கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, December 31, 2010

திமுக ஆட்சிக்கு வந்தால் மழை பொழியாதா? : கலைஞர் பேச்சு


தமிழக முதல்வர் கலைஞர், 31.12.2010 அன்று புனித ஜார்ஜ் கோட்டையில், வெள்ள நிவாரணம் மற்றும் சுனாமி நிவாரணம் குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலி வாயிலாக கலந்தாய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வின் போது துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு, வருவாய் மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சர் அய்.பெரியசாமி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் மு.பெ.சாமிநாதன், பால்வளத்துறை அமைச்சர் உ.மதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் முதல்வர் கலைஞர் பேசும்போது,
" திமுக ஆட்சிக்கு வந்தால் மழை பொழியாது என்று ஒரு தவறான பிரசாரத்தை சில பேர் செய்து கொண்டிருந்த நிலையை பொய்யாக்கி, அண்மையில் மாதம் மும்மாரி பெய்த சூழ்நிலையில், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய கடலோர மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
நன்மைகளும், தீமைகளும் உண்டு என்ற வகையில் நாம் அந்தப் பாதிப்புகளை உணர்கின்றோம். அந்த வகையில் இந்த மழையின் காரணமாக, 203 பேர் இறந்துள்ளனர். ஏராளமான வீடுகளும், பயிர்களும் சேதமடைந்துள்ளன. ஏரிகள், குளங்கள், சாலைகள், போன்ற நீர்நிலைகளும் சேதத்திற்கு ஆட்பட்டுள்ளன. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண உதவிகள் வழங்கிடவும், சேதமடைந்த வீடுகள், சாலைகள் செப்பனிடவும் அரசு உரிய அறிவுரைகளை அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளது.
அமைச்சர்களும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் நேரில் சென்று பாதிக்கப்பட்ட இடங்களையெல்லாம் பார்வையிட்டு, அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை விரைவுபடுத்தினர். பாதிக்கப்பட்ட மக்கள் பாதிப்பிலிருந்து மீள்வதற்கு அரசின் உதவிக்கரம் தாராளமாக நீள வேண்டும் என்ற உணர்வோடு உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண உதவியை ஒரு லட்சம் ரூபாயிலி ருந்து 2 லட்சம் ரூபாயாக அரசு உயர்த்தி வழங்கியுள்ளது.
ஓரளவு பாதிப்படைந்த குடிசைகளுக்கு தலா 2500 ரூபாய்; முழுமையாக பாதிப்படைந்த குடிசைகளுக்குத் தலா 5 ஆயிரம் ரூபாய்; வெள்ளம் சூழ்ந்த மாவட்டங்களில் ஓரளவு பாதிப்படைந்த குடிசைகள் அல்லாத பிற வீடுகளுக்குத் தலா 1500 ரூபாய்; குமரி மாவட்டத்தில் மாத்திரம் அதிகமாக பாதிப்பு அடைந்த குடியிருப்புகளுக்குத் தலா 5 ஆயிரம் ரூபாய்; சேதமடைந்த நெற்பயிர்களுக்கு எக்டேர் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய்; நெற்பயிர் அல்லாத பிற பாசனப் பயிர்களுக்கு எக்டேருக்கு 7500 ரூபாய்; மானாவாரிப் பயிர்களுக்கு எக்டேருக்கு 4 ஆயிரம் ரூபாய்; இறந்த மாடு ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய்; கன்றுக்குட்டி ஒன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய்; ஆடுகளுக்குத் தலா 1000 ரூபாய்; கோழிகளுக்கு தலா 30 ரூபாய்; மீனவர்களின் படகு, கட்டுமரம், வலை முழுதும் பாதிக்கப்பட்டிருந்தால் அவற்றைப் புதிதாக வாங்க 7500 ரூபாய்; ஓரளவு பாதிக்கப்பட்டிருந்தால் 2500 ரூபாய் & என நிவாரண உதவிகளை உயர்த்தி வழங்கப்படுகிறது .
வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள ரூ.1,832 கோடி நிதி உதவி கேட்டு மத்திய அரசுக்கு அரசு அறிக்கை அனுப்பியுள்ளது. மாநில அரசின் வேண்டுகோளுக்கிணங்க வருகை தந்து தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களைப் பார்வையிட்ட மத்திய குழு தனது அறிக்கையை மத்திய அரசுக்கு அளித்த பின்னர், மத்திய அரசின் உதவி கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், தமிழக அரசு, பாதிப்படைந்த பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க முதற்கட்டமாக ரூ.300 கோடியும், வீடுகள், சாலைகள் சேதங்களை சீர்செய்ய ரூ.200 கோடி என மொத்தம் ரூ.500 கோடி அனுமதித்துள்ளது. இந்த தொகையைப் பயன்படுத்தி, அரசு வழங்கிய அறிவுரைகளுக்கேற்ப மாவட்ட கலெக்டர்களும், அலுவலர்களும், பணியாளர்களும் விரைந்து செயல்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துணையாக நின்று, ஊக்கம் தந்து உதவிகளை வழங்கியுள்ளார்கள் எனும் செய்திகளை அறிந்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
இருந்தாலும் கூட, ஒவ்வொரு மாவட்டத்திலும் நேர்ந்த இழப்புகளையும், அவற்றுக்கு வழங்கப்பட்ட நிவாரண உதவிகளையும் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக நேரடியாக அறிந்து கொள்ள விரும்புகிறேன். தேவைப்படும் உதவிகளுக்காகத் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு வசதியாக மாவட்ட வாரியாக விவரங்களை எனக்கு வழங்கிடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன் " என்று கூறினார் .

சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆய்வின் போது, முதல்வர் கருணாநிதி, நிவாரணப் பணிகள் அனைத்தையும் 2011 ஜனவரி 5ம் தேதிக்குள் நிறைவு செய்யுமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வில், துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் எஸ். வீரபாண்டி ஆறுமுகம், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, வெள்ளக்கோவில் சாமிநாதன், மதிவாணன், தலைமைச் செயலாளர் எஸ். மாலதி, வருவாய் நிர்வாக ஆணையர் சுந்தரதேவன், வருவாய் துறைச் செயலாளர் ஜெயக்கொடி, நிதித் துறைச் செயலாளர் சண்முகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர் அசோக் வர்தன் ஷெட்டி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைச் செயலாளர் அலாவூதீன், வேளாண்மைத் துறைச் செயலாளர் ராமமோகனராவ், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை செயலாளர் சந்தானம், பொதுப்பணித் துறை செயலாளர் தனவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment