இன்று (13.12.2010) காலை 8.10 மணிக்கு திடீரென முதல்வர் கலைஞர் ஏலகிரிக்குப் புறப்பட்டுச் சென்றார்.
முதல்வர் கருணாநிதி இன்று (13.12.2010) காலை திடீரென வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரிமலைக்கு வந்தார். சென்னையில் இருந்து கார் மூலம் புறப்பட்ட முதல்வர், பாலுசெட்டிசத்திரத்துக்கு வந்தபோது அவரை அமைச்சர் துரைமுருகன், மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன், வேலூர் கலெக்டர் ராஜேந்திரன், டி.ஐ.ஜி ஜெயராம், எஸ்.பி அன்பு ஆகியோர் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
முதல்வர் வருகையை அறிந்த திமுக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் திரண்டு சாலையோரங்களில் நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஏலகிரியில் டிஏடபுள்யூ விருந்தினர் மாளிகையில் முதல்வர் கலைஞர் தங்கியுள்ளார். மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன், தமிழக அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் முதல்வருடன் இருக்கிறார்கள்.
இந்தச் சூழ்நிலையில் அவர் ஏலகிரிக்கு புறப்பட்டுச் சென்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள மலை வாசஸ்தலமான ஏலகிரிக்கு முதல்வர் போன்ற முக்கிய தலைவர்கள் செல்வது இதுவே முதல் முறையாகும்.
No comments:
Post a Comment