கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, December 13, 2010

ராஜபக்சே நடவடிக்கை: கலைஞர் கண்டனம்


இலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு தமிழக முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கீதம் ரத்து செய்த முடிவு ஈழத்தமிழர்கள் மனதை மேலும் புண்படுத்தும். இலங்கை அரசின் இந்த செயல் கண்டனத்துக்குரியது என்று தெரிவித்துள்ளார்.


இலங்கையின் தேசிய கீதம் இனி சிங்கள மொழியில் மட்டுமே பாடப்படும் என்ற முடிவை அந்நாட்டு அமைச்சரவை எடுத்துள்ளது.

இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் தமிழர்கள் அதிகமாக வசிக்கிறார்கள். எனவே இலங்கையில் சிங்களத்துடன் தமிழும் ஆட்சி மொழியாக உள்ளது. இதனால் அரசு நிகழ்ச்சிகளிலும் விழாக்களிலும் இலங்கை தேசிய கீதம் தமிழிலும் பாடப்படும்.


தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தேசிய கீதம் தமிழில் பாடப்படும். மற்ற பகுதிகளில் சிங்களத்தில் பாடப்படும். ஆண்டாண்டு காலமாக இருந்து வந்த வழக்கத்தை அதிபர் ராஜபக்சே இப்போது ரத்து செய்துள்ளார்.


இது குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி, இலங்கையில் தமிழ் மக்களும்,சிங்களர்களும் வசிப்பதால் அந்த நாட்டு தேசிய கீதத்தை சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் இதுவரை பாடப்பட்டு வந்தது.


இந்த நடைமுறையை இலங்கை அதிபர் ராஜபக்சே மாற்றி,இனிமேல் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என்றும் தமிழில் தேசிய கீதம் பாடுவதை ரத்து செய்து விட்டதாகவும் அதற்கான தீர்மானம் அமைச்சரவையிலும் நிறைவேற்றப்படிருப்பதாகவும் ஏடுகளில் செய்தி வந்துள்ளது.


அந்த செய்தி உண்மையானால் அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. புண்பட்டிருக்கின்ற ஈழத்தமிழர்களின் உள்ளத்தை மேலும் புண்படுத்தக் கூடியது. எனவே இந்த செயலை கண்டிக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment