கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, December 18, 2010

திமுக தனது தூய்மையை மெய்ப்பிக்கும்: கனிமொழி


2-ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக சி.பி.அய். விசாரணை நடத்தி வந்தா லும், தி.மு.க. - காங்கிரஸ் உறவில் எந்தச் சிக்கலும் இல்லை என்று கவிஞர் கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். 2-ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா வுக்கு நெருக்கமான பலரது வீடுகளிலும், கனிமொழி அறங்காவலராக உள்ள தமிழ் மய்யத்திலும், நக்கீரன் இணை ஆசிரியர் காமராஜர் வீடு உள்பட பல இடங்களி லும் சி.பி.அய். சோதனை மேற் கொண்டு வருகிறது.

கனிமொழி பேட்டி

இதுதொடர்பாக, கனிமொழி எம்.பி. செய்தியா ளர்களிடம் கூறியதாவது:-

2-ஜி ஸ்பெக்ட்ரம் விஷயத் தில், சி.பி.அய். நடத்தும் விசாரணையில், எங்கள் கட்சி (தி.மு.க.) சுத்தமானது என நிரூபித்து வெளியே வரும். இதனால், தி.மு.க. - காங்கிரஸ் உறவில் எந்தச் சிக்கலும் ஏற்படவில்லை. சட்டம் தனது கடமையை செய்யும். இது ஒரு நடை முறைதான். நிச்சயமாக நாங்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபித்து வெளியே வருவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு கனிமொழி எம்.பி. அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: இப்போது சி.பி.அய். நடத்தும் சோத னையால் தி.மு.க.-காங்கிரஸ் உறவில் விரிசல் எதுவும் ஏற்பட்டுள்ளதா?.

பதில்: எந்த விரிசலும் இல்லை. எந்தத்தவறும் நடக்கவில்லை என்று நாங்கள் நிரூபிப்போம்.

கேள்வி: சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு முக்கிய இடத்தை, உங்கள் தாயார் ராஜாத்தியம் மாளுக்கு சொந்தமான ராயல் எண்டர்பிரைசஸ் வாங்கி யுள்ளது என்று குற்றம் சாற்றப்படுகிறதே?.

பதில்: அந்த சொத்து சில பத்திரிகைகள் சொல்வது போல டாடா நிறுவனத்திற்கு சொந்தமானது அல்ல. தனியா ருக்கு சொந்த மானது. எங்கள் பர்னீச்சர் கடையில் முன்பு பணி யாற்றிய சரவணன் என்பவர் இடைத்தரகராக செயல் பட்டு, ஒரு மலேசிய வர்த்தக பிரமு கருக்கு விற்பனை செய்துள் ளார். இந்த பரிமாற்றத் துக்கும், எங்கள் குடும்பத் திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், எப்படி தொடர்புபடுத்துகிறார்கள் என்பது தெரியவில்லை.

கேள்வி: சி.பி.அய். சோதனை தி.மு.க.வை குறி வைத்து செய்யப்படுகிறதா?.

பதில்: இல்லை.. இல்லை... அப்படி இல்லை.

-இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், 2001ஆம் ஆண்டு முதல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக புலன் விசாரணை நடத்த வேண்டும் என்று சி.பி.அய்.-க்கு உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளதை வரவேற்றுள்ள கனிமொழி எம்.பி., இது மிகவும் நல்லது என்றும் கூறி யுள்ளார்.

No comments:

Post a Comment