கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, December 13, 2010

ஒருமை பல்கலை இல்லை:கலைஞர் திட்டவட்டம்


அரசு உதவி பெறும் கல்லூரிகளான கோவை பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியையும், மதுரை தியாகராஜர் கலை அறிவியல் கல்லூரியையும் தனியார் ஒருமை பல்கலைக்கழகங்களாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு கல்லூரி ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நேற்று (12.12.2010) உண்ணாவிரதம் இருந்தனர்.

முதல்வர் கலைஞர் இன்று (13.12.2010) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள இரண்டு கல்லூரிகளை தனியார் சுயநிதி ஒருமைப் பல்கலைக் கழகங்களாக மாற்றுவதற்கு தமிழக உயர்கல்வித் துறையின் சார்பில் முயற்சித்து வருவதாகக் கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒரு சில ஆசிரியர் சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதே கருத்தினை பா.ம.க. நிறுவனர் டாக்டர் இராமதாஸ் அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளார். இந்தப் போராட்டம் குறித்த செய்தியினை வெளியிட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளேடு அந்தச் செய்தியில், 2008 இல் நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் ஒருமைப் பல்கலைக் கழகங்களாக மாற்றும் சட்ட முன் வரைவை உயர் கல்வித் துறை அமைச்சர் பேரவையில் கொண்டு வந்ததாகவும், அந்தச் சட்ட முன் வடிவுக்கு எதிர்க் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நேரத்தில் நானே எழுந்து அந்தச் சட்ட முன் வரைவு பேரவையின் தேர்வுக் குழுவிற்கு (செலக்ட் கமிட்டி) அனுப்பி வைக்கப்படும் என்றும், ஆசிரியர்களையோ, மாணவர்களையோ பாதிக்கும் எந்த முடிவையும் இந்த அரசு மேற் கொள்ளாது என்றும் உறுதி அளித்தாகவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. நான் கூறியவாறே அந்தச் சட்ட முன்வடிவு பேரவையில் நிறைவேறா மல், தேர்வுக் குழுவுக்கு அனுப்பப்பட்டு விட்டது. பேரவையின் தேர்வுக் குழுவிலும் எந்த முடிவும் எடுக்கப்பட்டு விடவில்லை. பேரவையின் தேர்வுக் குழு 14-12-2010 அன்று கூடுவதாக இருந்தது கூட மழையின் காரணமாக ரத்து செய்யப் பட்டுவிட்டது. மேலும் அந்தச் சட்ட முன் வடிவை நிறைவேற்று வதற்கான எந்த முயற்சிலும் உயர் கல்வித் துறை ஈடுபடவில்லை. இதற்கிடையே ஒரு சில ஆசிரியர் சங்கங்கள் பேரவையின் பொறுப்புக் குழு 14 ஆம் தேதி கூடி எங்கே முடிவெடுத்து விடப் போகிறார் களோ என்று நினைத்துக் கொண்டு, முன் கூட்டியே போராட்டத்தை அறிவித்து நடத்து கிறார்கள். பேரவையில் ஆசிரியர்களையும், மாணவர்களையும் பாதிக்கும் எந்த முடிவையும் இந்த அரசு எடுக்காது என்று நான் கொடுத்த உறுதி மொழிக்கு மாறாக எந்தவிதமான நடவடிக் கையையும், இந்த அரசோ, உயர் கல்வித் துறையோ எடுக்காது. எனவே ஒருமைப் பல்கலைக் கழகங்களாக்கும் முயற்சியில் இந்த அரசின் உயர் கல்வித் துறை ஈடுபட்டிருப்பதாக ஆசிரியர் சங்கங்கள் போராட்டம் நடத்தத் தேவையில்லை.

இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment