கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, December 5, 2010

தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட அம்பேத்கர் திரைப்படத்துக்கு றீ 10 லட்சம் நிதி உதவி :


தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ள ‘அம்பேத்கர்’ திரைப்படத்துக்கு றீ10 லட்சம் நிதி உதவியை முதல்வர் கருணாநிதி வழங்கினார். அரசு 03.12.2010 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தாழ்த்தப்பட்ட, நலிந்த சமுதாய மக்களின் உரிமைக் காக போராடிய அரசியல் சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் திரைப்படத்தை தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிட்டால், அரசு சார் பில் றீ10 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, தமிழில் மொழி மாற்றம் செய்து ‘அம்பேத்கர்’ திரைப்படம் வெளியிடப்படுவதையொட்டி, அந்த படத்தை தயாரித்துள்ள தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் துணை பொதுமேலாளர் டி.ராமகிருஷ்ணனிடம் றீ10 லட்சத்திற்கான காசோ லையை முதல்வர் கருணா நிதி 03.12.2010 அன்று வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின்போது செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை செய லாளர் ஆர்.சிவகுமார், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் கா.பாஸ்கரன், தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழக துணை மேலாளர் லட்சுமி நாராயணன் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment