கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, December 11, 2010

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பிரச்னையில் பழி சுமத்துவதாலேயே ஒருவர் குற்றவாளி ஆகி விட முடியாது - முதல்வர் கருணாநிதி அறிக்கை


முதல்வர் கருணாநிதி 06.12.2010 அன்று வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கை:
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்துகிற இயக்கம் தி.மு.க. அம்பேத்கர் நினைவைப் போற்றும் வகை யில் அரசின் சார்பில் செய்யப்பட்டுள்ள சாதனைகள் ஒரு சிலவற்றைக் கூற முடியுமா?
1972ம் ஆண்டிலேயே வியாசர்பாடியில் அம்பேத் கர் பெயரில் புதிய கலைக் கல்லூரி, மயிலாப்பூர் ஹாமில்டன் பாலத்திற்கு அம்பேத்கர் பெயர், 1989ம் ஆண்டில் அம்பேத்கர் பிறந்த மராட்டிய மாநிலத்தில் உள்ள மரத்துவாடா பல்கலைக்கழகத்திற்கு Òஅம்பேத்கர் பல் கலைக் கழகம்Ó எனப் பெய ரிட போராட்டம் நடந்தபோது, திமுக சார்பில் மராட்டிய மாநில ஆளுநருக்கு ஆயிரக்கணக்கான தந்திகள், 1990ல் அம்பேத்கர் நூற்றாண்டு விழா, சென்னை சட்டக் கல்லூரிக்கு அம்பேத்கர் பெயர், 20&9&1997ல் அம்பேத்கர் பெயரில் சென்னை யில் முதல் சட்டப் பல்கலைக்கழகம். Òஅம்பேத்கர்Ó திரைப்படம் தமிழில் வெளியிட்டமைக்காக ரூ. 10 லட்சத்துக்கான காசோலை. 1997ல் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 25 லட்சம் ரூபாயில் அம்பேத்கர் பெயரில் கல்வி அறக்கட்டளை, அதிலிருந்து வரும் வட்டித் தொகையில் ஆதிதிராவிட மாணவ, மாணவியர்க்குப் படிப்பு உதவி வழங்கப்படுகின்றன.
அம்பேத்கர் போற்றிய லட்சியமான சமத்துவம், சகோதரத்துவம் தழைத்திட தலித் மக்கள் உள்ளிட்ட அனைத்துச் சாதியினரும் ஒரே இடத்தில் இணக்கத் தோடு வாழ்ந்திட பெரியார் நினைவு சமத்துவபுரங்கள். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரின் முன்னேற்றத்திற்குப் பாடுபடும் ஒருவருக்கு ஆண்டுதோறும் அம்பேத்கர் பெயரில் விருது, ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழி வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.
1998ல் திமுக ஆட்சியில் 4 கோடி ரூபாய் செலவில் அம்பேத்கர் மணி மண்டபத்தைக் கட்டி 10&6&2000 அன்று திறந்து வைக்கப்பட்டது. அம்பேத்கர் வருகை தந்த இடத்தில் அவருடைய நினைவாக 42 லட்சம் ரூபாய்ச் செலவில் புதிய பூங்கா, உயர் நீதிமன்ற வளாகத்தில் 21&4&2010 அன்று அம்பேத்கர் சிலை திறப்பு (அரசின் சார்பில் 20 லட்ச ரூபாய் நிதி உதவி) என்று தொடர்ந்து அம்பேத்கர் புகழைப் பரப்பும் முயற்சியில் திமுக அரசு ஈடுபட்டு வருகிறது.
இவ்வளவு செய்ததோடு, அவர் எந்த தலித் சமுதாய முன்னேற்றத்திற்காக பாடுபட்டாரோ, அதை புரிந்து கொண்டு, திமுக அரசு செய்த சாதனைகள் சிலவற்றையும் குறிப்பிட விரும்புகிறேன்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கல்வியிலும், வேலை வாய்ப்புகளி லும் 16% இட ஒதுக்கீட்டினை 1971ல் திமுக அரசுதான் 18% உயர்த்தியது. மீண்டும் 1990ல் திமுக ஆட்சியிலே தான் பொது ஒதுக்கீட்டிலிருந்து ஒரு விழுக்காடு எடுத்து, பழங்குடியினருக்கு மட்டும் தனியே ஒரு விழுக்காடு என் றும், ஆதி திராவிடர்களுக்கு மட்டும் 18 விழுக்காடு என்றும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
ஆதிதிராவிட மக்களின் கல்வி மேம்பாட்டிற்காக அரும்பாடுபட்ட சுவாமி சகஜானந்தாவின் நு£ற் றாண்டு விழா 1990ல் திமுக ஆட்சியில் கொண்டாடப்பட்டதோடு, சிதம்பரம் நந்த னார் பள்ளி விடுதி வளாகத்தில் சுவாமி சகஜானந்தா பெயரில் சமூகக் கலையரங்கம் கட்டப்பட்டது.
மதுரையில் தியாகி கக்கன் சிலையை 31&8&1997ல் நான் திறந்து வைத்ததோடு, அவர் பிறந்த தும்பைப் பட்டியில் அவர் பெயரால் நினைவு மண்டபம் ஒன்றும் எழுப்பியிருக்கிறேன்.
கட்டபொம்மனின் தளபதிகளில் ஒருவராக விளங் கிய ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த வீரன் சுந்தரலிங்கம் வாரிசுகளுக்கு கவர்னகிரியில் வீடுகளைக் கட்டிக்கொடுத்து, வீரன் சுந்தரலிங்கம் நகர் என்று பெயர் சூட்டப்பட்டது.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலிருந்து என் மகன் மு.க. அழகிரிக்கு பெண் எடுத்தது மட்டுமல்ல, என் பேத்தியை அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த மணமகனுக்கு மணம் முடித்துக் கொடுத்திருக்கிறேன். தமிழக அமைச்சரவையில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலிருந்த ஒருவரை மட்டுமே நியமித் துக் கொண்டிருந்த முறையை மாற்றி என்னுடைய அமைச்சரவையில்தான் ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த இரண்டு பேரை அமைச்சர்களாக நியமித்ததோடு, அருந்ததிய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை பேரவைத் துணைத் தலைவராகவும் நியமித்தேன்.
இவைகள் தவிர தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்விச் சலுகைகள், விடுதிகள், திருமண நிதி உதவிகள் என்று பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருவதை அவர்களே அறிவார்கள்.
முருங்கை மரம் இருந்தால் இலவச மின்சாரம் கிடையாது என்று அதிகாரிகள் திடீர் நிபந்தனை விதித்திருப்பதாக நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளதே?
நெல், கரும்பு போன்ற பயிர்களைச் சாகுபடி செய் யும் விவசாயிகளுக்கு திமுக அரசின் சார்பில் இலவச மின்சாரம் அளிக்கப்படுகிறதே தவிர, முருங்கை, கொய்யா, சப்போட்டா, முந்திரி போன்ற தோட்டக் கலை பயிர்களுக்கு எந்தக் காலத்திலும் இலவச மின்சாரம் அளிப்பதில்லை. இந்த உண்மையை புரிந்து கொள்ளாமல், திடீரென்று ஏதோ அதிகாரிகள் இந்த ஆட்சியிலே இலவச மின்சாரம் வழங்க முருங்கை வளர்க்கக் கூடாது என்று நிபந்தனை விதித்திருப்பதைப் போல செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்.
சென்னை விமான நிலையத்தில் அ.தி.மு.க. தலைவிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு எதற்காக?
கோடநாட்டில் இத் தனை நாட்கள் ஓய்வெடுத் துக் கொண்ட நிலையிலேயே, அன்றாடம் விடாமல் அவர் கைப்படவே அறிக்கைகளை தொடர்ந்து எழுதி, எந்தெந்த கிராமத்தில் குடிதண்ணீர் வரவில்லை, சாலைகளிலே பழுது உள்ளது என்பதை கண்டறிந்து, அதற்காக தொண்டர்களை அனுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காகப் பாராட்டி வரவேற்பு கொடுத்திருக்கலாம்.
