![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1NcPPCE0CHSKUtGX2Mv9qy8pyAPSo94G5bNcmORoMil-8adEWewRmoY6dBCLc780qQyEfZdKlYR3_hn-ag35wj3vZr2oVqRpy7zraJ27dPY2p1GRO_sDNh9YokG7Aw3l8SoZdqepioirl/s400/U.jpg)
தமிழக அரசு நிர்ணயம் செய்த பள்ளிக்கூடங் களுக்கான கல்விக்கட் டணம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. தமிழ்நாட்டில் தனி யார் பள்ளிக்கூடங்கள் வசூலிக்க வேண்டிய கல்விக்கட்டணம் எவ் வளவு என்பதை நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயம் செய்து அறி வித்தது. இந்த கட்ட ணத்தை நடப்பு கல்வி ஆண்டு முதலே அமல் படுத்த வேண்டும் என் றும் அந்தக்குழு அறி வித்தது. இதை எதிர்த்து தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்ட மைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. வழக்கை விசாரித்த நீதிபதி கே.பி. கே.வாசுகி, நீதிபதி கோவிந்தராஜன் குழு வின் உத்தரவுக்கு இடைக் காலத் தடை விதித்தார். இந்த இடைக்காலத் தடை உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் வில்சன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய் தார். பெற்றோர் தரப் பிலும் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நீதிபதிகள் பிறப்பித்த ஆணை தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவ ஞானம் ஆகியோர் இந்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித் தனர். நீதிபதி கோவிந்த ராஜன் குழு நிர்ணயம் செய்த கல்விக் கட்ட ணத்துக்கு விதிக்கப் பட்ட இடைக்காலத் தடையை ரத்து செய் தும், புதிய கல்விக் கட் டணத்தை நடப்பு ஆண்டு முதலே நடை முறைப்படுத்தும்படியும் நீதிபதிகள் ஆணை யிட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பள்ளி களின் சங்கங்கள் கூட்ட மைப்பு தாக்கல் செய்த மறு சீராய்வு மனுக் களும் உயர்நீதிமன்றத் தில் தள்ளுபடி செய்யப் பட்டன. நீதிபதி கோவிந்த ராஜன் குழுவின் கல்விக் கட்டண சீரமைப்பை எதிர்த்தும், கல்விக் கட்டணத்தை இந்த ஆண்டு முதலே அமல் படுத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்தும் தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. தங்களது மேல் முறையீட்டை அவசர கால மனுவாக கருதி விசாரிக்கும்படியும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால், அதை அவசரகால மனு வாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தது. 16.12.2010 அன்று இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தனியார் பள்ளிகள் சார்பில் வாதாடிட வழக்கறி ஞர்கள், ``புதிய கல்விக் கட்டணத்தை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப் பட்ட வழக்குகள் நிலு வையில் உள்ளன. ஆகவே, பழைய கல்விக் கட்டணத்தையே வசூலிக்க அனுமதிக்க வேண்டும்'' என்று வாதிட்டனர். தமிழக அரசு சார் பில் வாதாடிட கூடுதல் தலைமை வழக்கறிஞர் வில்சன், ``7.5.2010 ஆம் தேதி நீதிபதி கோவிந்த ராஜன் குழு நிர்ணயம் செய்த கல்விக்கட் டணத்தை பெற்றோர் கள் ஏற்றுக்கொண்டு செலுத்தி உள்ளனர். 5 ஆயிரத்துக்கும் மேற் பட்ட பள்ளிகளும் அதை ஏற்றுக்கொண்டு வசூலித்து வருகின்றன. ஆனால், பல பள்ளிகள் மாணவர்களை நிர்ப் பந்தம் செய்து அதிகக் கட்டணம் வசூலிக் கின்றன. ஆகவே, நீதிபதி கோவிந்தராஜனின் கல்விக் கட்டண சீர மைப்புக்குழு நிர்ணயம் செய்த புதிய கல்விக் கட்டணத்தை, உயர் நீதிமன்றம் உத்தரவுப் படி நடப்பு ஆண்டு முதலே அமல்படுத்த உத்தரவிட வேண்டும்'' என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங் களையும் கேட்ட நீதி பதிகள், புதிய கல்விக் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி தனியார் பள்ளிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தும், தமிழக அரசு நிர்ணயம் செய்த கல்விக்கட்டணம் செல்லும் என்றும் உத்தர விட்டனர். மேலும், இது தொடர் பாக தனியார் பள்ளிகள் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலு வையில் உள்ள வழக்கை ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதிக்குள் முடிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத் திற்கும் நீதிபதிகள் உத்தர விட்டனர். |
No comments:
Post a Comment