கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, December 26, 2010

இராசா திராவிடர் என்பதால் பார்ப்பன ஊடகங்கள் சுற்றிச் சுற்றி வருவதா? பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம் கி. வீரமணி கேள்வி


ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு, ஆர்.எஸ்.எஸ். தலைவர் வெடிகுண்டு வழக்கு இவைகளில் சிக்கியவர்கள் யார்? இதை ஊடகங்கள் பெரிதுபடுத்தினவா? இராசாவை மட்டும் குற்றம் சுமத்தி ஊடகங்கள் பெரிதுபடுத்தக் காரணம் இராசா திராவிடர் என்பதுதானே? என்று திராவி டர் கழகத் தலைவர் கி. வீரமணி கேள்வி எழுப்பி னார்.

தந்தை பெரியார் 37 ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம் 24.12.2010 அன்று காலை பெரியார் திடலில் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய நிறைவுரை வருமாறு:

தந்தை பெரியாருடைய நினைவு நாள் இன்று. இன்றைக்கும் பெரியார் தேவைப்படுகிறார். பார்ப் பன ஊடகங்கள் ஆரியர் - திராவிடர் போராட் டத்தை எப்படி இன்றைக்கும் நடத்திக் கொண்டி ருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழர்கள் என்று சொல்லுவதற்கு நான் சங்கடப் படுகின்றேன். ஏனென்றால், தமிழர்கள் என்ற பெய ரில் பார்ப்பனரும் சேர்ந்து நானும் தமிழன்தான் என்று வரக்கூடிய நிலையில் இருக்கிறார்கள்.

திராவிட உணர்வு

எனவே, திராவிடர் என்ற உணர்வை தந்தை பெரியார் அவர்கள் மக்களிடம் பரப்பினார். திரா விடர் கழகம் என்றே அதற்குப் பெயரிட்டார். தொலைந்து போன நம்முடைய அடையாளத்தை மீட்டெடுத்தார் தந்தை பெரியார்.
இந்த உணர்வை இன்னும் பல தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டிய மகத்தான கடமை நமக் கெல்லாம் உண்டு. 1925 ஆம் ஆண்டுதான் சுயமரி யாதை இயக்கம் தொடங்கியது. 1925 ஆம் ஆண்டு தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தோன்றியது. சுய மரியாதை இயக்கத்திற்கு நேர் எதிரிடையான அமைப்புதான். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மதவெறித்தனம் இன்றைக்கு கொடி கட்டிப் பறக்கிறது.
ஒட்டகம் கூடாரத்திற்குள் நுழைந்தால் அது தனக்கே என்று சொல்லக் கூடிய அளவில் வந்து, இந்த நாட்டு மக்களை ஏமாற்றி, மதவெறியை மூல தனமாக வைத்து பி.ஜே.பி. கட்சி மத்தியிலே ஆண்டது.

ஜெயலலிதாவுக்குப் பிரதமர் என்று நினைப்பா?

இனிமேல் நாம்தான். எல்லாம் நாம்தான். வரலாற்றைப் புரட்டிப் போடலாம். அரசியலை நாம் தான் நிர்ணயிப்போம் என்ற ஆணவத்தோடு இருந்த ஆரிய சக்திகளின் இயக்கமாகத்தான் ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி. இருந்தது. அந்த மதவெறி சக்தியை தோற் கடித்து மத்தியிலே காங்கிரஸ் ஆட்சி இருக்கிறது. தமிழகத்திலே கலைஞர் தலைமையிலே ஆட்சி நடைபெறுகிறது.
இங்கே எதிர்கட்சித் தலைவியாக இருக்கின்ற ஜெயலலிதா இராசாவை விசாரித்தால் போதாது; கைது செய்ய வேண்டும் என்று சொல்லுகின்றார். இவர் என்ன பிரதமர் ஸ்தானத்தில் இருக்கிறோம் என்ற நினைப்பா? (கைதட்டல்) அல்லது அதி காரத்தில் இருக்கிறோம் என்ற நினைப்பா? இந்த அம்மையாருக்கு அறிவு நாணயம் உண்டா?
ஜெயலலிதா மீது சி.பி.அய். வழக்கு 10 ஆண்டு களாக நடந்துகொண்டு இருக்கிறது (கைதட்டல்).
இராசா மீது யூகத்தின் அடிப்படையிலே குற்றச் சாற்று சொல்லுகிறார்கள்.
இந்த அம்மையார் முதலமைச்சராக இருக்கும் பொழுது வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது. அப்படி பணம் வந்தால் ஒரு முதலமைச்சர் என்ன செய்ய வேண்டும்? அரசாங்க கஜானாவிற்கு அனுப்ப வேண்டும். இந்தப் பணத்தை யார் அனுப்பினார்கள் என்று தீர விசாரிக்க வேண்டும்.
அதை விட்டு, விட்டு யார் அனுப்பினார்கள் என்று தெரியவில்லை என்று சொல்லி தன்னுடைய கணக்கிலே வெளிநாட்டுப் பணத்தை வரவு வைத் துக் கொண்டார்.

யோக்கியன் வருகிறான் சொம்பைத் தூக்கி உள்ளே வை!

பெரியார் ஒரு பழமொழி சொல்லுவார்: யோக் கியன் வருகிறான்; சொம்பைத் தூக்கி உள்ளே வை என்று சொல்வார் (சிரிப்பு - கைதட்டல்).
இராசாவை கைது செய்ய வேண்டும் என்று இந்த அம்மையார் சொல்லுகிறார். இராசாவை கைது செய்ய முகாந்திரம் வேண்டும் வழக்குபடி. வழக்கில் முகாந்திரம் இருந்தால்தானே கைது செய்ய முடியும்? இதோ இங்கே வழக்கறிஞர்கள் உட்கார்ந் திருக்கிறார்கள். நீதிபதிகள் உட்கார்ந்திருக்கிறார்கள்.

இது என்ன, இடிஅமீன் ஆட்சியா?

எதுவும் சட்டப்படிதான் செய்ய முடியும். உடனே கைது செய்ய வேண்டும் என்றால் இது என்ன இடி அமீன் ஆட்சியா? அல்லது சர்வாதிகார ஆட்சியா?
சரி, இந்த அம்மையார் வழிகாட்டியிருக்கின் றாரா? இந்த அம்மையாருக்கு சி.பி.அய்.சம்மன். அனுப்பியிருக்கிறதே, அதற்காக இந்த அம்மை யாரைக் கைது செய்திருக்கிறார்களா? 30 வாய்தா வுக்கு மேலே இவருக்கு வழங்கியிருப்பதாலே முத லிலே ஜெயலலிதாவை அல்லவா சி.பி.அய். கைது செய்திருக்க வேண்டும்? (கைதட்டல்). எந்த பத்திரி கைக்காரராவது இதை எழுதியிருக்கிறாரா?
காரணம் என்ன? முதுகில் பூணூல், அவ்வளவு தான். எனவேதான் சொல்லுகிறோம், இந்த நாட் டிலே மீண்டும் மனுதர்மத்தைத் துளிர்க்க விட மாட்டோம். குழி தோண்டிப் புதைப்போம். இந்த அம்மாவே சி.பி.அய். என்ன வானத்திலிருந்து குதித்ததா? என்று கேட்டவர்தானே!
ஒரே ஒரு காரணம் இராசா திராவிடர் இனத் தைச் சார்ந்தவர். அது மட்டுமல்ல; ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சார்ந்தவர். எனவே, அவருக்காகக் கேட்க நாதியில்லை என்ற நினைப்பு!

சி.பி.அய்.யிடம் சிக்கிய ஆர்.எஸ்.எஸ். தலைவர்

இந்தக் கூட்டத்தில் இருக்கிறவர்களுக்குச் சொல்லுகின்றேன். ஒரு ஆர்.எஸ்.எஸ். தலைவரை சி.பி.அய். பல மணி நேரம் குடை, குடை என்று குடைந்திருக்கிறது. ஆனால், இந்த சி.பி.அய்களைத் தாண்டி வரக்கூடிய ஆற்றல் இராசாவுக்கு உண்டு (கைதட்டல்). காரணம், அவர் பயின்ற பள்ளிக் கூடம் திராவிடர் இயக்கத்துப் பள்ளிக்கூடம். பெரியார், அண்ணா, கலைஞர் பள்ளியிலே பயின்றவர் (கைதட்டல்)..
ஆர்.எஸ்.எஸ். தலைவரை பல மணி நேரம் சி.பி.அய் குடைந்து கேள்வி எழுப்பியும், அவர் நேரடியாக எந்தப் பதிலையும் சொல்லவில்லை என்று சாதாரணமாக ஒரு செய்தியை வெளியிட்டி ருக்கின்றார்கள்.
இதுபற்றி பெரிதுபடுத்தி யாராவது செய்தி சொல்லியிருக்கின்றார்களா?
சூத்திரனுக்கு ஒரு நீதி; தண்டச் சோறுண்ணுப் பார்ப்புக்கொரு நீதி சாத்திரம் சொல்லிடுமாயின் அது சாத்திரம் அன்று, சதி எனக் கண்டோம் என்று பார்ப்பனப் பாரதி பாடியிருக்கின்றாரே. பார்ப்பன பாரதிக்கே பொறுக்க முடியாமல்தானே சொல்லயிருக்கின்றார்.
அய்தராபாத் மெக்கா மசூதியில் வெடிவிபத்து வழக்கில் இந்த ஆர்.எஸ்.எஸ் தலைவருக்குப் பங்கு இருக்கிறது என்று ஆதாரத்துடன் கேட்கிறார்கள். இது பயங்கரவாதத்தைச் சேர்ந்தது. இராசா வழக்கு பயங்கரவாதத்தைச் சேர்ந்ததா?

