முதல்வர் கருணாநிதி நேற்று (28.12.2010) வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜெயலலிதாவின் அறிக்கைகள் சிலவற்றை படிக்கும்போது, அவருக்கு ஏன் நீங்கள் பதில் சொல்கிறீர்கள் என்று கூட சிலபேர் என் னைக் கேட்கிறார்கள். கேட்பவர்கள் எழுதத் தெரிந்தவர்கள்தான். ஆனால், அவர்களே இது ஏன் வீண் வேலை என்று கருதுகிறார்கள் போலும். அதனால்தான் என்னைக் கேட்கிறார்கள். அது எப்படியோ போகட்டும். ஜெயலலிதாவின் அறிக்கைகள் சிலவற்றைப் படிக்கும்போது சிரிப்பை அடக்கிக் கொள்ள முடிவதில்லை.
ஜெ.யின் 26ம் தேதிய அறிக்கையில் 2001 - 2006 ஆட்சியில் ஒரு சிறு தவறு கூட நடைபெறாத தூய்மை யான ஆட்சியை நடத்தியதால் என் மீது பொய் வழக்குப் போட கருணாநிதிக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை என்ற வாசகங்களைப் படித்தபோது சிரிப்பு வராமல் என்ன செய்யும். ஒரு சிறு தவறுகூட நடை பெறாத தூய்மையான ஆட்சியாம். அதைப் படிக்கின்ற அ.தி.மு.க. ஆட்சியிலே பணியிழந்த மக்கள் நலப் பணியாளர்களும், சாலைப் பணியாளர்களும், பணி நீக்கம் செய்யப்பட்ட அரசு அலு வலர்களும், எஸ்மா, டெஸ்மா சட்டங்களுக்கு ஆளான தொழிலாளர்களும் தங்களுக்குள் என்ன நினைத் துக் கொள்வார்கள்.
தூய்மையான ஆட்சி நடத்தியிருக்கிறார்களாம். அதனால்தான் மார்க்சிஸ்ட் கட்சியினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு ஜெயலலிதா அணியில் நான் முந்தி, நீ முந்தி என்று யார் அவருக்கு Òமுந்திÓயாக இருப்பது என்று பந்தயம் கட்டிக் கொண்டு அணி திரளுகிறார்கள் போலும்.
முதல் அமைச்சராக ஜெ. பதவியேற்றுக் கொண் டதே தூய்மையற்ற ஆட்சிக்கு உதாரணமாக அமைந்தது. ஜெயலலிதாவை முதல் அமைச்சராக நியமித்தது சட்டப்படி செல்லாது என்று தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் 21.9.2001 அன்று உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.பி. பரூச்சா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் வழங்கிய ஒருமனதான தீர்ப்பில் Òதமிழக முதல்வராக ஜெயலலிதா நியமனம் செய்யப்பட்டது செல்லாது. அது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இனியும் அவர் முதல் அமைச்சராக நீடிக்க முடியாதுÓ என்று கூறிய பிறகுதான் ஜெயலலிதாவின் வழக்கறிஞரான கே.கே. வேணுகோபால், நீதிபதிகளிடம் மாற்று ஏற்பாடுகள் செய்வதற்கு சில நாட்கள் அவகாசம் தேவை யென்று கேட்டார்.
அதற்கு உச்சநீதிமன்ற நீதிபதி, முதல் அமைச்சர் இறந்தால் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்யப்படுகிறதே, இவ்வளவு பெரும்பான்மையைப் பெற்றிருக் கும் ஒரு கட்சி எந்த நேரத்திலும் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கலாமே என்று கூறினார்கள். இதுவும் ஒரு தூய்மையான ஆட்சிக்குக் கொடுக்கப்பட்ட சான்றிதழ்தானே? இதற்குப் பிறகுதான் இடைக்கால முதலமைச்சர் பதவி பன்னீருக்குக் கிடைத்தது.
சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த பரிதி இளம்வழுதி மீது கொலை முயற்சி உட்பட 5 பிரிவுகளில் போலீ சார் வழக்குப் பதிவு செய்த தோடு, 17.5.2001 அன்று கைது செய்து வேலூர் சிறை யில் அடைத்தனர். இது ஜெயா பதவியேற்ற மூன்றாம் நாளிலே செய்த தூய்மை யான ஆட்சி நிர்வாகம். 23.5.2001 அன்று பரிதியின் ஜாமீன் மனுவிலே உயர் நீதிமன்ற நீதிபதி கூறும் போது, பரிதி மீது புகார் கொடுத்தவரே, அவர் கொலை செய்து விடுவதாக மிரட்டவில்லை என்று கூறியுள்ளார்.
ஆனால் போலீசார் பரிதி மீது கொலை முயற்சி வழக்கைப் பதிவு செய்தது ஏன் என்று தெரியவில்லை என்று தெரிவித்தார். பரிதி இளம்வழுதி மட்டுமல்ல, ஆற்காடு வீராசாமியின் தம்பியை 26.5.2001 அன் றும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பரசுராமனை 27.5.2001 அன்றும், சட்டமன்ற உறுப்பினராக இருந்த புரசை ரங்கநாதனை 30.5.2001 அன்றும், சட்டமன்ற உறுப்பினராக இருந்த தாமரைக்கனி போன்றவர்களையும் கைது செய்தனர். ஏன் என்னையே 29.6.2001 அன்று நள்ளிரவில் வீடு புகுந்து படுக்கையறை வரை வந்து கைது செய்த சம்பவமும் நடைபெற்றது.
கைது செய்ததோடு விட்டார்களா? அதையொட்டி முரசொலி மாறனும், டி.ஆர். பாலுவும் தாக்கப்பட்டதோடு கைதும் செய்யப்பட்டார்கள். மு.க.ஸ்டா லினை கைது செய்து மதுரை சிறைச்சாலைக்குக் கொண்டு சென்றனர். மதுரையில் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், மு.க. அழகிரி போன்றவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டார்கள். இவையெல்லாம் ஜெ.யின் தூய்மையான ஆட்சிக்கான சான்றுகள்.
11.6.2001 அன்று ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் என்று கூறப்பட்ட சுதாகரனையே போலீசார் கைது செய்தனர். அதே ஜூன் திங்களில் என் மீது ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தூய்மையான ஆட்சிக்கு எடுத்துக்காட்டாக ஜெய லலிதா 2002ம் ஆண்டில் எந்தக் காரணமும் இல்லா மல் பத்தாயிரம் சாலைப் பணியாளர்களை இரவோடு இரவாக வீட்டிற்கு அனுப்பினார். இதனை எதிர்த்து சாலைப் பணியாளர்கள் உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், ‘‘ஒரு அரசு நல்ல வேலை வாய்ப்பு நிறுவனமாகத் திகழ வேண்டுமே தவிர, இது போல செயல்படக் கூடாது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்Ó என்றெல்லாம் தீர்ப்பு கூறப்பட்டது.
தமிழகத் தணிக்கைத் துறை அதிகாரி தீத்தன் என்பவர் 31.7.2004 அன்று அ.தி.மு.க. அரசின் தவறான அணுகுமுறையால் 11 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டது என்று அறிக்கை கொடுத்தார் என்பதற்காக, அந்தத் தணிக்கைத் துறை அதிகாரியை பதவி நீக்கம் செய்ய வழக்குத் தொடுத்ததோடு, அவருக்கு எதிராக ஏடுகளில் எல்லாம் முழுப் பக்க விளம்பரங்களும் தரப்பட்டன. அந்த ஜெயலலிதாதான் இப்போது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தணிக்கைத் துறை அதிகாரி கொடுத்த அறிக்கையை தலையிலே தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறார்.
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த எம்.கே.பாலன் சென்னை யில் 30.12.2001 அன்று கடத்திச் செல்லப்பட்டவர் பின்னர் கண்டுபிடிக்கப்படவே இல்லை. 2003ம் ஆண்டு மார்ச் மாதம் ஜெயலலிதா அரசு மின் கட்டணங்களை சுமார் 1400 கோடி ரூபாய் அளவிற்கு உயர்த்தியது. தி.மு.க ஆட்சி யில் வழங்கப்பட்டு வந்த இல வச மின்சாரத்தை அ.தி.மு.க. அரசு ரத்து செய்தது.
7.5.2002 அன்று பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்து சட்டப்பேரவையில் ஒரு மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. 30.01.2003 அன்று இந்த சட்ட முன் வடிவு அ.தி.மு.க. அரசினராலேயே திரும்பப் பெறப்பட்டது. இடையில் என்ன நடந்தது? தூய்மையான ஆட்சிக்குத்தான் வெளிச்சம்.
No comments:
Post a Comment