ஆண்டிப்பட்டி அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 18 பேர் குடும் பங்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாயும், ஒரு கையை இழந்தவருக்கு ரூ.50 ஆயிரமும், காயம டைந்த 43 பேருக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங் கப்படும் என்று முதல மைச்சர் கலைஞர் உத் தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, தமிழக அரசு வெளி யிட்டுள்ள செய்திக் குறிப் பில் கூறப்பட்டுள்ளதா வது:-
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே சண்முகசுந்தரபுரம் கிராமத்தில் தேனி - மதுரை சாலையில் கடந்த 1-12-2010 அன்று இரவில் நேருக்கு நேர் சென்ற இரண்டு தனியார் பேருந் துகள் மோதிக் கொண்டு ஏற்பட்ட விபத்தில் 2 பேருந்துகளிலும் பய ணம் செய்தவர்களில் 14 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழி யில் ஒருவரும், மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பல னின்றி மூவரும் ஆக 18 பேர் உயிரிழந்தனர். அவ் விபத்தில் படுகாயமடைந்த 32 பேர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், 12 பேர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை யிலும் உள் நோயாளி களாகச் சிகிச்சைபெற்று வருகின்றனர். இவர்களில் ஒருவருக்கு வலது கை துண்டிக்கப்பட்டுவிட்டது.
இந்தக் கொடுமையான விபத்து குறித்த விவரங் கள் கிடைத்ததும் மிகுந்த வேதனையும், வருத்தமும் அடைந்த முதலமைச்சர் கலைஞர் உயிரிழந்தவர் களின் குடும்பங்களுக்குத் தமது ஆழ்ந்த இரங்க லைத் தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்த வர்கள் குடும்பம் ஒவ் வொன்றுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் 18 லட்சம் ரூபாயும், ஒரு கையை இழந்தவர்க்கு 50 ஆயிரம் ரூபாயும், காய மடைந்து சிகிச்சை பெற்று வரும் 43 பேருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் 10 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் 29 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் முதல்-அமைச் சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிவா ரண உதவியாக வழங் கிட முதலமைச்சர் கலை ஞர் ஆணையிட்டுள்ளார்
No comments:
Post a Comment