ஆ.இராசா அவர்கள் காலத்தில் 2ஜி அலைக்கற்றை அலைவரிசையில் வெறும் யூகத்தின் அடிப்படையில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என்று சொல்லும் பா.ஜ.க.வின் ஆட்சிக் காலத்தில் வாஜ்பேயி பிரதமராக இருந்த காலகட்டத்தில், யூகத்தின் அடிப் படையில் இல்லாமல் நேரடியாகவே ஆதாரப்பூர்வமாக ஏற்பட்ட இழப்பு ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாய் என்று மத்திய அமைச்சர் கபில்சிபல் கூறியதை எடுத்துக்காட்டி, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தொலைத்தொடர்புத் துறையின் தற்போதைய அமைச்சர் திரு. கபில்சிபல் அவர்கள் 21.12.2010 அன்று இரவு தனியார் செய்தித் தொலைக்காட்சி (ஆங்கிலத்தில்) ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,
பல்வேறு திடுக்கிடக் கூடிய தகவல்களை ஆணித் தரமான முறையில் விளக்கியுள்ளார்.
பா.ஜ.க. ஆட்சியில் இழப்பு
1999 ஆம் ஆண்டில் - பாரதீய ஜனதா ஆட்சியில், வாஜ்பேயி அவர்கள் பிரதமராக இருந்த காலகட்டத் தில் - கடைப்பிடிக்கப்பட்ட தொலைத்தொடர்பு கொள்கையினால், மத்திய அரசுக்கு ஏற்பட்ட இழப்புத் தொகை ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடியாகும் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு சம்பந்த மாக இந்த இழப்பு - இது இப்போது சொல்லப்படுவது போன்ற யூகத்தின் (கற்பனையின்) அடிப்படையில் சொல்லப்படும் தொகை அல்ல; நடைமுறைக் கணக்குப்படி ஏற்பட்ட இழப்புத் தொகையாகும்!
9.12.2010 அன்று சென்னைப் பொதுக்கூட்டத்தில் நாம் பேசியபோது, இதுபற்றிய விசாரணை 2001 முதல் தொடங்குவதைவிட, நியாயமாகப் பார்த்தால் 1999 ஆம் ஆண்டு முதலே தொடங்கப்படல் வேண்டும் என்று வற்புறுத்தினோம். காரணம், அப்போது வெளியான நியூ ஏஜ் (CPI) ஏட்டின் கட்டுரை ஒன்றில் ரூ.50 ஆயிரம் கோடிக்குமேல் வாஜ்பேயி ஆட்சியில் தொலைத் தொடர்புத் துறையில் இழப்பு - ஊழல் என்று வெளிவந்தது. இதைச் சுட்டிக்காட்டினோம்!
மத்திய அமைச்சர் கபில்சிபல் இதனைக் கூறுவ தோடு, எப்படி இது ஏற்பட்டது என்பதையும் விளக்கி யுள்ளார்.
ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வந்த ஏலத்தில் விடும் கொள்கைக்குப் பதிலாக, வருவா யில் பங்கு (Revenue Sharing) என்ற அடிப்படையில், ஒதுக்கீடு மாற் றப்பட்டதுடன், 10 ஆண்டுகாலத்துக்கு இருந்த லைசென்சு முறையை 20 ஆண்டுகளுக்கு அப்போது உயர்த்தி சலுகை காட்டப் பட்டது.
யூகத் தொகை நட்டம் - இன்றைய கணக்கு ஆய்வு அதிகாரி அறிக்கைப்படி ரூபாய் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி - இதை அவரே விவாதித்து முடிவு செய்யலாம் என்று முடித்துக் கையொப்பமிட்டுள்ளார்.
அருண்ஷோரி கூறியது என்ன?
வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது, பிரமோத் மகாஜனுக்கு அடுத்து, அத்துறைக்கு அமைச்சரான அருண்ஷோரி (2001 இல்) கூற்றுப்படி, உத்தேச இழப்பு இப்போது ரூ.30,000 கோடிதானே ஒழிய, ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அல்ல என்று கூறியுள்ளார்- சில நாள்களுக்குமுன் சென்னைக்கே வந்து.
21 அக்டோபர் 2009 இல் பதிவான வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் சி.பி.அய்.யால் குறிப்பிடப்பட்ட தொகையோ 22,000 கோடி ரூபாய்தான் உத்தேச இழப்பு என்பதும் சுட்டிக்காட்டப்படவேண்டும்.
பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட இழப்பு - ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாய் என்றால், எது அதிகமானது?
அதில்கூட கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியது ரூ.1,76,000 கோடி இழப்பு வெறும் யூகத்தின் அடிப் படையில்,
அது ரூ.22,000 கோடி என்ற சி.பி.அய். அறிக்கை முரணானது.
பா.ஜ.க. காலத்திய ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடித் தொகை இழப்பு பெரிய தொகையா?
22,000 கோடி ரூபாய் இழப்பு பெரிய தொகையா?
ஒரு பொய்யையே திரும்பத் திரும்பக் கூறினால், அது மெய்யாகி விடுமா?
ஏற்கெனவே 2001 இல் பா.ஜ.க. அமைச்சரவையில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுப் (Telecom Policy) படி தானே, அமைச்சர் இராசா காலத்திலும் செயல்பட்டிருக் கிறார்கள்.
அதுவும்கூட டிராய் (TRAI) என்ற அந்த அமைப்பை மீறியா செயல்பட்டிருக்கிறது இராசாவின் அமைச்சகம்?
இராசா காலத்தில் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகம்
2001 இல் 3 கோடி தொலைப்பேசி பயனாளிகளாக இருந்தது; 2009 இல் (அமைச்சர் இராசா காலம்) இது 79 கோடியாக உயர்ந்து, நாட்டின் தொழில் வர்த்தகப் புரட் சிக்கும் உதவியது என்பதைக் குறிப்பிடத் தவறவில்லை அமைச்சர் கபில்சிபல்.
மிகக் குறைந்த லைசென்ஸ் தொகை 1658 கோடி ரூபாய்தான் ஒரு போட்டியாள் ஒருமுறை நுழைய என்பது 2001 முதல் 2009 வரை இருந்தது என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார் - அந்தப் பேட்டியில்.
இப்படிப் பல்வேறு செய்திகள் வெளியே வரவிருப்ப தால்தான் பா.ஜ.க.வினர் அந்த விசாரணையை ஏற்க மறுக்கின்றனர் அல்லது தயங்குகின்றனர்!
ஜே.பி.சி. (JPC) என்று திரும்பத் திரும்ப எதிர்க்கட்சி கள் கோஷ்டிகானம் பாடிக் கொண்டுள்ளனரே என்று கேட்டபோது, அமைச்சர் கபில்சிபல் மிகவும் தெளிவாகப் பதிலளித்துள்ளார்!
பொதுக்கணக்குக்குழு (PAC) தனது விசாரணையைத் தொடங்கி செயல்படும் நிலையில், இந்தக் கோரிக்கை அர்த்தமற்றது; உள்நோக்கம் கொண்டது.
தேர்தலுக்கான தந்திரம்!
பிரதமர் தானே, வழமைக்கு மாறாக, அக்குழுவின் முன் ஆஜராகி விசாரணைக்கு தன்னை உட்படுத்திக் கொள்ளவும் தயார் என்று கூறிய பிறகும், ஏன் பிடிவாதம் இவர்களுக்கு எனக் கேட்ட கபில்சிபல், சி.பி.அய். எப்படி விசாரணையை நடத்துவது என்பதை உச்சநீதிமன்றமே கண்காணித்து ஆணை வழங்கு வதைவிட ஜே.பி.சி. அதிகமாகச் செயல்பட்டுவிட முடியுமா? முடியாதே! பின் ஏன் இந்தக் கோரிக்கை என்றால், இதை வைத்து நீட்டி, 2014 தேர்தல் வரை மக்களிடம் இதனைத் தங்களுக்கு ஒரு பிரச்சார மூலதனமாக்கவே எதிர்க்கட்சிகள் முயலுகின்றன. 5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் ஏப்ரலில் - இன்னும் 5 மாதங்களுக்குள் வர இருப்பதால் - அதற்கு இதைப் பயன்படுத்தவேண்டும் என்பதே அவர்களின் உள்ளூரத் திட்டம் என்பதை நன்கு விளக்கி விட்டார்!
தூங்குகிறவர்களைத்தான் தட்டி எழுப்ப முடியும்; தூங்குவதுபோல பாசாங்கு செய்பவர்களை எப்படி எழுப்ப முடியும் என்பதுபோல, எல்லாம் தெரிந்து கொண்டே வேறு சரியான வாய்ப்பு இல்லாததால் இதை ஊதி ஊதிப் பெரிதாக்கி அரசியல் லாபம் பெற எண்ணுகிறார்கள்.
இவர்கள் இப்பிரச்சினையை, ஊதி ஊதி பலூனைப் பெரிதாக்க நினைத்தால், கடைசியில் அது வெடித்து புஸ் என்று ஆவது நிச்சயம்!
தலைவர்,
திராவிடர் கழகம்
No comments:
Post a Comment