ஊகத்தின் அடிப்படை யில் அரசுக்கு 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று தனது தணிக்கை அறிக்கையில் தெரிவித்திருந்த இந்தியத் தலைமைத் தணிக்கை அதிகாரி இப்போது இந்த யூகத்தின் அடிப்படை யிலான இழப்பு ரூ.57 ஆயிரத்து 666 ஆயிரம் கோடியாகவும் இருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்துள்ளதாகவும், அரசுக்கு ரூ 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அறிக்கை அளித்த இந்தியத் தலைமை தணிக்கை அதிகாரி நேற்று நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு முன் ஆஜராகி தனது கருத்தினை தெரிவித்தபோது, இந்த ஊகத்தின் அடிப்படையிலான இழப்புபற்றி தான் நான்கு வழிகளில் கணக்கிட்டதா கவும், அவற்றின்படி ஊகத்தின் அடிப்ப ட யிலான இந்த இழப்பு ரூ.57,666 கோடியில் இருந்து ரூ.1.76 லட்சம் கோடி வரையில் இருக்கலாம் என்று சாட்சியம் அளித்து உள்ளார். 22 உறுப்பினர் கொண்ட, பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷியை தலைவராகக் கொண்ட நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் முன் நேற்று ஆஜராகி சாட்சியம் அளித்த போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த இழப்பு என்பதே ஒரு யூகத்தின் அடிப்படையில் கூறப்பட்டது. உண்மையில் ஏற்பட்ட இழப்பு அல்ல. தலைமை தணிக்கை அதிகாரி தெரிவித்திருப்பதில் இருந்து, இந்த ஊகத்தின் அடிப்படையிலான இழப்பை எப்படி வேண்டுமானாலும் குறைத்தோ, கூட்டியோ கூறமுடியும் என்பது தெளிவாகிறது. அரசின் கொள்கை முடிவுகளில் தணிக்கை அதிகாரி தலையிட முடியாது என்று பல வழக்குகளில் உச்ச நீதி மன்றம் இதற்கு முன் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் இந்த வழக்கில் மட்டும் இதற்கு முரணாக தணிக்கை அதிகாரியின் அறிக்கைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது என்பதுதான் கவனிக்கத்தக்க தாகும். 1999 லிருந்து பிரமோத் மகாஜன், அருண் ஷோரி, தயாநிதிமாறன் போன்ற பல முன்னாள் அமைச்சர்களால் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறையைத்தான் முன்னாள் அமைச்சர் ஏ.இராசாவும் பின்பற்றியுள்ளார். இத்தனை ஆண்டுகள் இதைப் பற்றி ஆட்சேபம் தெரிவிக்காத தலைமைத் தணிக்கை அதிகாரி இப்போது மட்டும் இதைப் பற்றிக் குறிப்பாகக் குற்றம் சாற்றியிருப்பது ஏன்? என்ற கேள்வியும் எழுகிறது. நன்றி : விடுதலை . |
About Me
- DMK Thondan
- Madurai, Tamilnadu, India
- " இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,
Search This Blog
Tuesday, December 28, 2010
ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ரூ.57,666 கோடியாகவும் இருக்கலாமாம்! யூகத்தின் அடிப்படையில் அறிக்கை அளித்த தணிக்கை அதிகாரி தடுமாறுகிறார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment