



ஸ்பெக்ட்ரம் பிரச் சினையில் 2001 ஆம் ஆண்டுமுதல் விசாரணை நடத்தவேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இப்படி உச்சநீதிமன்றம் கூறியதைக் கண்டு பா.ஜ.க. ஏன் பயப்படவேண்டும்? தங் களுடைய ஊழல்கள் எங்கே வெளியே தெரிந்துவிடுமோ என்ற அச்சமா? அதேபோல, ஊழலை ஒழிக்க பிறந்த கம்யூனிஸ்ட்காரர்கள் உச்சநீதிமன்றம் கூறியதை வரவேற்பதை விட்டுவிட்டு எதிர்ப்புத் தெரிவிப்பானேன்? என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் கேள்வி எழுப்பினார். குன்னூரில் உள்ள பெரியார் திடலில் (வி.பி.திடல்) 16.12.2010 அன்று பிற் பகல் 3மணிக்கு ஆ.இராசா அவர்களின் மீது சில ஊடகங்களின் வேட்டை ஏன்? என்ற தலைப்பில் திராவிடர் கழக பொதுக்கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பொதுக்குழு உறுப்பினர் இரா.கோவிந்தராஜன், மாவட்ட இ.அணி தலைவர் சத்திய நாதன், இளைஞரணி செயலாளர் சி.இராவணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் ஆ.கரு ணாகரன் தலைமை வகித்து உரையாற் றினார். தலைமைக் கழக சொற்பொழி வாளர் க.வீரமணி, கோபி.கருப்பண் ணன் ஆகியோரது உரைக்குப் பின்னர் கழகத்தின் துணைப் பொதுச்செயலா ளர் மருத்துவர் பிறைநுதல்செல்வி உரையாற்றினார். பின்னர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆ.இராசா அவர் களின் மீது சில ஊகடங்களின் வேட்டை ஏன் என்ற தலைப்பில் ஆதாரப்பூர்வமான ஓர் எழுச்சியுரை யாற்றினார். அவர் தனது உரையில், முக்கிய கேள்வி ஒன்றை எழுப்பினார். ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் 2001 ஆம் ஆண்டு முதல் விசாரணை நடத்தவேண்டுமென்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதற்குப் பா.ஜ.க. ஏன் எதிர்ப்புக் காட்டவேண்டும்? நீதிபதி சிவராஜ் பாட்டீல் விசாரணையை ஏன் எதிர்க்கவேண்டும்? விசாரணையை வரவேற்கிறோம் என்றல்லவா இவர்கள் சொல்லவேண்டும்? அதேபோல, கம்யூ னிஸ்ட் கட்சியினரும் உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்கிறோம் என்றல்லவா சொல்லவேண்டும்? ஏனென்றால், இவர்கள் ஊழலை ஒழிக்கப் பிறந்த வர்கள் என்பதுபோல் அல்லவா கூக்குரல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். கம்யூனிஸ்ட்காரர்களும் இப்பொழுது ஏன் எதிர்க்கவேண்டும்? காரணம், இவர்களுக்கெல்லாம் எப்படியாவது மத்திய அரசைக் கவிழ்க்க வேண்டும் என்பதே நோக்கம் என்பது போன்ற பல்வேறு கருத்துகளை எடுத்துக்கூறி சிறப்புரையாற்றினார். இவ்விழாவிற்கு குன்னூர் எம்.எல்.ஏ., சவுந்தரபாண் டியன், சித்திக் அலி, வழக்குரைஞர் ஆ.பாண்டியன், டாக்டர் கவுதமன், இரா.ரவி, பிரேம்குமார், லி.வெங்கடேஷ், பா.ரமேஷ், க.ஜோதிமணி, கு.மீனாட்சி, மல்லி, பிரதீப், ஜீவா, ரா.பழனிசாமி, முருகன், இரா.செல்லன், இரா.வாசுதேவன், கருப் பையா, ஈஸ்வரன், கணேசன், பாலன், சரவணன், சங்கர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங் கேற்று சிறப்பித்தனர். நிறைவாக மூ.நாகேந்திரன் நன்றியுரையாற்றினார். வரவேற்பு 15.12.2010 அன்று மாலை கதர் வாரிய துறை அமைச்சர் கா.இராமச்சந்திரன், சித்திக் அலி, நகர்மன்ற தலைவர் இராமசாமி மற்றும் ஏராளமான தி.மு.க முன்னணி பொறுப்பாளர்கள் தமிழர் தலைவருக்கு சால்வை அணிவித்தனர். முன்னதாக 11.30 மணிக்கு டாக்டர் கவுதமன் இல்லத்தில் தங்கியிருந்த தமிழர் தலைவ ருக்கு தி.மு.க முன்னாள் கொறடா முபாரக் தலைமையில், திமுக ஒன்றிய மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் தமிழர் தலைவருக்கு சால்வை அணிவித்துச் சிறப்பித்தனர். குன்னூர் எம்.எல்.ஏ சவுந்தரபாண்டியன் தமிழர் தலைவருக்கு சால்வை அணிவித்து அன்போடு வரவேற்றார். ஞானசூரியன் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டு அதற்கான தொகையை தமிழர் தலை வரிடம் வழங்கினார். |
No comments:
Post a Comment