சி.பி.அய். வழக்கில் சொல்வதென்ன?

இவ்வளவு இழப்பு நடந்திருந்தால் என்று தானே ஸ்பெக்ட்ரம் வழக்கிலே சொல்லுகிறார்கள்.
மக்களிடம் இதைச் சொல்ல வேண்டும். ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி அடுக்கி வைத்துக் காட்டினால் எப்படியிருக்கும் என்று சொன்னால் போதுமா? ஆனால், சி.பி.அய். வழக்கிலேயே வெறும் 22 ஆயிரம் கோடி என்றுதான் போட்டிருக்கின் றார்கள்.
ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடியில் 22 ஆயிரம் கோடியை கழித்து விட்டால், ஒரு லட்சத்து 54 ஆயிரம் கோடி புஸ் என்று போய்விட்டது. அனுமான இழப்பு - கற்பனையிலேயே இந்த நிலை.
எவ்வளவு நாளைக்கு இப்படியே சொல்லிக் கொண்டிருப்பீர்கள்? பார்ப்பன ஊடகங்கள் உங்கள் கைகளிலே இருக்கிறது.
இராசாவை நெருங்கி விட்டார்கள். கோபால புரம் திக் திக். என்ன திக் திக். திக் திக் என்று வேறு இடத்தில் இருப்பவர்களுக்குத்தான் இருக் கிறது (சிரிப்பு கைதட்டல்).
இன்றைய விடுதலையில் இதைப்பற்றி எழுதி யிருக்கின்றோம்.

நெருக்கடி காலத்தையே சந்தித்தவர்கள்

நெருக்கடி காலத்தைவிட மோசமான காலம் இனிமேல் வரப்போவதில்லை. அதைச் சந்தித்த இடம் தான் கோபாலபுரம். அதைச் சந்தித்த இடம்தான் பெரியார் திடல்.
மக்கள் குரல் என்ற அய்யங்கார் பத்திரிகையில் எழுதினார்கள். அன்னை மணியம்மையார் பெரியார் திடலில் இருக்கின்றார். பெரியார் திட லுக்கு வெளியே நோட்டீஸ் ஒட்டுகிறார்கள்.
இந்தச் சொத்துகள் ஜப்தி செய்யப்படும் என்று சொன்னார்கள். ஏன், பெரியார் திடலுக்கு வருமான வரித்துறையினர் சென்றார்கள் என்றால், கருணாநிதி யின் கருப்புப் பணம் அங்கேதான் உள்ளே இருக்கிறது என்று சொன்னார்கள்.

கலைஞரின் பொற்கால ஆட்சி

நாங்கள் கேட்டோம். எங்ககிட்ட ஏதய்யா கருப்புப் பணம்? அவ்வளவு கொச்சைப்படுத்தினார்கள்; அவ்வளவு கேவலப்படுத்தினார்கள். அதைத் தாண்டி கலைஞர் அவர்கள் இன்றைக்கு அய்ந்தாவது முறையாக பொற்கால ஆட்சியை நடத்துகிறாரா? இல்லையா?

ஆறாவது முறையாகவும் கலைஞர் வருவது உறுதி

மீண்டும் ஆறாவது முறையாக அவர்தான் முதலமைச்சராக வரப்போகின்றார். உறுதியாகத் தெரிந்து போய் விட்டது. மக்கள் தயாராகிவிட் டார்கள். பார்ப்பனர்களே நீங்கள் என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் மீண்டும் ஆறாவது முறையாக அமையப் போவது கலைஞர் ஆட்சி தான். நீங்கள் எவ்வளவு அதிகமாக இந்தப் பிரச் சாரத்தைச் செய்கிறீர்களோ அடிக்க அடிக்க எழும் பந்து போல மக்கள் மனுதர்மத்தை - ஆரியத்தை குழி தோண்டிப் புதைப்பார்கள்.
மீண்டும் வரப்போவது கலைஞர் ஆட்சிதான், திராவிடர் ஆட்சிதான் என்ற சூளுரையைப் பெரியார் நினைவு நாளில் எடுத்துக் கொள்வோம். பார்ப்பன ஊடகங்களே! நீங்கள் திராவிடர் இனத் தின் மீது வீசுகின்ற குப்பைகள், கூளங்கள், மலங்கள், சேறுகள் எல்லாம் எங்கள் கொள்கை வயலுக்கு இட்ட உரங்கள், உரங்கள் என்று கூறி முடிக்கிறேன்.

இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி உரையாற்றினார்.

No comments:

Post a Comment