கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, December 12, 2010

வீட்டுவசதி வாரிய வீடுகளை விற்றதில் அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை - முதல்வர் கருணாநிதி


வீட்டு வசதி வாரிய வீடுகளை விற்றதில் அரசுக்கு இழப்பு ஏற்படவில்லை என்று முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.
முதல்வர் கருணாநிதி நேற்று (11.12.2010 ) வெளியிட்ட அறிக்கை:
மத்திய தணிக்கைத் துறை அதிகாரியின் தணிக்கை குறிப்பில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய், மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டு விட்டது என்பதை சுட்டிக்காட்டியதை தொடர்ந்து, நாடாளுமன்றம் 20 நாளாக நடைபெறாத நிலை ஏற்பட்டு, அதனாலேயே பல கோடி ரூபாய் நாட்டிற்கு இழப்பு என்று அன்றாடம் செய்திகள் வருகின்றன.
இதே தணிக்கை துறை அறிக்கை ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு பாராளுமன்றத்தில் வைக்கப்பட்ட போது, இதே அலைக்கற்றை ஒதுக்கீடு காரணமாக பல கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தபோதிலும், அப்போது யாரும் முக்கியத்துவம் தராததால், வெளி உலகத்திற்கே தெரியாமல் போய்விட்டது.
தணிக்கைத் துறை அறிக்கை அவையில் தாக்கல் செய்யப்படுவதை பற்றியும், அந்த அறிக்கையை பொது கணக்குக் குழுவிற்கு அனுப்பி உரிய துறை விளக்கம் கேட்டு, குழுவின் அறிக்கையாக சட்டப்பேரவையில் அடுத்து வரும் ஆண்டுகளில் அளிக்கப் பெறுவதும் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் நடைமுறையாகும்.
எந்த அரசு ஆட்சிப் பொறுப்பிலே இருந்தாலும், அரசுத் துறைகளின் திட்டச் செயல்பாடுகள் குறித்து தணிக்கை அறிக்கையிலே சுட்டிக்காட்டப்படும் குறைபாடுகளை, எதிர்க்கட்சிகள் எடுத்துக்காட்டுவதும், அதற்கு ஆளுங்கட்சியின் சார்பில், உங்கள் ஆட்சிக் காலத்திலும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டிருக்கின்றன என்று எடுத்துக் காட்டுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற ஒன்றாகும்.
இந்த வகையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குறித்த 2008&2009ம் ஆண்டு தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு குறைபாட்டிற்கு ஆங்கில நாளிதழ் ஒன்று தமிழக அரசுக்கு இதன் மூலம் ஏதாவது களங்கம் கற்பிக்க வேண்டுமென்ற உள்நோக்கத்துடன் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டிருக்கிறது.
அந்த ஆங்கில நாளிதழ் அந்த செய்திக்கு எழுதியுள்ள தலைப்பே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு ரூ.5.17 கோடி இழப்பு என்பதாகும். தமிழக வீட்டு வசதி வாரியத்தைப் பற்றி தணிக்கை அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள குறைபாடு குறித்த விளக்கத்தை வீட்டு வசதி வாரியம் தனியே பொதுக் கணக்குக் குழுவிற்கு அனுப்பும் என்ற போதிலும், உள்நோக்கத்தோடு வெளியிடப்பட்டுள்ள இந்தச் செய்தி பற்றி விளக்கம் அளிக்கலாம் என்று எண்ணுகிறேன்.
பெரிதாக செய்தி வெளியிட்டு வீட்டு வசதி வாரியத்தில் பெரிய முறைகேடு ஏற்பட்டு விட்டதைப் போலவும் ரூ. 5 கோடி இழப்பு ஏற்பட்டுவிட்டதைப் போலவும் உள்நோக்கத்தோடு அதனை வெளியிட்டிருக்கிறார்கள். அதிலும் தணிக்கைத் துறை அதிகாரியே இதனைக் குறிப்பிட்டிருப்பதாகவும் அந்த ஏட்டில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் உண்மை யில் நடந்தது என்ன?
முகப்பேர் ஏரித் திட்டம் என்பது 1998ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டு பின்னர் 2004ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் விற்பனையாகாமல் போன அடுக்குமாடிக் கட்டிடங்கள் மற்றும் வீடுகளுக்கு மதிப்பினைக் குறைக்க முடிவு செய்யப்பட்டு, ஒரு கிரவுண்ட் விலை ரூ.2 லட்சத்து 58 ஆயிரம் என்று மதிப்பிடப்பட்டது.
இந்த திட்டத்தின்படி 250 குடியிருப்புகள் 1998ம் ஆண்டு கட்டப்பட்டன. கட்டப்பட்ட காலத்தில் விலை அதிகம் என்று கூறி அந்த வீடுகளை வாங்க யாரும் முன் வரவில்லை. 80 குடியிருப்புகள் மட்டுமே விற்பனையாகி மீதி 170 குடியிருப்புகள் விற்கப்படாமல் இருந்தன. அந்த நிலையில் கடந்த ஜெயலலிதா ஆட்சியில் 26&12&2005ல் குடியிருப்புகளை டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மாணவர்கள் விடுதியாகப் பயன்படுத்த வாடகைக்கு விடப்பட்டது. திமுக ஆட்சி யில் 2008ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் அந்த வீடுகள் காலி செய்யப்பட்டு வாரியக் கட்டுப்பாட்டுக்குள் வந்தன.
