கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, December 19, 2010

ஏமாறாதே! ஏமாற்றாதே!! ஸ்பெக்ட்ரம் இழப்பு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடியா? பெரிய பலூனில் காற்று இறங்குது?

சென்னையில் நேற்று (18.12.2010) டெல்லி பல்கிவாலா பவுண்டேஷனும், (மெட்ராஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ்) சென்னை வர்த்தக தொழில் கூட்டமைப்பும் இணைந்து நடத்திய ஒரு கூட்டத்தில், வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது, தகவல் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த அருண்ஷோரி (பார்ப்பனர்) அவர்கள் பேசியுள்ளார்.

2001 முதலே சி.பி.அய். 2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சினையை விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டுவிட்ட நிலையில், ஊழல் களின் உண்மை முக்கியத்துவம், என்ற தலைப்பில் மேற்படி கூட்டத்தில் உரையாற்றினார் அருண் ஷோரி. பிரதமர் மன்மோகன் சிங்கை குற்றம் சுமத்திப் பேசியதோடு, ஆ.இராசா வையும் குற்றம் சுமத்திப் பேசினார்.

அதில் மீடியாக்களுக்கு நான் அறிவுறுத்த விரும்புகிறேன்; நீங்களே (ஊடகங்களே) ஒரு கற்பனையான தொகையான 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் என்று எழுதி அதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். அநேகமாக இத்தொகை 30 ஆயிரம் கோடிதான் இருக்கக் கூடும் என்றார்!

1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் பலூனில் எவ்வளவு காற்று இறங்கி விட்டது பார்த்தீர்களா?

(ஆதாரம் 19.12.2010 இந்து நாளேடு)

பார்ப்பன ஏடுகளின் பொய்ப் பிரச்சாரத்திரையை அருண்ஷோரி அய்யர்களே கிழிக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டு விட்டது பார்த்தீர்களா?

இதன்படி, (அருண்ஷோரி கூற்றுப் படி) 1 லட்சத்து 46 ஆயிரம் கோடி திடீரென்று மறைந்துவிட்டதே!

இதுதான் CAG என்ற மத்திய கணக்குத் தணிக்கையாளரின் துல்லி யக் கணக்குக்கு நற்சான்றிதழா?

இது மட்டுமல்ல, ஏற்கனவே, சி.பி.அய் தாக்கல் செய்துள்ள முதல் அறிக்கையில் 2009இல் குறிப்பிடப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா?

வெறும் 22,000 கோடிதான்!

(ஆதாரம் 16.12.2010 இந்து நாளேடு)

இதன்படி, அவாள் பிரச்சார 1,76,000 கோடி பலூனில் இறங்கிய தொகை 1 லட்சத்து 54,000 கோடி எப்படி திடீரென போயிற்று?

இதிலிருந்து தெரியும் உண்மை- இந்தப் பொய்ப் பிரச்சாரத் தொகை தான் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி என்பதுதானே!

இதைத்தான் CAG என்ற பெரிய தணிக்கை அதிகாரி-இழப்புத் தொகை விவாதித்து முடிவுக்கு வரவேண்டும் (Debatable) என்று முடித்தார் போலும்!

எங்காவது கணக்கில் கட்டப் பஞ்சாயத்து உண்டா? உண்மை களைப் பலியாக்குகிற ஒருவர், பழிபோட்டு மக்கள் விழியை மறைக்க முயலுகிறார். ஏமாறாதீர்! ஏமாற்றாதீர்!!

நன்றி : விடுதலை


No comments:

Post a Comment