
தடை விதிக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. விசாரணை தொடங்கியது இதனைத் தொடர்ந்து பெங்களூரு தனி நீதி மன்றத்தில் 15.12.2010 அன்று காலை தனி நீதிமன்ற நீதிபதி மல்லி கார்ஜுனா முன்னிலையில் விசாரணை தொடங் கியது. அப்போது ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் ``வழக்கின் ஆவணங்கள் தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டதில் பிழைகள் இருப்பதால் அதனைத் திருத்திய பிறகு விசாரணையைத் தொடங்கலாம் என்று வாதிட்டார். இதற்கு தமிழக அரசின் வழக் கறிஞர் ஆச்சார்யா ஆட்சேபம் தெரி வித்தார். அவர் வாதிடும்போது உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி உடனடியாக விசாரணையைத் தொடங்க வேண்டும் என்றும் இப்படி வழக்கை ஒத்தி வைத்துக் கொண்டேபோனால் சாட்சி களே இல்லாமல் போய்விடுவார்கள் என்றும் எனவே வழக்கு விசாரணையை உடனே தொடங்க வேண்டும் என்றும் கூறினார். இதனைத் தொடர்ந்து வழக்கைத் தொடர்ந்து நடத்திட நீதிபதி உத்தர விட்டார். இதனையடுத்து, அய்யாதுரை, ரமேஷ் ஆகிய இருவரும் சாட்சிய மளித்தனர். நிலம் வாங்குவதற்காக வி.என்.சுதாகரனிடமிருந்து 5 லட்சம் ரூபாய் பணம் பெறப்பட்டதாகவும், திருமண அழைப்பிதழ் அச்சடிக்க 11 லட்சம் ரூபாய்க்கான காசோலையைப் பெற்றுக் கொண்டதாகவும் ரமேஷ் கூறியுள்ளார். சாட்சிகளை ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்தார். இந்நிலையில் சாட்சியம் அளிக்க வராத அமானுல்லாவுக்கு பிடி வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது. |
No comments:
Post a Comment