தமிழ்நாட்டில் ஒரு கோடியே 96 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. சமீபத்தில் நடந்த சோதனையின் போது 20 லட்சம் போலி குடும்ப அட்டை கள் நீக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே உள்ள குடும்ப அட்டைகளில், இணைக்கப்பட்டுள்ள தாள்கள் இந்த மாதத் துடன் தீர்ந்து போகும் நிலையில் உள்ளது. எனவே தமிழ்நாட்டில் புதிய குடும்ப அட்டை கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், ஏற்கெனவே உள்ள குடும்ப அட்டைகளே தொடர்ந்து நீடிக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து உணவு, கூட்டுறவு, நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் சுவரண்சிங் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இப்போது பொது மக்களிடம் இருக்கும் குடும்ப அட்டைகள் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிவரை செல்லு படியாகும். அட்டை களில் உள்ள தாள்கள் தீர்ந்து விட்டால் கூடுத லாக சேர்த்துக் கொள் வதற்குரிய தாள்கள் அச் சிட்டு வழங்க உத்தர விடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment