அதிமுக அரசு தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போடப்படுவதாகவும், அதை கண்டிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 01.08.2011 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிமுக அரசு தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போடப்படுவதாகவும், அதை கண்டிக்கும் வகையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஜவகர் மைதானத்தில் மாவட்டச் செயலாளர் கருப்புசாமி பாண்டியன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
கெடுக்காதே கெடுக்காதே மாணவர் நலனை கெடுக்காதே. சமச்சீர் கல்வியை நடைமுறைப்டுத்து. போடாதே போடாதே பொய் வழக்குப் போடாதே என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திமுகவினர் கோஷம் எழுப்பினர்.
35 பெண்கள் உள்பட ஆயிரத்து 400 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் கருப்பு சாமி பாண்டியன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், பாளையங்கோட்டை எம்எல்ஏ டிபிஎம் மைதீன்கான், எம்பி தங்கவேலு ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
கைது செய்யப்பட்ட கருப்புசாமி பாண்டியன் பேசும்போது, தமிழகம் திறந்தவெளி சிறைச்சாலையாகி விட்டது. அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி நிலவுகிறது என்றார்.
தூத்துக்குடி திமுக மாவட்டச் செயலாளர் பெரியசாமி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர். முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், ஜெயதுரை எம்பி, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
ஆர்ப்பாட்டத்தில் துரைமுருகனுக்கு நெஞ்சுவலி :
வேலூரில் திமுகவினர் அரசுக்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் துரை முருகன் திடீரென தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறினார். அதனால் அவருக்கு உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. கோவை தமிழ்நாடு ஹோட்டல் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கோவை மாவட்ட திமுக செயலாளரும், திமுக முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் பழனிச்சாமி தலைமையிலான 2300 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் 250 பெண்களும் அடங்குவர்
சிகிச்சை முடிந்த பின்னர் சற்று ஓய்வு எடுத்த அவர், உடனடியாக வீடு திரும்பினார். துரை முருகனுடன் சேர்ந்து கைது செய்யப்பட்ட மற்ற திமுகவினர் அனைவரும் உடனே விடுவிக்கப்பட்டனர்.
அதிமுக அரசு தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போடப்படுவதாகவும், அதை கண்டிக்கும் வகையிலும் சேலத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அழைத்துச் செல்ல போலீஸ் வாகனம் இல்லை: நடந்தே சென்ற பொன்முடி அதிமுக அரசு தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போடப்படுவதாகவும், அதை கண்டிக்கும் வகையிலும் விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் எமஎல்ஏ உதய சூரியன், அங்கையர்கண்ணி, செஞ்சி நடராஜன், மாவட்ட அவைத் தலைவர் ராதாமணி, நகர செயலாளர் பாலாஜி உள்பட மொத்தம் 2000 பேர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசார் கைது செய்தனர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, சொத்து குவிப்பு வழக்கில் வாய்தா மேல் வாய்தா வாங்கும் ஜெயலலிதாவுக்கு திமுகவினர் மீது பொய் வழக்குப் போடுவதற்கு என்ன தகுதி இருக்கிறது. இரண்டரை மாத காலமாக சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தாததால், பள்ளிக் கூடங்களுக்கு மாணவர்கள் புத்தகம் இல்லாமல் சென்று வருகின்றனர். மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் எண்ணம் கொண்ட ஜெயலலிதா திருந்த வேண்டும் என்றார். பொய் வழக்குப் போடும் ஜெயலலிதா அரசை துரத்த வேண்டும் - கே.என்.நேரு : திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் திமுக எம்.எல்.ஏ., சவுந்திரபாண்டியன், கழக வெளியீட்டுச் செயலாளர் செல்வேந்திரன், தங்கராசு, திமுக எம்.எல்.ஏ.,கள் உள்ளிட்ட 3000 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். செய்தியாளர்களிடம் பேசிய கே.என்.நேரு, அரசாங்கம் குறைந்த அளவு எண்ணிக்கையை காண்பிக்க வேண்டும் என்பதற்காக 20 பேருந்துகளில் மட்டும் திமுகவினரை கைது செய்து ஏற்றி உள்ளது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மற்ற திமுக தொண்டர்களை கைது செய்யாமல் அனுப்பிவிட்டது என்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வ கணபதி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகர மேயர் ரேகா பிரியதர்ஷினி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏர்காடு தமிழ்ச் செல்வன், வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜேந்திரன் மற்றும் வீரபாண்டி ஆறுமுகத்தின் இரண்டாது மனைவியின் மகன் பிரபு உள்பட ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
மாநகராட்சி அலுவலகத்தில் பின்புறம் உள்ள மூன்று திருமண மண்டபங்களில் கைது செய்யப்பட்டவர்கள் அடைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட திமுகவிரை அழைத்துச் செல்ல வாகனங்கள் இல்லாததால் காவல்துறையினர் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது காவல்துறையினரிடம் பேசிய பொன்முடி, கைது செய்தீர்கள் அழைத்து செல்ல வாகனங்கள் கொண்டு வரல்லையா. திமுகவினரை அழைத்துச் செல்லும் அளவுக்கு வாகனங்கள் இல்லை என்று நினைக்கிறேன். நாங்களே நடந்து வருகிறோம். எங்கே அடைக்கப் போகிறீர்கள் சொல்லுங்கள் என்றார்.
பிறகு போலீசார் சொன்ன எம்கேஆர் திருமண மண்டபத்துக்கு திமுகவினருடன் நடந்து சென்றார் பொன்முடி. விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை பொன்முடியுடன் நடந்து சென்ற திமுகவினர் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியப்படியே சென்றனர்.
திருச்சியை சுற்றியுள்ள 7 செக்போஸ்ட்டில் திமுகவினரை உள்ளே நுழைய விடாமல் போலீசார் கைது செய்து விட்டனர்.
திமுக நடத்திய அறவழிப்போராட்டத்தை தடுக்கும் முயற்சியோடு மாவட்டத்தின் எல்லை செக்போஸ்ட்டில் திமுக தொண்டர்களை தடுத்து நிறுத்தியது சட்ட விரோதமானது. அதையும் மீறி ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருப்பது திமுகவினர் மீது பொய் வழக்குப் போடும் ஜெயலலிதா அரசை துரத்த வேண்டும் என்பதை காண்பிக்கிறது.
No comments:
Post a Comment