மழை வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து முதல்வர் கருணாநிதி, உயர் அதிகாரிகளுடன் 06.12.2010 அன்று அவசர ஆலோசனை நடத்தினார். மேலும், 07.12.2010 அன்று மாலை அவரது தலைமை யில், அமைச்சரவை அவசர ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவழை தீவிரமடைந்து 2 வாரங்களாக மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு மழை வெளுத்து வாங்கி வருகிறது. 10 மாவட்டங்கள் வெள்ளத்தால் தத்தளித்து வருகிறது.
இதைத் தொடர்ந்து வெள்ள நிவாரண பணிகளுக்காக முதல்வர் கருணா நிதி ரூ.100 கோடி ஒதுக்கி பணிகளை தூரிதப்படுத்தினார். பாதிக்கப்பட்ட பகு திகளை பார்வையிட கட லூர் மாவட்டத்துக்கு சுகன் தீப்சிங்பேடி, நாகை மாவட் டம்&சிவதாஸ் மீனா, தஞ்சை& வி.கே.சுப்புராஜ், திருவாரூர்&ஜி.சந்தானம், விழுப்புரம்&எஸ்.எஸ்.ஜவஹர், தூத்துக்குடி, நெல்லை& சுர்ஜித் சவுத்ரி, புதுக்கோட்டை& டேவிதார், ராமநாதபுரம்&ஹன்ஸ்ராஜ் வர்மா ஆகிய 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமனம் செய்தார்.
இந்த குழுவினர் கடந்த 2 நாட்களாக பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சேத விவரங்களை அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் கேட்டறிந்தனர். அப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாயிகள் தங்கள் பாதிப்புகளை கண்ணீர் மல்க அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
அதனடிப்படையில் வெள்ள சேதம், பயிர் சேதம் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் அறிக்கை தயாரித்துள்ளனர். 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தயாரித்த அறிக்கைகளை முதல்வர் கருணாநிதியிடம் 07.12.2010 அன்று தாக்கல் செய்கின்றனர். அதை பரிசீலித்து, நிவாரணம் வழங்க முதல்வர் கருணாநிதி தலைமையில் தமிழக அமைச்சரவை அவசர கூட்டம் சென்னை கோட்டையில் 07.12.2010 அன்று மாலை நடக்கிறது. இந்த கூட்டத்தில் அதிகாரிகள் கொடுத்த அறிக்கை பற்றி விரிவாக விவாதிக்கப்படுகிறது. அதன் பிறகு மழை& வெள்ள நிவாரண பணிக்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
அதிகாரிகளுக்கு உத்தரவு:
இந்த நிலையில், சென்னை கோட்டையில் முதல்வர் கருணாநிதி 06.12.2010 அன்று காலை தலைமை செயலாளர் எஸ்.மாலதி, வருவாய் துறை முதன்மை செயலாளர் வி.கே.ஜெயக்கோடி, வருவாய் நிர்வாக ஆணையர் என்.சுந்தரதேவன் மற்றும் உயரதிகாரிகளுடன் அவசர ஆலோ சனை நடத்தினார். அப் போது, வெள்ள சேதம் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை விரைப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.
மழை பலி:
வடகிழக்கு பருவமழையின் கோரதாண்டவ பிடியில் தமிழகத்தில் நேற்று வரை 181 பேர் பலியாகி உள்ளனர். இதில், 88 பேர் ஆண்கள், 52 பெண்கள், 41 குழந்தைகள் ஆவர். அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 27 பேரும், கடலூரில் 22 பேரும், திருவாரூரில் 28 பேரும் இறந்துள்ளனர். மழைநீரில் மூழ்கி 20,167 கால்நடைகள் இறந்துள்ளன. நேற்று ஓரே நாளில் மட்டும் தஞ்சாவூரில் 252 கால்நடைகள் இறந்துள்ளன. 29,155 குடிசைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெல்டா மாவட்டங்களில் நேற்று மழை குறைந்தது. இதனால் வெள்ளம் பல இடங்களில் வடிந்து வரு கிறது. ஆனால் வட மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் கடலூர் மாவட்டத்தில் சாலை கள் முற்றிலும் துண்டிக்கப்பட்டன. ஏற்கனவே, கடும் பாதிப்புக்குள்ளான இந்த மாவட்டம் தொடர்ந்து மழை யினால் தத்தளித்து வருகிறது.
No comments:
Post a Comment