தமிழகத்தில் உலக வங்கி உதவியுடன் 2006ம் ஆண்டு முதல் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படுத்தப்பட் டு வருகிறது. முதல் கட்டமாக 16 மாவட்டங்களில் உள்ள மிகவும் பின்தங்கிய 70 வட்டாரங்களில் சுமார் ளீ717 கோடி திட்ட மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக் கான பயிற்சி அளித்து வேலை வாய்ப்பு பெற்றுத் தருவது மற்றும் மாற்றுத் திறனாளிகள், நலிவுற்றோருக்கு சிறப்பு உதவிகள் அளிப்பது ஆகியவை முக்கியத் திட்டங்கள்.
இத்திட்டத்தின் செயல் பாடு குறித்து ஆய்வு செய்ய உலக வங்கி குழுவின் தலை வர் நடாஷா ஹேவார்டு, கெவின்கிராக்போர்டு மற்றும் வரலஷ்மி வேமுரு ஆகியோர் தமிழகத்துக்கு வந்துள்ளனர். அவர்கள், துணை முதல்வர் மு.க.ஸ்டா லினை 16.12.2010 அன்று அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினர்.
உலக வங்கி குழுவின் தலைவர் நடாஷா கூறுகை யில், “உலக வங்கி உதவியோடு செயல்படுத்தும் பல்வேறு வாழ்வாதார திட்டங்களில், தமிழ்நாட்டில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. உலக வங்கி திட்டங்களில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் எல்லா இடங்களிலும் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்படும் திட்டம் என மதிப்பிட்டுள்ளோம்.
இதற்காக பெரும் முயற்சி எடுத்துக்கொண்ட துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசு அலுவலர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம்” என்றார்.
தமிழகத்தில் நலத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுவதற்காக, ஏற் கனவே உலக வங்கி கூடுத லாக 50 வட்டாரங்களில் 1661 ஊராட்சிகளில் இந்த திட்டத்தை ளீ950 கோடி மதிப்பீட்டில் விரிவுப்படுத்த வும் அனுமதி அளித்துள் ளது. இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை முதன்மை செயலாளர் கா.அலாவுதீன், வாழ்ந்து காட்டுவோம் திட்ட இயக்குனர் தீரஜ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்
No comments:
Post a Comment