கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, December 18, 2010

மருத்துவ படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு தமிழக அரசு ஏற்க முடியாது -


மருத்துவ கல்லூரிகளில் சேர அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்துவது என்ற மத்திய அரசின் யோசனையை தமிழக அரசு ஏற்காது என முதல்வர் கருணாநிதி உறுதியாக தெரிவித்திருக்கிறார்.
நுழைவுத் தேர்வை நடத்திதான் மாணவர்களை சேர்க்கலாம் என அறிவிக்கை வருமானால் தமிழக அரசு அதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
முதல்வர் 17.12.2010 அன்று வெளியிட்ட கேள்வி & பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நீங்கள் ஏலகிரியில் இரண்டு நாட்கள் ஓய்வெடுத்ததை பற்றி ஜெயலலிதா அறிக்கை விட்டுள்ளாரே?

நுழைவுத் தேர்வுப் பிரச்சினை வந்து கொண் டிருக்கின்ற சூழ்நிலையில் ஏலகிரியில் ஏகாந்தமாய் பொழுதைக் கழிக்கலாமா என்று கேள்வி கேட்டி ருக்கிறார். இன்னும் விவரமாக இதுபற்றிச் சொல்ல வேண்டுமேயானால், மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்ற இந்திய மருத்துவ குழுவின் முடிவு பற்றி பத்திரிகைகளில் செய்தி வந்தவுடனேயே தமிழக கிராமப்புற மாணவர்களின் நலனையும் மாநிலத்தில் நடைமுறையில் இருக்கும் இட ஒதுக்கீட்டு முறை யையும் பாதிக்கக்கூடும் என அரசு கருதி மேற்கண்ட முடிவை மறுபரிசீலனை செய்து பொது நுழைவுத் தேர்வு முறையை நீக்க வேண்டுமென்று 15-8-2010 அன்றே நான் இந்தியப் பிரதமருக்கும், மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதி யிருக்கிறேன்.

நுழைவுத் தேர்வை ரத்து செய்து
தி.மு.க. ஆட்சியில் சட்டம்

அக்கடிதத்தில் தமிழக அரசு ஏற்கெனவே நடை முறையில் இருந்த பொது நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்து குடியரசுத் தலைவரின் ஒப்புத லுடன் ஒரு சட்டம் இயற்றி 2007-2008 கல்வியாண்டு முதல் மாணவர்கள் பிளஸ்-2 படிப்பில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் 69 சதவிகித இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்றி மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது என்று தெரிவித்து இந்த முறை தொடரப்பட வேண்டும் என்பதை ஆணித் தரமாக மத்திய அரசுக்கு தமிழக அரசு தெரிவித் துள்ளது.

மேலும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இது குறித்த ஒரு வழக்கில் தமிழக அரசு தன்னையும் ஒரு வாதியாக இணைத்துக் கொண்டுள்ளது. தொழிற்படிப்பில் சேர்வதற்காக நடைமுறையில் இருந்த பொது நுழைவுத் தேர்வு முறையை நீக்கி 09-06-2005 இல் வெளியிடப்பட்ட அரசாணை செல்லுபடியாகாது என சென்னை உயர்நீதிமன்றம் 27-06-2005 அன்று ஆணை பிறப்பித்தது. பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்து மீண்டும் 18.02.2006 அன்று பிறப்பிக்கப்பட்ட ஆணையையும் 27.02.2006 அன்று உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பொது நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்ய எடுக்கப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்படும் என ஆளுநர் உரையில் 24-05-2006 அன்று அறிவிக்கப்பட்டு அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் டாக்டர் எம்.அனந்தகிருஷ்ணன் தலைமை யில் ஒரு குழு 07-07-2006 அன்று அமைக்கப்பட்டது.

அக்குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படை யில் பொது நுழைவுத் தேர்வு முறையை நீக்குவதற்கு உரிய சட்டத்திருத்தம் சட்டமன்றத்தில் நிறைவேற் றிய பிறகு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப் பட்டு சட்டமாக்கப்பட்டு 07.03.2007 அன்று முதல் இந்த சட்டம் அமலுக்கு வந்தது. இச்சட்டத்தினை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கினை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் 27.04.2007 அன்று இச்சட்டத்தினை உறுதி செய்தது. 2007-2008 கல்வி யாண்டு முதல் மாணவர்கள் பிளஸ்-2 படிப்பில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் 69 சத விகித இடஒதுக்கீடு முறையை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

மத்திய அமைச்சர் உறுதி

மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் 27-8-2010 அன்று எனக்கு எழுதிய கடிதத்தில், இந்திய மருத்துவக் குழு மம் பரிந்துரைத்துள்ள மருத்துவப் படிப்பிற்கான அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வு எல்லா மாநிலங்களுடனும், மருத்துவக் கல்வியாளர்களுட னும் கலந்து விரிவாக விவாதித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று உறுதிமொழி அளித்துள்ளார்.

இந்திய மருத்துவக் குழுமத்தின் ஆளுநர்கள் குழு 29-8-2010 அன்று கூட்டிய அனைத்து மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர்களின் கூட்டத்தில், தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறையின் முதன்மைச் செயலாளர் கலந்துகொண்டு, இந்திய மருத்துவக் குழு பரிந்துரைத்துள்ள மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய அளவிலான பொது நுழைவுத் தேர்வுகளுக்கு தமிழ கத்தின் சார்பில் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

30-8-2010 அன்று நடைபெற்ற மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மய்யக் குழுமக் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கலந்து கொண்டு, அகில இந்திய பொது நுழைவுத் தேர்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாது, மாநில அரசுகளைக் கலந்தாலோசிக் காமல் எந்த இறுதி முடிவும் எடுக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

பொது நுழைவுத் தேர்வு குறித்த வழக்கு 17-9-2010 அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் சார்பில் இதனை எதிர்த்து ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், இது போன்று மற்ற மாநிலங்களும் இதனை எதிர்க்கலாம் என்றும், எனவே மத்திய அரசு இவ்விஷயத்தில் முடிவெடுக்கும் முன்னர் அனைத்து மாநில அரசுகளையும் கலந்தாலோசிக்க வேண்டுமென்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பின்னர், அகில இந்திய நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்த முடிவுகள் மாநில அரசுகளு டனும், மற்ற சம்பந்தப்பட்ட அமைப்புகளுடனும் விரிவாக ஆலோசனை செய்த பிறகே மேற்கொள்ளப் படும் என மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

முதுநிலை மருத்துவப் படிப்பு

முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு மாணவர் களைச் சேர்ப்பதற்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்துவதைப் பற்றி ஜெயலலிதா தனது அறிக்கையிலே தெரிவித்திருக்கிறார். இது பற்றி தமிழக அரசின் சார்பில் 23-9-2010 அன்று வெளியிட்ட அறிக்கையிலேயே மத்திய அரசின் அந்த முடிவை தமிழக அரசு எதிர்க்கிறது என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம்.

இதனிடையே மருத்துவப் படிப்பிற்கும் மருத்துவ முதுகலை படிப்பிற்கும் பொது நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு வழி வகை செய்யும் வரைவு விதிகளுக்கு மத்திய அரசு மாநில அரசின் கருத்தினை கோரியது. இவ்வரைவு விதிகள் இவ்வரசுக்குக் கிடைக்கப் பெற்றவுடன் இவ்விதி கிராமப்புற மாணவர்களுக்கும் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு முறைக்கும் பாதகம் ஏற்படுத் தும் என்பதால் அவ்வரைவு விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 22-11-2010 அன்று மத்திய அரசுக்கு தனது கருத்தை இவ்வரசு அனுப்பியுள்ளது.

இதனிடையே 13-12-2010 அன்று உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசார ணைக்கு வந்த போது தமிழக அரசின் சார்பில்; நடை முறையில் உள்ள பொது நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் தமிழக அரசு இயற்றிய சட்டத்திற்கு புறம்பாக தற்போது நடத்த உத்தேசித்துள்ள பொது நுழைவுத் தேர்வினால் தமிழக மாணவர்களின் நலன் பாதிக்கப்படும் என எடுத்துரைக்கப்பட்டது.

உச்சநீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவில் இந்திய மருத்துவக் குழு சட்டத்திற்குட்பட்டு எந்த வொரு விதிகளுக்கும் திருத்தம் வெளியிடலாம் எனவும் அவ்வாறு வெளியிடப்படும் திருத்தம் செயல்பாட்டுக்கு வரும்போது எந்தவொரு நபரும் சட்ட நடைமுறைக்குட்பட்டு எதிர்க்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இவ்வழக்கு விசார ணையை எட்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.

உச்சநீதிமன்றம் கூறியது என்ன?

உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின்படி இந்த நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக் கானது, எந்த விதத்திலும் மருத்துவக் குழுமம் சட்டத் திற்கு உட்பட்டு அறிவிப்பு வெளியிடுவதற்கு தடை யாக இருக்காது எனவும் அவ்வாறு வெளியிடப் படும் அறிவிக்கையை எதிர்ப்பவர்கள் நீதிமன்றத்தை சட்டத்திற்குட்பட்டு அணுகுவதற்கு தடையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதலால், பொது நுழைவுத் தேர்வு மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று இந்திய மருத்துவக் குழு விதிகளுக்கு உரிய திருத்தம் வெளியிடுமேயானால் அத்திருத்தத்தை தமிழக அரசு சட்ட நடைமுறைகளுக்குட்பட்டு முழுமூச் சாக எதிர்க்கும்.

தமிழக மாணவர்களுக்கு ஏதும் பாதிப்பு வராத வகையில் தகுந்த நீதிமன்றத்தில் முறையீடு செய்து பொது நுழைவுத் தேர்வைக் கைவிட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். ஆதலால் பின் தங்கிய மாணவர்களும் கிராமப்புற மாணவர் களும் மற்றும் ஏனையோரும் பொது நுழைவுத் தேர்வு பற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை.

பொது நுழைவுத் தேர்வு குறித்து தமிழக அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏதுமில்லை. இப்போது நுழைவுத்தேர்வு முறையை எதிர்ப்பதற்கு அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வரு கிறது. மேலும் வரும் 2011-2012 கல்வியாண்டில் தற் போது உள்ள நிலையே தொடர்வதற்கு தமிழக அரசு அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற் கொண்டுள்ளது.

இத்தனை முயற்சிகளையும் தமிழக அரசின் சார்பில் எடுத்திருக்கும் போது, நுழைவுத் தேர்வு பிரச்சினையில் மத்திய அரசின் முடிவுகளுக்கு தி.மு.க. அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்துக் கொண்டிருப்ப தாக ஜெயலலிதா அறிக்கையிலே தெரிவிக்கிறார் என்றால், அது அவரது அறியாமையைக் காட்டு கின்றது என்றுதானே எடுத்துக்கொள்ள வேண்டி யிருக்கின்றது!.

அந்தக் காலத்தில்...

அந்தக் காலத்தில் ஏ.வி.எம். தயாரித்த திரைப் படம் ஒன்றில் நடிகர் கே.சாரங்கபாணி நடித்தபோது, அடிக்கடி நான் அந்தக் காலத்தில் காலேஜில் படிக்கும் போது.........'' என்று திரும்பத் திரும்ப அந்த வார்த்தைகளையே சொல்லிக் கொண்டே தியேட் டரையே சிரிக்க வைப்பார்! அதே பாணியில் தான் இன்றைய எதிர்க்கட்சித்தலைவர் ஜெயலலிதாவும் தமிழகத்தில் என்ன நடைபெற்றாலும், உடனடியாக உதிர்க்கும் வார்த்தையாக நான் அந்தக் காலத்தில் முதல்-அமைச்சராக இருந்த போது.......'' என்ற சொற்களை தனது அறிக்கையிலே மீண்டும் மீண்டும் குறிப்பிடுவதைப் பார்க்கும் போது பழைய நினைப்புடா பேராண்டி'' என்ற பாட்டியின் ஏக்கம் தான் தெரிகிறது! எதையும் புரிந்துகொண்டு பேச வேண்டும்! புரியாமல் புலம்புவது கூடாது

மத்திய அமைச்சர் பதவியை பெறுவதற்காக தயாளு அம்மாளுக்கு தயாநிதி மாறன் க்ஷீ600 கோடி கொடுத்ததாக நீரா ராடியா டேப் உரையாடல் செய்தி கூறுகிறதே? என்ற ஒரு கேள்விக்கு துக்ளக் இதழில் பதில் எழுதும்போது ‘இதுபற்றி எந்த மறுப்பும் வந்ததாக தெரியவில்லை. மத்திய அரசில் அமைச்சர்கள் நியமனம் ஆகிற முறை பற்றியும், அதில் தி.மு.க பெற்றுள்ள பங்கு பற்றியும் தெளிவாக விளக்குகிற விஷயம் இது’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதே?

பதினைந்து நாள்களுக்கு முன்பு ஒரு சில நாளேடுகளில் இது போன்றதொரு செய்தி வந்த போது, அதைப் பார்த்த நான் இப்படிப் பட்ட பைத்தியக்காரர் களும் நாட்டிலே இருக் கிறார்களே என்றுதான் எண்ணிக்கொண்டேனே தவிர, அதைக் கூடவா நம்புபவர்கள் இருப்பார் கள், எனவே அந்தச் செய் தியை மறுக்க வேண்டு மென்று தோன்றவில்லை.

திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய்!

ஆனால் இன்று அந் தச் செய்தி துக்ளக்'' இதழிலும் வெளி வந்து பதில் சொல்லப்பட்டி ருப்பதைக் காணும் போது - ஒரே பொய்யைத் திரும் பத் திரும்ப இவ்வாறு எழுதினால் அது நம்புவ தற்குரிய ஒன்றாக ஆகி விடுமோ என்ற நப்பா சையில் தொடர்ந்து அதை எழுதி வருவதால் அந்தச் செய்தியை மறுத்திட விரும்புகிறேன்.

அமைச்சர் பதவிக் காக தன் பேரனிடம் அது வும் 600 கோடி ரூபாய் அவரின் பாட்டியார் வாங்கினார் என்று உண்மையிலேயே ஒரு காலத்தில் எனக்கு நண் பராக இருந்த சோ'' நம்புகிறாரா? தயாநிதி மாறனுக்கு அல்ல, வேறு யாருக்காகவாவது அமைச் சர் பதவியை வழங்குவ தற்காக தி.மு.க பணம் பெற்றதாக சோ நிரூபிக் கத் தயாராக இருக் கிறாரா? ஏனென்றால் துக்ளக் பதிலில் அமைச் சர்கள் நியமனம் ஆகிற முறை பற்றியும், அதில் தி.மு.க. பெற்றுள்ள பங்கு பற்றியும் தெளிவாக விளக்குகிற விஷயம் இது என்றும் சொல்லியிருப்ப தால், இதனை நான் தெளி வாக்க விரும்புகிறேன்.

இதுபோன்ற உண் மைக்கு மாறான பொய்ச் செய்திகளை திட்ட மிட்டு சோ'' போன்ற ஒரு சில பத்திரிகையா ளர்கள் திரித்து வெளி யிட்டோ அல்லது அதற் காக கூடிப்பேசி சதித் திட்டம் வகுத்தோ திரா விட இயக்கத்தை சேதப் படுத்த எண்ணுகிறார்களா?.

நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார்!

உண்மையிலேயே தயாநிதிமாறன் அமைச் சர் பதவிக்காக 600 கோடி ரூபாய் பணம் கொடுத்ததாக துக்ளக் `சோ'வோ அல்லது அந் தச் செய்தியை வெளி யிட்ட பத்திரிகையாளர் களோ நிரூபிக்கத் தயா ராக இருக்கிறார்களா?. அப்படியிருந்தால் அந்தச் செய்தியை உறு திப்படுத்தி அவர்கள் இதழிலே அதனை அவர் கள் பெயரிலேயே வெளி யிடட்டும். அவர்களை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். சோ'' ராமசாமி, இதற் குப் பதில் சொல்வாரா?.


இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment