிறார்களோ என்று சில பேர் சந்தேகம் கிளப்பி னார்கள். அதற்கு நாங்கள்தான் மீண்டும் ஆட்சிக்கு வருவோம். அந்தப் பணிகளை நாங்களே ஆற்றுவோம் என்று கலைஞர் பதில் சொன்னார்.

ஏழைகளுக்கு வீடு வழங்க வேண் டும் என்பது அண்ணாவின் கொள்கை யாகும். எப்போது, எங்கேயாவது ஏழை இருக்கத்தான் செய்வான். கூலி கொடுத்தால் அவன் வேலை செய் வான் என்று அவனை வெறும் கூலிக் காரனாக மட்டும் கருதக்கூடாது.

அவனுக்கும் உண்ண, உணவு, உடுக்க உடை , இருக்க வீடு வழங்க வேண்டும் என்பது அண்ணா ஏற்றுக் கொண்ட கொள்கை. அண்ணாவின் சமதர்மக் கொள்கையை கலைஞர் நிறைவேற்றி வருகிறார்.

ஏழைகளுக்கு கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம் ஏதோ இன்று தொடங்கப்பட்ட திட்டம் அல்ல.

1972 ஆம் ஆண்டிலேயே குடிசை மாற்று வாரியம் என்ற அமைப்பை கலைஞர்தான் கொண்டுவந்தார். அந்த அமைப்பின் மூலம் 70 ஆயிரம் வீடு களை கலைஞர்தான் கட்டிக் கொடுத் தார். அந்த வீடுகளை திறந்து வைக்க வந்த ஜெயப்பிரகாஷ் நாராயணும், ஜெகஜீவன் ராமும் காந்திய கொள் கைகளை ஏற்றுக் கொண்ட மாநிலத் தில் கூட தமிழகத்தில் ஏழைகளுக்கு அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிக் கொடுத்ததுபோல, கட்டிக் கொடுக்க வில்லை என பாராட்டி பேசினார்கள்.

இன்றைக்குக் கூட இந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஏழைகளுக்கு வீடு கட்ட ரூ. 25 ஆயிரத்துக்கும் மேல் கொடுப்பதில்லை. ஆனால், தமிழ கத்தில் ரூ. 75 ஆயிரம் ரூபாய் கொடுக் கிறோம். இந்த திட்டத்தில் பயன டையப் போகிறவர்கள் அத்தனை பயனாளிகளுக்கும் இந்த மாதத்திற் குள் அடையாள அட்டை வழங்கப் பட்டு விடும்.

இந்தியாவில் கலைஞர் அளவுக்கு உழைக்கிற முதல்வர் வேறு யாரும் கிடையாது. சிலர் சொத்துக்காக உழைப்பாளர்கள். ஆனால் கலைஞர் நாட்டுக்காக உழைக்கிறார்.

தற்போது கலைஞர் வீடு வழங்கும் திட்டம் மூலம் 6 ஆண்டுகளில் 21 லட்சம் வீடுகள், கட்டிக்கொடுக்கப் படவுள்ளது. முதலில் ரூ. 60 ஆயிரம் என தீர்மானிக்கப்பட்டது. பிறகு ரூ. 75 ஆயிரம் கொடுத்து, அவர்களே கட்டிக்கொள்ளும் பொறுப்பையும் அளித்து செங்கல், சிமென்ட், கம்பி என அனைத்தையுமே அரசு வழங்கி வருகிறது.

இன்று ஒரு பத்திரிகை எங்களைப் பற்றி செய்தி வெளியிட்டுள்ளது. மிதக்கிறது சென்னை, மிதப்பில் அரசு நிருவாகம் என வெளியிட்டுள்ளது.

எம்.ஆர்.கே. சேர்த்து வைத்துள்ள சொத்தில் அமைச்சர் பன்னீர்செல்வம் உட்கார்ந்துகொண்டே சாப்பிடலாம். மழை வெள்ளத்தில் பாதித்தவர்களை சந்தித்து நிவாரணப்பணிகளை மேற் கொண்டு வருகிறார்.

தமிழகம் முழுவதும் அமைச்சர் களும், மாவட்ட ஆட்சியர்களும் நிவாரணப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அப்படி நாங்கள் ஒருபோதும் மிதப்பில் உள்ளவர்கள் அல்ல. அந்தப் பரம்பரையில் வந்தவர்களும் அல்ல. நயவஞ்சகக்காரர்கள், ஏமாற்றுக்காரர் கள் அல்ல; தானம் பெற்று கூட கோபு ரங்கள் கட்டிக்கொண்டவர்கள் நாங்கள் அல்ல.

நாங்கள் பெரியாரின் வழியில் ஏழைகளுக்காக உழைப்பவர்கள். பாட்டாளி வர்க்கத்தின் தோழர்கள். ஏழை - எளிய மக்களின் வாழ்க்கை முன்னேற நாளும் உழைத்து வருபவர் கள், மக்களோடு இருப்பவர்கள். அவர் களுக்காக பாடுபட்டு வருபவர்கள், சமூக நலன் கருதுபவர்கள். சமதர் மத்தை விரும்புபவர்கள்.

எனவேதான், பெரியார் , அண்ணா காட்டிய வழியில் அல்லும், பகலும் அயராது மக்களுக்காகப் பாடுபடும் அரசாக கலைஞர் அரசு உள்ளது. இவ் வாறு நிதியமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் பேசினார்.

விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.சீத்தாராமன், சட்ட மன்ற உறுப்பி னர்கள் கோ.அய்யப்பன், சபா.ராஜேந் திரன், துரை ரவிக்குமார், நகர மன்றத் தலைவர் து.தங்கராசு உள்ளிட்டவர் கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment