மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தமிழக முதல்வர் கருணாநிதிக்கு 06.12.2010 அன்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இலங்கைக்கு நான் புறப்படுவதற்கு முன்பு கடந்த 24ம் தேதி நீங்கள் எழுதிய கடிதம் கிடைத்தது. அதில் குறிப்பிட்டிருந்த பிரச்னை பற்றி இலங்கை அரசுடன் விவாதித்தேன். இலங்கையில் உள்நாட்டு போரால் இடம்பெயர்ந்த தமிழர்களில் 16 முதல் 17ஆயிரம் பேர் மட்டுமே அரசு முகாம்களில் தங்கி உள்ளனர். அவர்களை இந்த ஆண்டு இறுதிக்குள் சொந்த ஊர்களில் குடியமர்த்த ஏற்பாடு செய்வதாக இலங்கை அரசு உறுதி அளித்துள்ளது.
ஏற்கனவே சொந்த வாழ்விடங்களில் குடியமர்த்தப்பட்ட தமிழர்களின் மறுவாழ்வுக்காக இந்திய அரசு கணிசமாக நிதி உதவி அளித்துள்ளது. இலங்கைக்கு நான் சென்றிருந்த போது, வடக்கு மகாணத்தில் தமிழர்களுக்காக ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டத்தையும், அங்கு ரயில் பாதை அமைக்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தேன். தமிழர்களுக்கு 500 டிராக்டர்கள் மற்றும் விவசாய உபகரணங்கள் வழங்கினேன். இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்கு இந்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும்.
இதுதவிர யாழ்ப்பாணத்தில் இந்திய துணை தூதரகத்தை திறந்து வைத்தேன். இதன் மூலம் யாழ்ப்பாணம் வாழ் தமிழர்களுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவை பலப்படும். தமிழர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை கேட்டுக் கொண்டேன். இந்திய மீனவர்கள் பாதுகாப்பு தொடர்பாகவும் பேசினேன். அப்போது இந்தியா& இலங்கை இடையே மீன்பிடித்தல் தொடர்பாக 2008ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை மீறக் கூடாது என்ற கேட்டுக் கொண்டேன்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment