கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, December 26, 2010

கருணாகரன் மறைவு - கருணாநிதி இரங்கல்


தமிழக முதல்வர் கருணாநிதி 24.12.2010 அன்று வெளியிட்ட அறிக்கை:
இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கருணாகரன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். இச்செய்தியை கேட்டு அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையும் அடைகிறேன்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாகரன் 1918ம் ஆண்டு பிறந்தார். தொழிற்சங்கத் தலைவராக திகழ்ந்து தொழிலாளர் சமுதாய முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர். 4 முறை கேரள மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்று அம்மாநில மக்களின் மேம்பாட்டிற்காகப் பாடுபட்டவர்.
மத்திய அரசின் தொழில்துறை அமைச்சராக இருந்து நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு தொண்டாற்றியுள்ளார். அவரது மறைவு கேரள மாநிலத்திற்கு மட்டுமல்லாமல் இந்திய நாடு முழுமைக்கும் ஒரு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். கருணாகரனின் திடீர் மறைவால் வருந்தும், அவரது குடும்பத்தாருக்கும், கேரள மாநில மக்களுக்கும், காங்கிரஸ் இயக்க நண்பர்களுக்கும் தமிழக மக்களின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்

No comments:

Post a Comment