கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, December 26, 2010

பாரதீய ஜனதா ஆட்சியில், அரசுக்கு ரூ.ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடி இழப்பு - மத்திய அமைச்சர் கபில்சிபல் பகிரங்கக் குற்றச்சாற்று


பார தீய ஜனதா கூட்டணி ஆட்சி காலத்தில் கடைப் பிடிக்கப்பட்ட தொலை தொடர்பு கொள்கை யினால், கடந்த 1999 ஆம் ஆண்டில் அரசுக்கு ரூ.ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக, மத்திய அமைச்சர் கபில் சிபல் குற்றம்சாற்றினார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு முறைகேடு புகார் நாட்டை உலுக்கி வரும் நிலையில், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியிலும் ஸ்பெக்ட் ரம் ஒதுக்கீட்டில் முறை கேடு நடைபெற்றதாக மத்திய அரசு குற்றம்சாற்றி வந்தது. அப்போதைய மத்திய அரசு கடைப் பிடித்த கொள்கையி னால், 1999 ஆம் ஆண் டில் மத்திய அரசுக்கு ரூ.ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக, மத்திய தொலை தொடர் புத் துறை அமைச்சர் கபில்சிபல் 21.12.2010 அன்று அறி வித்தார்.

தொலைக் காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதுபற்றி அவர் மேலும் கூறியதா வது:

ஏற்கெனவே நடை முறையில் இருந்து வந்த ஏலத்தில் விடும் கொள் கைக்குப் பதிலாக, வரு வாயில் பங்கு என்ற அடிப் படையில் ஒதுக்கீடு மாற்றப்பட்டதுடன், 10 ஆண்டு காலத்துக்கு இருந்த உரிமம் வழங்கும் முறையை 20 ஆண்டு களுக்கு அப்போது உயர்த்தப்பட்டது குறிப் பிடத்தக்கது.

ஸ்பெக்ட்ரம் அலைக் கற்றை ஒதுக்கீட்டை பொறுத்தவரை, எந்த வித பாரபட்சமும் இல் லாத கொள்கையை கடைப்பிடித்து வருகி றோம். கடந்த 2001 முதல் 2009 ஆம் ஆண்டு வரை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட் டிற்காக யாரும் பணம் செலுத்தவில்லை.

ஒவ்வொரு ஆப்ரேட் டர்களும் ஒரு முறை மட்டும் நுழைவுக்கட் டணமாக ரூ.1658 கோடி மட்டும் செலுத்தினால் போதும். இந்த அள வுக்கு குறைந்த கட்ட ணம் அமலில் இருந்த தால்தான், கடந்த சில ஆண்டுகளில், தொலை தொடர்பு துறையில் இந்த அளவுக்கு அதிக வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கடந்த 2001 ஆம் ஆண்டில் நாட்டில் உள்ள செல்போன்களின் எண்ணிக்கை விகிதம் 3 சதவிகிதம்தான். 2007 ஆம் ஆண்டில் இது 18.22 சதவிகிதமாகவும், 2009 இல் இது 61 சத விகிதமாகவும் (அதாவது 72 கோடி செல்போன் கள்) அதிகரித்தது குறிப் பிடத்தக்கது.

தொலைத் தொடர்பு கொள்கையை அமல் படுத்தியதில் நடை பெற்ற முறைகேடு தொடர் பாக, சில நிறுவனங்க ளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி இருக் கிறோம். அதுகுறித்து இப்போது மேற்கொண்டு விவரங்கள் எதையும் சொல்ல முடியாது. ஆனால், கொள்கை தொடர்பான முறைகேடு குறித்து தொலை தொடர்பு துறை அமைச்சகம் ஏற்கெனவே நடவடிக்கையை தொடங்கி விட்டது. கிரிமினல் குற்றச்சாட்டு குறித்து சி.பி.அய். விசாரணை நடத்தி வரு கிறது.

இவ்வாறு கபில்சிபல் கூறினார்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக, மத்திய அரசுக்கு ரூ.ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக, தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரி அளித்த அறிக்கையில் குற்றம் சாற்றப்பட்டு இருந்ததைத் தொடர்ந்து இந்த பிரச்சினை பெரிதானது.

இந்த நிலையில், பா.ஜனதா ஆட்சியில் கடைப்பிடிக்கப்பட்ட தொலை தொடர்பு கொள்கையால், ஒரே ஆண்டில் அரசுக்கு ரூ.ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாக, கபில்சிபல் குற்றம் சாட்டி இருப்பது குறிப் பிடத்தக்கது.

தொழிலதிபர்கள் சந்திப்பு

இதற்கிடையில், நாட்டில் உள்ள முக்கிய தனியார் தொலை தொடர்பு நிறுவன அதிபர்களை கபில்சிபல் 21.12.2010 அன்று சந்தித்து பேசினார். சுனில் மிட்டல் (பார்தி), அனில் அம்பானி (ரிலையன்ஸ்), ரத்தன் டாடா (டி.டி.சி.எல்.) ஆகியோருடன் ஏறத்தாழ 45 நிமிடம், துறையின் தற்போதைய நிலை குறித்து ஆலோசனை நடத்தி னார்.

இந்த சந்திப்பின்போது ஸ்பெக்ட் ரம் அலைக்கற்றை பற்றாக்குறை பற்றி தங்கள் கவலையை தெரிவித்த தொழில் அதிபர்கள், அதை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கும்படி வற்புறுத்தியதாக தெரிகிறது. ஸ்பெக்ட் ரம் ஒதுக்கீடு கொள்கையில் வெளிப் படையான தன்மை கடைப்பிடிக்கப் படும் என்று, அவர்களிடம் அமைச்சர் கபில்சிபல் உறுதி அளித்தார்.

No comments:

Post a Comment