கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, December 26, 2010

ஆளுநர் உரையுடன் ஜன.7ம் தேதி சட்டசபை கூட்டம் தொடக்கம்


தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டம் கடந்த 7ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடந்தது. கூட்டத்தை ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா முடித்துவைத்தார். 2011 ஆண்டு முதல் சட்டசபைக் கூட்டம் ஜனவரி 7ம் தேதி தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா கூட்டத்தை தொடங்கி வைத்து உரை நிகழ்த்துகிறார். ஆளுநர் உரையுடன் அன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்படும். மறுநாள் ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெறும். அப்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதல்வர் கருணாநிதி பதில் அளிப் பார்.
இந்த தகவலை தமிழக சட்டப்பேரவை செயலர் செல்வராஜ் தெரிவித்துள்ளார். புதிய சட்டசபையில் ஆளுநர் முதல்முறையாக உரை நிகழ்த்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக ஆளுநர் உரையுடன் தொடங்கும் பேரவை கூட்டம் சுமார் 10 நாட்கள் நடைபெறும். இந்த முறை ஆளுநர் உரை நிகழ்த்தியபின் மூன்று நாட்கள் மட்டுமே பேரவை நடைபெறும் என்றும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேரவை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடும் என்றும் கூறப்படுகிறது. சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால் இதுவே கடைசி கூட்டத் தொடராக இருக்கும் என்றும், புதிய சட்டப்பேரவை கூடும்வரை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. சட்டப்பேரவை நடக்கும் நாட்கள் மற்றும் அலுவல்கள் குறித்து அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்து அறிவிக் கும்.

No comments:

Post a Comment