சமச்சீர் கல்வி வழக்கில் தமிழக அரசின் கல்வித்துறை செயலாளருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சமச்சீர் கல்வி வழக்கை கடந்த வாரம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சவுகான், பாஞ்சால், தீபக்வர்மா ஆகியோர் விசாரித்தனர். தமிழக அரசு சார்பாக வக்கீல் பி.பி.ராவ், குரு கிருஷ்ணகுமார், அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆகியோரும், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சார்பாக அரிமா சுந்தரம், ராஜீவ் தவான் ஆகியோரும் வாதாடினர்.
இதைத்தொடர்ந்து, வழக்கு 02.08.2011 அன்று 5ம் நாளாக விசாரணைக்கு வந்தது. அப்போது, பெற்றோர் சார்பாக வக்கீல்கள் அந்தி அர்ஜூனா, கங்குலி, ரவிவர்மா, விடுதலை, பாலு ஆகியோர் ஆஜரானார்கள்.
மூத்த வக்கீல்கள் அந்தி அர்ஜூனா, கிருஷ்ணமணி, விடுதலை ஆகியோர் 02.08.2011 அன்று வாதாடியதாவது:
2ம் வகுப்பு 8ம் வகுப்பு பாடப்புத்தகத்துக்கு எந்தவிதமான ஆட்சேபணையும் 9 பேர் குழு தெரிவிக்கவில்லை. எனவே, அந்த 2 வகுப்புகளுக்கு பாட புத்தகம் வழங்கலாம். தமிழ், கணிதம் பாட புத்தகத்தில் எந்த குறையும் இல்லை. அதையும் விநியோகிக்கலாம்.
தமிழக அரசின் திருத்த சட்டம் இந்திய அரசியில் சட்டம் பிரிவு 14க்கு எதிரானது. எனவே, அதை ரத்து செய்ய வேண்டும். சட்டத்திருத்தம் செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது சரியானது. அதை ரத்து செய்யக் கூடாது.
இவ்வாறு அவர்கள் வாதாடினர்.
அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, “உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கல்வித்துறை செயலாளர் சமச்சீர் கல்வியை அமல்படுத்தும் சட்டம் சட்ட விரோதமானது; அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இது ஏற்கதக்கதல்ல என்று கூறியிருக்கிறார். ஆனால், அந்த சட்டம் உயர் நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்படி என்றால் அரசு கல்வித்துறை செயலாளர் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் சட்டவிரோதமானது என்று கூறுகிறாரா? இவர் 9 பேர் குழுவில் இடம் பெற்றால், எப்படி அது நடுநிலையாக இருக்க முடியும்?. இதை ஏன் நியமனத்தின் போது சமச்சீருக்கு ஆதரவான வக்கீல்கள் எதிர்க்கவில்லை?” என்று கேள்வி எழுப்பினர். விசாரணை 03.08.2011 அன்று தொடர்ந்து நடக்கிறது.
திருவள்ளுவர் படம் நீக்க ஸி30 லட்சம் - பெற்றோர் தரப்பு வக்கீல்கள் வாதம்:
சமச்சீர் கல்வி இந்த ஆண்டு அமல்படுத்த வேண்டும். சமச்சீர் கல்வியை தள்ளிவைத்து தமிழக அரசு கொண்டு வந்த சட்ட விரோதமானது. சமச்சீர் கல்வி புத்தகத்தில் திருவள்ளுவர் படத்தை நீக்கியுள்ளனர். திருவள்ளுவர் படத்தை ரூபாய் 30 லட்சம் செலவு செய்து மறைத்துள்ளனர்.
No comments:
Post a Comment