மாணவர்கள் அந்த விடுதியில் பத்தாண்டு தங்கியிருந்த நிலையில் அந்தக் குடியிருப்புகள் எல்லாம் ஓரளவிற்கு பழுதடைந்ததாகி விட்டது. எனவே வீட்டு வசதி வாரியம் அந்த குடியிருப்புகளையெல்லாம் குலுக் கல் முறையில் விற்பனை செய்வதென்று அறிவித்தது. இந்த 170 மனைகளை வாங்க சுமார் இரண்டு லட்சம் மனுக்கள் வந்தன.
விண்ணப்பித்த மனுதாரர்களிடமிருந்து பதிவுக் கட்டணமாக ரூ.400 வீதம் வசூலிக்கப்பட்டது. குலுக்கல் முறையில் வீடு கிடைத்தவர்கள் போக எஞ்சியிருந்த 1 லட்சத்து 73 ஆயிரத்து 288 பேர் என்ற எண்ணிக்கை அதிகமாக இருந்ததாலும், அவர்கள் தங்களுக்கு வீடு கிடைக்காவிட்டாலும் தாங்கள் கட்டிய பதிவுக் கட்டணம் ரூ.400 திரும்பத் தர வேண்டுமென்று கோரிக்கை வைத்த னர். அவர்களின் கோரிக்கைகளையேற்று 22&8&2008 1398041963 ஆணை பிறப்பித்து 8&12&2008ல் ரூ.400ஐ அவர்களிடம் திரும்பக் கொடுத் தது. 22&8&2008ல் அரசு சார்பில் வெளியிட்ட பத்திரிகை செய்தியிலேயே விண்ணப்பம் செய்தவர்களில் பெரும்பாலோர் ஏழை மற்றும் மத்திய தர மக்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த வீடுகளுக்காக விண்ணப்பம் செய்து, செப்டம்பர் 30ம் தேதி நடைபெறவுள்ள குலுக்கலிலே வீடு கிடைக்காதவர்களுக்கு வீட்டுவசதி வாரியம் பெற்றுக் கொண்ட பதிவுக் கட்டணமான ரூ.400 மீண்டும் அவர்களிடம் திருப்பியளிக்க முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார் என்று அறிவித்து, ஏடுகளிலும் வந்துள்ளது.
இவ்வாறு அவர்களிடம் பெற்ற ரூ. 400ஐ அந்த ஏழையெளிய, மத்திய தர மக்களுக்கு அரசு திரும்பக் கொடுத்ததால், அந்தத் தொகையான ரூ.3 கோடியே 47 லட்சம் வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டுவிட்டது என்று தணிக்கைத் துறை அதிகாரி தெரிவித்திருக்கிறார். அதைத் தான் ஆங்கில நாளேடு ஒன்று பெரிதாக வெளியிட்டுள்ளது.
அந்த ஏழையெளிய மக்கள் கட்டிய தொகையைத் திரும்பக் கொடுக்காமல் வீட்டு வசதி வாரியம் எடுத்துக் கொண்டிருந்தால் வாரியத்திற்கு லாபம் கிடைத்திருக்கும். ஆனால், வீடு கிடைக்காத பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கும். இதைத் தான் வீட்டு வசதி வாரியத்திற்கு இழப்பு என்ற அளவில் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.
வீட்டு வசதி வாரியத்தின் முக்கிய குறிக்கோளே, ஏழையெளிய, மத்திய தர வகுப்பினருக்கு; தாங்கக்கூடிய விலையில் வீடுகளும், மனைகளும் அளிக்க வேண்டுமென்பதுதான். தனிப்பட்ட முறையில் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்பவர்களைப் போல, லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, வீட்டு வசதி வாரியம் கட்டுகிற வீடுகளுக்கும் விலை நிர்ணயம் செய்தால், அது மக்கள் நலனைக் காக்கின்ற அரசு செய்கிற செயலாக இருக்காது. வீட்டு வசதி வாரியம் கட்டும் குடியிருப்புகளின் விலையை நிர்ணயம் செய்வதற்காக அமைக்கப் பட்டுள்ள அதிகாரிகள் குழு, ஒவ்வொரு வாரியத் திட்டத்திற்கும் ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலத்தின் விலை, நிலத்தை மேம்படுத்துவதற்கான செலவு, நிர்வாகச் செலவு மற்றும் முதலீட்டுக்கான வட்டி, ஓரளவு குறைந்த லாபம் ஆகியவற்றை கணக்கிலே கொண்டுதான் விலையை நிர்ணயம் செய்கின்றது.
அந்த முறையிலேதான் முகப்பேர் திட்டத்திற்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டதே தவிர, அந்த இடத்திற்கு குறைந்த அளவிற்குத் தான் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விட்டது, அதனால் வாரியத்திற்கு, அரசுக்கு இழப்பு ஏற்பட்டு விட்டது என்று செய்தி வெளியிட்டிருப்பது சரியல்ல. இது வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு இந்த அரசு மீது புகார் கூற வேண்டும் என்பதற்காகவே இத்தனை விபரங்களையும் மறைத்துவிட்டு, அரசின் மீது புழுதிவாரி தூற்றுகின்ற ஏடுகளுக்கு என்னதான் எரிச்சலோ தெரியவில்லை.
இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment