மத்திய அரசு சார்பில் தமிழக வெள்ள சேதத்தை பார்வை யிட 7 பேர் கொண்ட குழு வினர் 16.12.2010 அன்று பிற்பகல் 2 மணிக்கு சென்னை வந்தனர். மத்திய உள்துறை இணை செயலர் எல்.விஸ்வநாதன் தலைமையில் உயர் அதிகாரிகள் முரளிதரன், ஜிதேந்திரகுமார், எஸ்.எஸ்.பிரசாத், கே.மனோகரன், ஆர்.தங்க மணி, திக்விஜய் மிஸ்ரா ஆகியோர் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
இந்த குழுவினர் 16.12.2010 அன்று மாலை 4 மணிக்கு கோட் டையில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர். வெள்ள சேத விவரத்தை குழுவினருக்கு மு.க.ஸ்டாலின் விளக்கினார். வருவாய் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தலைமை செயலர் மாலதி, வருவாய் செயலர் ஜெயக்கொடி, ஆணையர் சுந்தரதேவன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். சுமார் 40 நிமிடம் இந்த சந்திப்பு நடந்தது.
பின்னர் குழு தலைவர் விஸ்வநாதன் கூறியதாவது:
சேத விவர அறிக்கை தரப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நாங்கள் 2 குழுவாக பிரிந்து நாளை முதல் 3 நாட்கள் பார்வையிட்டு சேத விவரத்தை கணக் கிட உள்ளோம். வெள்ளப் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வுப் பணி முடிந்ததும் மீண்டும் சென்னை வந்து முதல்வரை சந்தித்து பேசு வோம். அதன் பிறகு டெல்லி சென்று ஒரு வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்வோம். சேத விவரம் பற்றி இப்போது எதுவும் கூற முடியாது.
என் தலைமையில் முரளிதரன், ஜிதேந்திரகுமார், எஸ்.எஸ்.பிரசாத் கொண்ட குழுவினர் 16.12.2010 அன்று மாலை கடலூர் செல்கிறோம். 17ம் தேதி கடலூரில் வெள்ள சேதத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த பின் சிதம்பரத்தில் தங்கியிருந்து, 18ம் தேதி நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்கிறோம். பின் தஞ்சாவூரில் தங்குகிறோம். 19ம் தேதி தஞ்சை மாவட்டப் பகுதிகளை பார்வையிட உள்ளோம். இரவு 11 மணிக்கு திருச்சியிலிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறோம்.
கே.கே.மனோகரன், தங்கமணி, திக்விஜய் மிஸ்ரா கொண்ட குழுவினர் 17ம் தேதி காலை 6.50 மணிக்கு விமானம் மூலம் மதுரை செல்கிறார்கள். அங்கிருந்து கார் மூலம் திருநெல்வேலி சென்று தூத்துக்குடியில் தங்குகிறார்கள். 18ம் தேதி தூத்துக்குடி மாவட்ட பகுதிகளை பார்வையிடுகிறார்கள். இரவு கன்னியாகுமரியில் தங்குகிறார்கள். 19ம் தேதி கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளை பார்வையிடுகிறார்கள். பின்னர் நாகர்கோவிலில் தங்குகின்றனர். 20ம் தேதி வெள்ள சேத மதிப்பீடு பற்றி சென்னையில் கலந்துரையாடல் நடத்தி விட்டு இரவில் விமானம் மூலம் டெல்லி செல்கிறோம்.
இவ்வாறு விஸ்வநாதன் கூறினார்.
No comments:
Post a Comment