கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, December 26, 2010

ஆ.இராசாவை கைது செய்யச் சொல்லும் அம்மையாரே! நீங்கள் இதைப் பேசலாமா?


சி.பி.அய். என்றால் என்ன வானத்திலிருந்து குதித்தவர்களா? என்று முன்பு கேட்ட அம்மை யாருக்கு, ஞானோதயம் இப்போது பிறந்துவிட்டது!

ஆ.இராசாவை உடனே கைது செய்யவேண் டுமாம்!

ஒரு எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் இவ்வளவு அறியாமையாக, சட்ட சூன்யமாகவா இருப்பது?

விசாரணையே இனிமேல்தான் தொடங்கப் போகிறது!

அவர் என்ன பிரகடனப்படுத்தப்பட்ட குற்ற வாளியா?

உங்களுக்கும் சேர்த்து (கொடநாடு எஸ்டேட் உள்ள) அவர் நீலகிரி தொகுதி மக்களவை உறுப்பினர்.

அவர்மீது குற்றப் பத்திரிகை ஏதாவது இப்போது உண்டா?

மாறாக, அம்மையார் ஜெயலலிதா மீது, சி.பி.அய். நீதிமன்றத்தில் வெளிநாட்டுப் பணம் வந்ததை - தன் கணக்கில் வரவு வைத்துக்கொண்ட அந்நியச் செலாவணி மோசடி வழக்கு போட்டு எத்தனையோ ஆண்டுக்கணக்கில் நடைபெறுகிறதே - இதற்காகக் கைது செய்யப்பட்டு சிறையிலா இருக்கிறார் அம்மையார்?

கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறியலாமா? ஊழல் வழக்குகள், சொத்துக் குவிப்பு வழக்குகள் - இவைகள் மட்டுமா? கொட நாடு பிளசண்ட் ஸ்டே வழக்கில் கூட சிக்கவில்லையா?

எடுத்த எடுப்பில் (Prima Facie) வழக்கு இராசாமீது இல்லாதபோது எப்படிக் கைது செய்வார்கள்?

அவ்வளவு ஆணவம் - அறியாமை! ஆரிய தர்மம் இதுதான் போலும்!

நன்றி : விடுதலை .

No comments:

Post a Comment