கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, December 26, 2010

தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களை செயல்படுத்துக! - முதலமைச்சர் கலைஞர் வேண்டுகோள்


தமிழகத்திற்காக ரயில்வே நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட ரயில் பாதைத் திட்டங்களை மத்திய அரசு விரைவாக நிறைவேற்ற ஆவன செய்ய வேண்டும் என்று சென் னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் நாகப் பட்டினம் - வேளாங்கண்ணி இடையேயான அகல ரயில் பாதை போக்குவரத்தை 20.12.2010 அன்று துவக்கி வைத்து உரை யாற்றுகையில் முதல்வர் கலைஞர் அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்.

காணொலிக் காட்சி வாயிலாக நாகப்பட்டினம் - வேளாங்கண்ணி புதிய அகல இரயில் பாதையைத் தொடங்கி வைத்து முதல்வர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:-

நாகப்பட்டினம் - வேளாங்கண்ணி இடையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதை யையும், ரயில் போக்குவரத்தினையும் காணொலிக் காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

1935 ஆம் ஆண்டுக்கு முன்பாகவே திருச்சி- நாகூர் இடையே, தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் வழியாக, ஏறத்தாழ 135 கிலோ மீட்டர் நீளமுள்ள ஓர் அகல ரயில்பாதை இருந்தது. எனினும், அருகிலுள்ள இருப்புப்பாதைகள் அகல ரயில்பாதைகளாக அல் லாமல் மீட்டர் கேஜ் பாதைகளாக இருந்ததால், இரண்டாம் உலகப் போரின்போது, அந்த இருப்புப் பாதையும் மீட்டர் கேஜ் இருப்புப் பாதையாக மாற்றி அமைக்கப்பட்டது. அந்த இருப்புப்பாதை அமைந்துள்ள கிழக்குக் கடற்கரைப் பகுதியில் நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய இரண்டு ரயில் நிலையங்களும் இந்து, முஸ்லிம், கிறித்துவ மதங்களைச் சார்ந்த மக்கள் பலர் அடிக்கடி வந்து செல்லக்கூடிய முக்கிய ரயில் நிலையங்களாகத் திகழ்கின்றன.

2002 ஆம் ஆண்டிலேயே அனுமதி

நாடு முழுவதிலுமுள்ள இருப்புப்பாதைகள் அனைத் தும் அகல ரயில் பாதைகளாக அமைக்கப் பட வேண்டும் என்னும் மத்திய அரசின் கொள்கை யின்படி, தமிழக அரசு மேற்கொண்ட தொடர் முயற்சிகள் காரணமாக 2006-க்குப்பின், விருதுநகர்- இராஜபாளையம்-தென்காசி; விருத்தாச்சலம்- வடலூர்- கடலூர்; விழுப்புரம்-பாண்டிச்சேரி; மதுரை- மானாமதுரை; தஞ்சாவூர்- கும்பகோணம்- மயிலாடுதுறை- விழுப்புரம்; திருச்சிராப்பள்ளி- புதுக்கோட்டை ஆகிய மீட்டர்கேஜ் ரயில் பாதை கள் அகல ரயில் பாதைகளாக மாற்றப்பட்டு ரயில் போக்கு வரத்துகள் நடைபெற்று வருகின்றன.

அதேபோல, நாகப்பட்டினம் வழியாக திருச்சியில் இருந்து நாகூர்வரை செல்லும் இருப்புப்பாதையும் ஏற்கெனவே அகல ரயில்பாதையாக மாற்றப்பட் டுள்ளது. இம்மார்க்கத்தில் காரைக் கால், வேளாங்கண்ணி ஆகிய நகரங் களுக்கு வந்துபோகும் பயணி களுக்கு தற்போது நாகப்பட்டினம், நாகூர் ஆகிய ரயில் நிலையங்கள் பெரிதும் உதவியாக அமைந்திருக்கின்றன. எனி னும், வளர்ந்துவரும் இந்நகரங்களின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, நாகப்பட்டினம் முதல் வேளாங் கண்ணி வரை 10 கிலோ மீட்டர் நீள மும், நாகப்பட்டினம் முதல் காரைக் கால் வரை 10 கிலோ மீட்டர் நீளமும் இரண்டு புதிய அகல ரயில் பாதை களை அமைத்திட 2002ஆம் ஆண்டி லேயே மத்திய அரசு அனுமதி வழங்கியது.

ஆயினும், இத்திட்டத்திற்கான நில எடுப்புப் பணிகளில் நிலவிய மந்த நிலையை 2006 மே திங்களில் அமைந்த இந்த அரசு அகற்றி, விரைவுபடுத்திய தன் காரணமாக, இந்தப் புதிய ரயில் பாதை அமைப்பதற்கான நில எடுப்புப் பணிகள் நிறைவ டைந்து, 2008 ஆம் ஆண்டில் இந்த இருப்புப்பாதை அமைக் கும் பணி தொடங்கியது. அப்பணிகள் முழுவதும் நிறைவேற்றப்பட்டு முடி வடைந்துள்ள நிலையில் இன்று ரயில் போக்குவரத்திற்குத் திறந்து விடப்படு கிறது. மொத்தம் 58 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இத்திட்டத்தை நிறை வேற்றுவதில் மிகுந்த ஆர்வம் கொண் டிருந்த வேளாங்கண்ணி மாதா கோயில் நிருவாகம், இத்திட்டத்திற் காக ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கி யுள்ளது என்பது குறிப்பிடத்தக்க தாகும். வேளாங்கண்ணி பகுதி, அங்கு அமைந்துள்ள வேளாங்கண்ணி மாதா கோவில் காரணமாக முக்கியத்துவம் பெற்றுள்ளதால், அதனைப் புலப் படுத்தும் வகையில் வேளாங்கண்ணி ரயில் நிலையத்தின் கட்டட அமைப்பு, அக்கோவில் கட்டடக் கலை அமைப் பிலேயே கட்டப்பட்டுள்ளது. நாகூர் - காரைக்கால் புதிய ரயில்பாதை விரை வாக நிறைவேறுகிறது

இத்திட்டத்தைத் தொடர்ந்து, நாகூர் - காரைக்கால் புதிய இருப்புப் பாதைத் திட்டமும் 90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மிக விரைவாக நிறை வேற்றப்பட்டு வருகிறது. அத்திட்டப் பணிகள் இரண்டொரு மாதங்களில் முடிவடையவுள்ளன. எனினும், இத் திட்டத்தின் ஒரு பகுதியாக, நாகூரி லிருந்து-காரைக்கால் துறைமுகம் வரையுள்ள ஒரு கிலோ மீட்டருக்குக் குறைவான பகுதியில் அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு 27.1.2010 அன்று போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதன்மூலம், காரைக்கால் துறைமுகத்தில் இருந்து, நாடு முழு வதற்கும் சரக்குகளைக் கொண்டு செல்லும் வசதி ஏற்பட் டுள்ளது.

மேலும் தமிழக அரசு மத்திய அரசுக்கு அளித்த கோரிக்கையின் அடிப்படையில், திருக்குவளை வழி யாக நாகப்பட்டினம் முதல் திருத் துறைப்பூண்டி வரை 35 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய அகல ரயில் பாதை அமைப்பதற்கான ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளதாக மத்திய ரயில்வே துறை

இணை அமைச்சர் 25.1.2010 அன்று தமிழக அரசுக்குக் கடிதம் எழுதினார். அதனைத் தொடர்ந்து, இப் பாதை அமைப்பதற்கான நில எடுப்பு, நில மாற்றம் செய்தல் போன்ற பணி களுக்குத் தமிழக அரசு ஆணைகளை வழங்கி, விரைவாக நடவடிக்கை களை மேற்கொண்டுள்ளது. வேளாங் கண்ணி, நாகூர் தர்கா ஆகிய இடங் களுக்கு நாடு முழுவதிலும் இருந்து மக்கள் வந்து செல்கின்றார்கள். நீடாமங்கலம், திருவாரூர் ஆகிய நகரங்கள் நெல் வர்த்தகத்தின் முக்கிய மய்யங்களாகத் திகழ்கின்றன. நாகூரில் சென்னை பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தின் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றும் அமைந்துள்ளது. எனவே திரு வாரூர், நாகப்பட்டினம், வேளாங் கண்ணி, நாகூர், காரைக்கால் ஆகிய பகுதிகள் அகல ரயில்பாதை வசதி களுடன் இணைக்கப்படுவது பயணி கள் போக்குவரத்திற்கும், சரக்குகள் போக்குவரத்திற்கும் பெரிதும் உறு துணையாக அமையும்.

இப்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கும், சுற்றுலாத்துறை வளர்ச் சிக்கும் மிகவும் உதவிகரமாக விளங் கும் எனக்கூறி இத்திட்டத்தை நிறை வேற்றுவதற்குத் துணைபுரிந்த அனை வருக்கும் தமிழக அரசின் சார்பில் எனது நன்றியையும், பாராட்டு களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சிறப்புவாய்ந்த விழாவில் - ஏற்கெனவே மத்திய ரயில்வே நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டு இன்னும் தொடங்கப்படாமல் உள்ள சில திட்டங்களை நினைவுபடுத்திட விரும்புகிறேன். அதாவது, அத்திப் பட்டு- புத்தூர், ஈரோடு-பழனி, மாமல்லபுரம் வழியாக சென்னை- கடலூர் -ஆகிய புதிய ரயில்பாதைத் திட்டங்கள், மதுரை-போடிநாயக் கனூர் மீட்டர்கேஜ் பாதையை அகல ரயில்பாதையாக மாற்றும் திட்டம், சென்னை-கடற்கரை கொருக்குப் பேட்டை இடையில் மூன்றாவது ரயில் பாதை அமைக்கும் திட்டம், சென்னைக் கடற்கரை - அத்திப்பட்டு இடையில் நான்காவது ரயில்பாதை அமைக்கும் திட்டம், திருவள்ளூர் - அரக்கோணம் இடையில் நான்காவது ரயில்பாதை அமைக்கும் திட்டம் ஆகியவற்றுடன், விழுப்புரம்-திண் டுக்கல் இடையில் இரட்டை ரயில் பாதைகள் மற்றும் மின்மயமாக்குதல் திட்டம் ஆகிய திட்டங்கள் ரயில்வே பட்ஜெட்டில் ஏற்கெனவே அறிவிக் கப்பட்டும்கூட, இதுவரை எதிர் பார்ப்பிற்கு ஏற்ப தொடங்கப் படவில்லை என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அதேபோல, பணிகள் தொடங்கப்பட்டுள்ள திட்டங்களில், திண்டிவனம்-செஞ்சி-திருவண்ணா மலை, திண்டிவனம்-நகரி ஆகிய புதிய ரயில்பாதைகள்; மானா மதுரை-விருதுநகர், திண்டுக்கல்-பொள்ளாச்சி - பாலக்காடு -கோயம்புத்தூர், மயி லாடுதுறை- திருவாருர்- காரைக்குடி-திருத்துறைப்பூண்டி -ஆகிய மீட்டர் கேஜ் பாதைகளை அகல ரயில் பாதை களாக ஆக்கும் திட்டம் செங்கல் பட்டு- விழுப்புரம் இடையே இரட்டை ரயில் பாதைகள் அமைக் கும் திட்டம் ஆகிய திட்டங்கள் மிகவும் மந்தகதியில் செயல்பட்டு வருகின்றன என்பதனைச் சுட்டிக் காட்டிட கடமைப்பட்டிருக்கிறேன்.

நிதி ஒதுக்கீடுகள் செய்க!

இத்திட்டங்களுக்கெல்லாம் தேவையான நிதி ஒதுக்கீடுகள் செய்து இவற்றை விரைவாகச் செயல்படுத்திட மத்திய பேரரசு ஆவன செய்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள் கிறேன். இத்துடன் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள நாகப்பட்டினம் வேளாங்கண்ணி புதிய அகல ரயில் பாதைத் திட்டம் வெற்றி பெற மீண்டும் என் வாழ்த்துகளைத் தெரி வித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.

No comments:

Post a Comment