தமிழகத்தில் சமீபத்திய வெள்ளத்தால் 50 சதவீதத்துக்கு மேல் நெற்பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஹெக்டேருக்கு ணீ8 ஆயிரம் நிவாரணம் என்பதை ணீ10 ஆயிரமாக உயர்த்தி, முதல்வர் கருணாநிதி ஆணை பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த மாதம் பெய்த கனமழைக்கு 10 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. பல லட்சம் ஏக்கர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கின. அதிக அளவில் பாதிக்கப்பட்ட திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சேதங்களை பார்வையிட மத்திய அரசு குழுவினர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதனை ஏற்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் எல்.விசுவநாதன் தலைமையில் ஏழு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கடந்த 16ம் தேதி சென்னை வந்தனர். அவர்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டனர்.
ஒரு குழு கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கும், மற்றொரு குழுவினர் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கும் சென்றனர். அங்கு 17,18,19 ஆகிய 3 நாட்கள் வெள்ளச் சேத இடங்களை பார்வையிட்டு மதிப்பீடு செய்தனர். அப்போது, விவசாயிகள் அழுகிய பயிர்களை காட்டி கண்ணீர் விட்டு, சேதம் ஏற்பட்டது பற்றி அந்த குழுவினரிடம் தெரிவித்தனர்.
மூன்று நாட்கள் ஆய்வுப் பணி முடிந்ததும் மீண்டும் அந்த குழுவினர் 20.12.2010 அன்று காலை சென்னை திரும்பினர். சென்னையில் வருவாய் துறை உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினர். மதியம் புனித ஜார்ஜ் கோட்டையில் தலைமை செயலாளர் எஸ்.மாலதியை சந்தித்து பாதிப்பு குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினர்.
அதன் பின், எல்.விசுவநாதன் கூறுகையில், “தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதியினை 7 பேர் கொண்ட குழு, இரண்டு பிரிவுகளாக பிரிந்து 3 நாட்களாக ஆய்வு செய்தது. அங்கு தயாரிக்கப்பட்ட அறிக்கை குறித்து தலைமை செயலாளருடன் விளக்கம் அளித்தோம். அப்போது, தமிழக அரசு சார்பில் நிவாரண நிதியாக ணீ1,832 கோடி ஒதுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து மத்திய அரசிடம் தெரிவிக்கப்படும். வெள்ள பாதிப்பு குறித்த அறிக்கையை விரைவில் அரசிடம் தாக்கல் செய்வோம்” என்றார்.
இதற்கிடையில் முதல்வர் கருணாநிதி 20.12.2010 அன்று வெளியிட்டுள்ள உத்தரவு குறித்து அரசு வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் சமீபத்தில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டது. இதற்கு நிவாரணத் தொகையாக ஹெக்டேர் ஒன்றுக்கு ணீ7ஆயிரத்து 500 வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
பின்னர் இதை ணீ8ஆயிரமாக உயர்த்த முதல்வர் கருணாநிதி கடந்த 8ம்தேதி உத்தரவிட்டார். இந்த நிவாரணத் தொகையை மேலும் உயர்த்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதை பரிசீலனை செய்த முதல்வர் கருணாநிதி, 50சதவீதத்துக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ணீ8ஆயிரம் என்பதை ணீ10ஆயிரமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார். அதற்கான ஆணை நேற்று பிறப்பிக்கப்பட்டது.
ஏற்கனவே, மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ணீ500 கோடி ஒதுக்கப்பட்டது. அதில், இறந்தவர்களுக்கு ணீ2 லட்சம், வீடுகள் பாதிக்கப்பட்டவர்கள், கால்நடைகள் மரணமடைந்தால் அதற்கும் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவிட்டார். இப்போது, கூடுதலாக நெற்பயிர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகையை கூடுதலாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே, மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ணீ500 கோடி ஒதுக்கப்பட்டது. அதில், இறந்தவர்களுக்கு ணீ2 லட்சம், வீடுகள் பாதிக்கப்பட்டவர்கள், கால்நடைகள் மரணமடைந்தால் அதற்கும் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவிட்டார். இப்போது, கூடுதலாக நெற்பயிர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகையை கூடுதலாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்
No comments:
Post a Comment