ஆனால், அது அவர்க ளுடைய உள்கட்சி பிரச்னை. ஆனால் வந்ததும் வராததுமாக மத்திய அரசு ஸ்பெக்ட்ரம் பிரச்னைக்காக ஆ.ராசாவை இன்னும் கைது செய்யவில்லையே என்று கேட்டிருக்கிறார். அ.தி.மு.க. ஆட்சியில் அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசிலே அமைச்சராக இருந்து, பின்னர் ஜெயலலிதா ஆணையின் பேரில் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த போது, அவர்களை மத்திய அரசு கைது செய்ய வேண்டுமென்றா ஜெயா கூறினார்?
ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் ஒரு லட்சத்து 76,000 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று விட்டதாக பத்திரிகைகள் தானே பூதாகாரமாக ஆக்குகின்றன?
உண்மைதான். ஒரு சில பத்திரிகைகளும், ஒருசில எதிர்க்கட்சிக்காரர்களும் தான் பூதாகாரமாக இந்தப் பிரச்னையை ஆக்கி, ஒரு லட்சத்து 76,000 கோடி ரூபாயை ஏதோ ஒரு தனிப்பட்ட நபர் அப்படியே அவ ருடைய வீட்டிற்குத் து£க்கிக் கொண்டு போய் விட்டதைப் போலவும், அந்தத் தொகையை ஒருசிலர் பங்கிட்டுக் கொண்டதைப் போலவும், அதற்காக பாராளுமன்றத் தையே நடத்தவிட மாட் டோம் என்றும் பேசினார்கள், எழுதினார்கள்.
ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் என்ன நடைபெற்றது என்ற விவரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்கலாம் என்று ஆளுங்கட்சி சார்பிலே பலமுறை அழைத்தபோதும், விடாமல் கூட்டுக்குழுவே தேவையென்று விடாப்பிடியாக அவையை நடத்த முடியாமல் செய்தார்கள்.
தணிக்கைத் துறை அதிகாரியின் அறிக்கையிலே கூட அரசுக்கு ஒரு லட்சத்து 76,000 கோடி ரூபாய் அலைக் கற்றை ஒதுக்கீட்டின் கார ணமாக இழப்பு ஏற்பட்டுள் ளது என்றும், ஆனால் இந்தத் தொகை உத்தேசமாகக் கணக் கிடப்பட்டதாகும் என்றும் தான் உள்ளது. நட்டத் தொகை விரைவில் துல்லியமாக கணக்கிடப்படும் என்றும் தற்போது அந்தத் துறையின் பொறுப்பை ஏற்றுள்ள கபில்சிபல் சொல்லியிருக்கிறார்.
மேலும், கபில்சிபல் தனது பேட்டியில், Òஅலைக்கற்றை உரிமம் பெறுவதற்காக தவறான தகவல்கள் அளித்த நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும். அதுபோல் ஒதுக்கீட்டை பெற்று அதைப் பயன்படுத்தாமல் இருக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்Ó என்றும் சொல்லியிருக்கிறார். இவ் வாறு செய்தால், தற்போது அரசுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் இழப்புத் தொகை கணிசமாகக் குறைவதற்கு வழி உள்ளது.
இழப்புக்கு அந்தத் துறை அமைச்சராக இருந்த ராசா மட்டுமே காரணம் என்று ஒரு சிலர் தங்களுக்குள்ள உள்நோக்கம் காரணமாக குற்றஞ்சாட்டிய போதிலும், ஆங்கில நாளேடு ஒன்று, Òமத்திய அரசில் தொழில் நுணுக்கம் நன்கறிந்த உயர் அதிகாரிகளின் பற்றாக்குறையால் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள இழப்பிற்கு அமைச்சரை குறை கூறுவதில் அர்த்தம் இல்லைÓ என்று எழுதியிருக்கிறது. சி.பி.ஐ., மற்றும் அமலாக்கப் பிரிவு விசாரணை முடியாமல், தீர்ப்பும் வராத நிலையில் அவசரப்பட்டு குற்றம் கூறுவதாகவும் அந்த பத்திரிகை எழுதியுள்ளது.
Òகண்ணால் கண்டதும் பொய், காதால் கேட்டதும் பொய், உண்மையை தீர விசா ரிப்பதே மெய்Ó என்பதற்கேற்ப ஒரு பொய்யைத் திரும் பத் திரும்பச் சொன் னாலே அது உண்மையாகி விடும் என்பதைப்போல பழி சுமத்துவதாலேயே ஒருவர் குற்றவாளி ஆகி விட முடியாது.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment