கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, December 26, 2010

போக்குவரத்து ஊழியர்களுக்கு 40 சதவீதம் சம்பள உயர்வு - போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு


போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மாதம் ஸி2,000 முதல் ஸி4543 வரை ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. மொத்தத்தில், 40 சதவீதம் சம்பளம் அதிகரிக்கும்.
‘இது கடந்த செப்டம்பர் மாதம் முதல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்’ என்று போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
தமிழக அரசுடன் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் போக்குவரத்து தொழிற்சங்க அங்கீகார தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று தொமுச வெற்றி பெற்றது. உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி அடுத்த 5 ஆண்டுகளுக்கு போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர்பாக, அரசுடன் அனைத்து பேச்சுவார்த்தையும் நடத்த தொமுச தகுதி பெற்றுள்ளது.
அதன்படி, போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, 11வது புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை, சென்னை தரமணியில் உள்ள சாலை போக்குவரத்து நிறுவனத்தில் (ஐஆர்டி) கடந்த 15ம் தேதி தொடங்கியது. புதிய ஊதிய ஒப்பந்தம், 40 சதவீதம் ஊதிய உயர்வு, தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிப்பு, அறிவிக்கப்பட்ட சலுகைகளை வழங்க கோருவது மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட 15 கோரிக்கைகளை முன் வைத்து, போக்குவரத்து அமைச்சருடன் தொமுச பேச்சுவார்த்தை நடத்தியது.
இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை கடந்த 20ம் தேதி நடந்தது. இதில் தொடர்ந்து இழுப்பறி ஏற்பட்டதால், மீண்டும் பேச்சு வார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மூன்றாவது இறுதி கட்ட பேச்சு வார்த்தை 22.12.2010 அன்று நடந்தது. போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகித்தார். போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ரா, சாலை போக்குவரத்து நிறுவன இயக்குனர் பால்ராஜ், மாநகர போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் பாபு மற்றும் அனைத்து போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.
தொமுச சார்பில் தொழிற்சங்க தலைவர் குப்புசாமி, பொது செயலாளர் சண்முகம் உட்பட முக்கியமான உறுப்பினர் 9 பேர் கலந்து கொண்டு 40 சதவீத ஊதிய உயர்வு, புதிய ஊதிய ஒப்பந்தம், காலிபணியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட முக்கியமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

கூட்டம் முடிந்தபின் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மாதம் ஊதியம் ஸி2,000 முதல் ஸி4543 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 295 பேர் பயனடைவார்கள்.
இந்த ஊதிய உயர்வு கடந்த செப்டம்பர் மாதம் முதல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். மேலும் ஊழியர்களின் பதவி உயர்வு 3 முறையாக இருந்ததை, தற்போது 5 முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 34,554 பேர் பயனடைவார்கள். ஊழியர்களிடம் உள்ள சம்பள முரண்பாடு சரி செய்யப்படுவதால் 25,435 பேர் பயனடைவார்கள்.
அதுபோல் குடும்ப பாதுகாப்பு திட்ட பயன்தொகை ஸி1.50 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இதற்காக ஊழியர்களிடம் மாதந்தோறும் சம்பளத்தில் ஸி30 பிடித்த செய்யப்படும். தையல் கூலிக்கான படி ஆண்களுக்கு ஸி150 இருந்து ஸி200 ஆகவும், பெண்களுக்கு ஸி100 இருந்து ஸி150 வரையும் உயர்த்தப்படுகிறது. இதுபோல இரவு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய உயர்வினால் கடந்த செப்டம்பர் முதல் வரும் மார்ச் இறுதி வரையில் அரசுக்கு ஸி304.46 கோடி நிதி தேவையுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த ஒரு வருடத்துக்கு ஸி521.45 கோடி நிதி தேவையாக உள்ளது.
ஓய்வு பெற்ற ஊழியர்கள் அனைத்து புறநகர் பஸ்களிலும் பயணம் செய்ய அனுமதிக்கப்படும். மேலும் போக்குவரத்து துறையில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இதர கோரிக்கைகள் குறித்து தொமுசவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் ஜனவரி 15ம் தேதிக்குள் ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் நேரு கூறினார்.
இந்த ஊதிய உயர்வின் படி, அடிப்படை சம்பளம் மற்றும் இதர படிகள் சேர்த்து 40 சதவீதம் சம்பளத்தில் கூடுதலாக கிடைக்கும்.
தொமுச தலைவர் குப்புசாமி:
ஊதிய உயர்வு, பதவி உயர்வு, பல்வேறு பேட்டா உயர்வு என எல்லாவற்றையும் ஒப்பிடும்போது மின்சாரத்துறை ஊழியர்களுக்கு இணையான சம்பளம்தான்.
பஸ் கட்டணம் உயர்த்தப்படாமல், போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் மீதான அக்கறையினால், இந்த ஊதிய உயர்வை முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். ஊதிய உயர்வு ஊழியர்களுக்கு எவ்வளவு தொகை பொருந்தும் என்பது குறித்து நிதித்துறை ஆய்வு நடத்தி வருகிறது. அதன் பிறகுதான் இதுகுறித்து ஒப்பந்தம் செய்யப்படும்.

No comments:

Post a Comment