கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, December 26, 2010

அவமரியாதைகளையெல்லாம் தாங்கி வளர்ந்த எங்கள் இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம்! - முதலமைச்சர் கலைஞர் பேட்டி



2ஜி அலைக் கற்றை தொடர்பாக சோதனைகள் நடைபெறுவது - திமுகவுக்கு ஏற்பட்ட அவமரியாதையாகக் கருதுகிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்த முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் அவமரியாதைகளை எல்லாம் தாங்கி வளர்ந்த இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம் என்று பதில் அளித்தார்.

கலைஞர் அவர்கள் தலைமையில் கரூர் மாவட்ட கழக நிருவாகிகள் கூட்டம் 20.12.2010 அன்று காலை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது.

கூட்டம் நிறைவுற்றதும் கலைஞர் அவர்கள் வந்தபோது செய்தியாளர் கள் பேட்டி கண்டனர். அப்போது, முதல்வர் கலைஞர் அவர்கள், தி.மு.க. - காங்கிரஸ் உறவைப் பிரிக்க முடியாது என்று கூறினார்.

கலைஞர் அவர்கள் அளித்த பேட்டி வருமாறு:-

செய்தியாளர்: (பதற்றத்துடன்) சி.பி.அய். சார்பில் இரண்டாவது முறையாக தமிழகத்தில் முன்னாள் அமைச்சர் ராசா நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் எல்லாம் சோதனை நடைபெற்றுள்ளதே?

முதல்வர் கலைஞர்: இன்றைக்கா சோதனை நடந்துள்ளது, உங்கள் வீட்டில் ஏதோ சோதனை நடந்ததைப் போல பதற்றம் காட்டுகிறீர் களே?

செய்தியாளர்: இந்தச் சோத னையை தி.மு. கழகத்திற்கு ஏற்பட்ட அவமரியாதையாகக் கருதுகிறீர்களா?

கலைஞர்: அவமரியாதைகளை யெல்லாம் தாங்கி வளர்ந்த இயக்கம் தான் சுயமரியாதை இயக்கம்.

செய்தியாளர்: இராசாவிற்கு சி.பி.அய். சார்பில் இன்றைக்கு சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாக செய்திவந்திருக்கிறதே?

கலைஞர்: அது அவர்களுடைய வழக்கமான பாணி. இதுபோன்ற விஷ யங்களில் சோதனைகள் நடைபெற்ற பிறகு கேள்விகள் கேட்பது வழக்கம். அந்த முறையில் கேள்விகளை அவர் கள் கேட்கக் கூடும். அதற்கு அவர் பதில் சொல்லுவார்.

செய்தியாளர்: தி.மு.கழகத்திற்கும், காங்கிரசுக்கும் உறவு எப்படி உள்ளது?

கலைஞர்: உங்களால் வெட்ட முடியாது.

செய்தியாளர்: இராசாமீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுமா?

கலைஞர்: குற்றம் நிரூபிக்கப்பட் டால் நடவடிக்கை உண்டு என்று முன்பே கூறியிருக்கிறேன்.

செய்தியாளர்: அமைச்சர் பூங் கோதையும் நீராராடியாவும் தொலைப் பேசியில் பேசியதைப் பற்றி?

கலைஞர்: இரண்டு பெண்கள் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அதில் உங்களுக்கென்ன? அந்த அம்மையார் ஒரு வடநாட்டுப் பெண் மணி. இவர் தென் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்மணி.

செய்தியாளர்: சோனியா காந்தி நேற்று பேசும்போது ஊழல்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பேசியிருக்கிறாரே?

கலைஞர்: அதற்காக நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்.

இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் பேட்டியளித்தார்.

No comments:

Post a Comment