அ.தி.மு.க. அரசை கண்டித்து மதுரையில் தடையை மீறி நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
பொய் வழக்கு போடும் அ.தி.மு.க. அரசை கண்டித்து மாநகர், புறநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் மதுரை தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. திடீரென்று 01.08.2011 அன்று ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸ் தடை விதித்தது. தடையை மீறி மாவட்டம் முழுவதும் இருந்து தி.மு.க.வினர் திரண்டனர்.
அவர்கள் தலைமை தபால் நிலையம் வரவிடா மல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டனர். நகரை சுற்றியுள்ள 14 சோதனை சாவடிகளில் தீவிர சோதனை நடத்தி, தி.மு.க. கொடியுடன் வந்த வாகனங்களில் இருந்தவர்களை கீழே இறக்கி விட்டனர். நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாகனங்களில் வரவிடாமல் போலீஸ் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டன. யானைக்கல் அருகில் வக்கீல்புதுத் தெருவை அடைத்து போலீஸ் வஜ்ரா வாகனம் நிறுத்தப்பட்டு, பஸ்கள் வடக்கு மாசி வீதியில் திருப்பி விடப்பட்டன. இதனால் முக்கிய வீதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. போராட்டத்தை முறியடிக்க போலீஸ் கெடுபிடி நடவடிக்கைகளுடன் �அலாட்�டாக இருந்தது.
இத்தனை தடைகளையும் மீறி தலைமை தபால் நிலையம் முன் காலை 9 மணிக்கு தி.மு.க. தொண்டர்கள் கொடிகளுடன் வந்து கோஷமிட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர். சிறிது நேரத்தில் ரயில் நிலையம் முன் இருந்து புறநகர் மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் பொன்முத்துராமலிங்கம், தமிழரசி, மேயர் தேன்மொழி, துணை மேயர் மன்னன், முன்னாள் எம்எல்ஏக்கள் வேலுசாமி, கவுஸ்பாட்சா, நகர் மாவட்ட அவைத்தலைவர் இசக்கிமுத்து, மாவட்ட ஊராட்சி தலைவர் அசோக்குமார் மற்றும் தி.மு.க.வினர் கொடிகளுடன் ஊர்வலமாக மேலவெளிவீதியில் வந்தனர். அவர்கள் முன் போலீஸ் வேன்கள் வேகமாக வந்து தடுக்க முற்பட்டது. அதை மீறி தபால் நிலையத்துக்கு வந்தடைந்தனர். அதே நேரத்தில் வடக்கு வெளி வீதி, மதுரை கோட்ஸ் மேம்பாலம் பகுதியில் இருந்தும் ஊர்வலமாக திரண்டு ஆயிரக்கணக்கில் குவிந்தனர்.
போலீஸ் திணறிய நிலையில் பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து 20&க்கும் மேற்பட்ட பஸ்கள் வரழைக்கப்பட்டன. அனைவரையும் கைது செய்து பஸ்களில் ஏற்றினர்.
தொடர்ந்து பகல் 12 மணி வரை சாரை சாரையாக ஆர்ப்பாட்டத்துக்கு ஆவேச கோஷத்துடன் வந்து கொண்டே இருந்தனர். முன்னாள் அமைச்சர் செல்வராஜ், முன்னாள் மேயர் குழந்தைவேலு, புறநகர் மாவட்ட நிர்வாகிகள் அருணாசலம், கண்ணன், எம்எல்ராஜ், சவுந்திரபாண்டியன், தேவகிஅய்யாவு, இளைஞரணி ஜெயராமன், தங்கமலைப்பாண்டி, மண்டல தலைவர்கள் நாகராஜன், மாணிக்கம், ஒன்றிய செயலாளர் ரகுபதி, அயூப்கான், பேரூர் செயலாளர்கள் ஜெயராமன், பால்பாண்டி, சுந்தர்ராஜன், மாணவரணி கலாநிதி, பகுதி செயலாளர்கள் கோபிநாதன், ஒச்சுபாலு உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். 12 மணிக்கு பிறகு வந்த ஏராளமான தொண்டர்கள் கைது செய்யப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டனர். கைதானவர்கள் 8 திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
போலீஸ் தரப்பில் 1500 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தனர். மாவட்ட செயலாளர் மூர்த்தி கூறும்போது �மதுரை ஆர்ப்பாட்டத்திலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆர்ப்பாட்டத்துக்கு வரவிடாமல் தடுத்தும் மொத்தம் 10 ஆயிரம் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்� என்றார்.
அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
அவனியாபுரம்: அவனியாபுரம் பஸ்ஸ்டாண்ட் பகுதியில் நகராட்சி துணைத்தலைவர் கருப்பசாமி உள்ளிட்ட திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியல் செய்த நகர் திமுக துணை செயலாளர் ஸ்ரீதரன், வட்ட செயலாளர்கள் பாண்டியராஜன், மகேஸ்வரன், குமார், அழகர், சிட்டிபாபு, மாயன், முருகன், கண்ணன், ராஜேந்திரன், பஞ்சநிதி உள்ளிட்டோரை அவனியாபுரம் போலீசார் கைது செய்தனர்.
மேலூர்: மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்ற மேலூர் நகராட்சி முன்னாள் தலைவர் கொன்னடியான், கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர் புகழேந்தி, மதுரை மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் வைரம், கவுன்சிலர்கள் நீதிபதி, மாரிமுத்து, ஜானகிராமன் உள்ளிட்ட 15பேரை மேலூர் போலீசார் கைது செய்தனர்.
மேலு�ர் நகர் செயலாளர் முகமது இப்ராஹிம் சேட் தலைமையில், மதுரை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள சென்ற முன்னாள் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் சேதுபதி, நகர் துணை செயலாளர் கங்காராமசாமி, முன்னாள் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் முருகானந்தம், மாவட்ட பிரதிநிதி முருகன் ஆகியோரும் வழியிலேயே கைது செய்யப்பட்டனர்.
திருமங்கலம்: மதுரையில் நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த கல்லுப்பட்டி நகர் செயலாளர் பெருமாள், சேடப்பட்டி யூனியன் தலைவர் தமிழ்செல்வி, திருமங்கலம் யூனியன் துணைத்தலைவர் ஜெயராஜ் உட்பட 30பேரை கப்பலு�ர் ரிங்ரோட்டில் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் - 2 ஆயிரம் திமுகவினர் கைது :
திண்டுக்கல்லில் நடந்த ஆர்பாட்டத்தில் 2 ஆயிரம் திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
ஜெயலலிதா அரசின் அராஜகப்போக்கு மற்றும் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் 01.08.2011 அன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. திண்டுக்கல்லில் நகராட்சி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட அவைத் தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் நாகராஜன் வரவேற்றார். அதில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான ஐ.பெரியசாமி பேசியதாவது:
குற்றச்செயல்களில் தொடர்பில்லாதவர்கள் மீது தமிழக அரசு வழக்கு தொடுத்து வருகிறது. கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடாத இயக்கம் திமுக. யார் சொத்தையும் அபகரித்ததாக சரித்திரமே கிடையாது. ஏமாற்று செயலில் ஈடுபட்டதாக இன்று திமுக.வினர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு வருகிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
சட்டத்தை இஷ்டத்திற்கு வளைத்து அப்பாவிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுபோன்று எத்தனை வழக்குகள் போட்டாலும், அதை சந்திக்க தயாராக இருக்கிறோம். சமச்சீர் கல்வி திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றமே தீர்ப்பு கூறிய பிறகும் அதை இந்த அரசு ஏற்கவில்லை. ஜெயலலிதா இனி எப்போதும் திருந்தப் போவதே இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
திண்டுக்கல், சாணார்பட்டி ஒன்றியச் செயலாளர்கள் சுப.பெருமாள்சாமி, விஜயன், நகரச் செயலாளர் பஷீர்அகமது, இளைஞரணி அமைப்பாளர் அசன்முகமது, துணை அமைப்பாளர் செந்தில்குமார், பொருளாளர் நடராஜன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் கவிதாபார்த்திபன், வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் பிரியம் நடராஜன், எரியோடு நகரச் செயலாளர் ஜீவா, மாவட்டப்பிரதிநிதி ஆனந்தக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், அதிமுக அரசிற்கு எதிராக கோஷங்கள் முழங்கப்பட்டன. அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடந்ததால், 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். டிஎஸ்பி.க்கள் சுருளிவேல், நடராஜமூர்த்தி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். கோட்டாட்சியர் பெருமாள், தாசில்தார் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறையினர் சட்டஒழுங்கு குறித்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
பழநி நகர திமுக செயலாளர் வேலுமணி, ஒன்றிய செயலாளர் மாரியப்பன், நகர்மன்றத் துணைத்தலைவர் ஹக்கீம், பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணி, வழக்கறிஞர்கள் மகேந்திரன், ஆரிப்தீன், பேரூராட்சித்தலைவர்கள் பாலசுப்பிரமணிய துரைராஜா, கார்த்திகேயன், முஸ்தபா, முன்னாள் எம்.எல்.ஏ கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் நகர்மன்றத்தலைவர் உமாமகேஷ்வரி கலந்து கொண்டனர்.
தேனியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் - ஆயிரத்து 500 திமுகவினர் கைது :
அ.தி.மு.க அரசின் அராஜக போக்கைக் கண்டித்து தி.மு.க சார்பில் தேனியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் 1500 பேர் கைது செய்யப்பட்டனர்.
அ.தி.மு.க தலைமையிலான தமிழக அரசு தி.மு.க வினர் மீது தொடர்ந்து வழக்கு பதிவு செய்து கைது செய்து வருவதை கண்டிக்கும் வகையில் தி.மு.க சார்பில் 01.08.2011 அன்று தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது.
தேனி மாவட்ட தி.மு.க செயலாளர் மூக்கையா தலைமையில் இப்போராட்டம் தேனி நகரில் பெரியகுளம் சாலையில் உள்ள ஸ்டேட் வங்கி அருகில் நடத்த அனுமதி பெறப்பட்டது. ஆனால் 01.08.2011 அன்று போலீசார் திடீரென அனுமதி மறுத்தனர். இதனையடுத்து, தி.மு.க வினர் ஸ்டேட் பாங்கு எதிரில் உள்ள நகராட்சி சந்தையில் கூடினர். காலை 10.30 மணி அளவில் தி.மு.க வினர் ஆர்ப்பாட்டத்திற்கு தயாரானபோது, எஸ்.பி., பிரவீன்குமார்அபினபு தலைமையிலான போலீசார் ஆர்ப்பாட்டத்திற்கு அனு மதி மறுக்கப்பட்டுள்ளதால் அனைவரையும் கைது செய்வதாக கூறி போலீஸ் வேனில் ஏற்றினர்.
இதில் முதல் வேனில் மாவட்ட செயலாளர் மூக்கையாவை ஏற்றிக் கொண்டு அவரை பெரியகுளம் சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். அதன்பிறகும் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான கட்சியினரை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் நடத்தாமல் கைதாக மாட்டோம் எனக் கூறி ஸ்டேட் பாங்க் அருகில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர், சாலையின் நடுவே அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
போலீசார் எச்சரித்தும் கேளாமல் கட்டுக்கடங்காத கட்சியினர் பெரியகுளம் சாலையில் கண்டன ஊர்வலமாக நடந்து சென்றனர். அப்போது நூற்றுக்கணக்கான தொண்டர்கள் ஊர்வலமாக அ.தி.மு.க அரசையும் ஜெயலலிதாவையும், போலீஸ் துறையையும் கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு நடந்து சென்றனர். இதனையடுத்து, இச்சாலையில் கான்வென்ட் மருத்துவமனை அருகில் அனைத்து கட்சியினரும் கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் தேனி&பெரியகுளம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நேற்றைய போராட்டத்தில் கம்பம் எம்.எல்.ஏ கம்பம் ராமகிருஷ்ணன், டெல்லி முன்னாள் சிறப்பு பிரதிநிதி செல்வேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் ஆசையன், லட்சுமணன், பன்னீர்செல்வம், தேனி நகர தி.மு.க செயலாளர் இலங்கேசுவரன், ஒன்றிய செயலாளர் ரத்தினசபாபதி, பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் அன்பழகன், வழக்கறிஞர் சுப்ரமணி, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள், பல்வேறு கட்சி அணி நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து போலீசார் இப்போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்து 500 பேரை கைது செய்து தேனியில் உள்ள நான்கு தனியார் திருமண மண்டபங்களில் சிறை வைத்தனர்.
சிவகங்கையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் - திமுகவினர் 756 பேர் கைது :
சிவகங்கையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் - திமுகவினர் 756 பேர் கைது :
திமுகவினர் மீது பொய்வழக்குகள் போடப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து சிவகங்கையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 756 பேர் கைது செய்யப்பட்டனர்.
திமுகவினர் மீது தொடர்ந்து பொய் வழக்குகள் போடப்படுவதை கண்டித்து 01.08.2011 அன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்திருந்தது. சிவகங்கையில் கலெக்டர் அலுவலகம் முன்பாக மாவட்ட திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் தென்னவன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் சேங்கைமாறன், மணிமுத்து, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ரவி, துணை அமைப்பாளர்கள் பள்ளத்தூர் ரவி, முருகானந்தம், நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தையொட்டி, மாவட்ட எஸ்.பி.பன்னீர்செல்வம், கூடுதல் எஸ்.பி. கண்ணன், டி.எஸ்.பி. இளங்கோவன் ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. திமுகவினர் மீது தொடர்ந்து பொய் வழக்குகள் போடப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷம் எழுப்பினர்.
நகரச் செயலாளர் ஆனந்த், மதர்சேட், துரை கணேசன், ஒன்றியச் செயலாளர்கள் முத்துராமலிங்கம், ராமசாமி, ராஜாமணி, மேப்பல்சக்தி, செழியன், ஊராட்சி தலைவர் வேம்பங்குடி ஜெயராமன், பொதுக்குழு உறுப்பினர்கள் சுவாமிநாதன், மகாதேவன், நகர்மன்ற கவுன்சிலர்கள் ஜெயகாந்தன், சூரியநாராயணன், தவமுருகன், ராஜபாண்டி, அமுதாபாண்டி, தொ.மு.ச. நிர்வாகிகள் முத்தலிபு, தடியப்பன், மோகன்தாஸ், மாணவரணி அயூப்கான், நகர பொருளாளர் விஜயகுமார், விவசாய அணி அருணாச்சலம், தொண்டரணி சண்முகம், காரைக்குடி நகர்மன்றத் தலைவர் முத்துதுரை, மாவட்ட மகளிரணி தவமணி துரைச்சாமி, இலக்கிய அணி முத்துவளவன், வழக்கறிஞர்கள் கைலாசம், அழகர்சாமி, சிவக்குமார், முத்துமுனியாண்டி மற்றும் 8 பெண்கள் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ததாக கூறி திமுகவினர் 756 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான அனைவரும் பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
அதிமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் - ராமநாதபுரத்தில் திமுகவினர் 784 பேர் கைது :
திமுகவினர் மீது பொய் வழக்கு பதிவு செய்வதை கண்டித்தும், சமச்சீர் கல்வியை அமல்படுத்தக் கோரியும் ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற 18 பெண்கள் உட்பட 784 திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.
திமுகவினர் மீது பொய் வழக்குகள் பதிவு செய்வதை கண்டித்தும், சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்தக் கோரியும் ராமநாதபுரம் அரண்மனை முன்பு திமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சுப.தங்கவேலன் எம்எல்ஏ தலைமையில் ரித்தீஷ் எம்பி, முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, திமுக இளைஞரணி மாநில துணை அமைப்பாளர் சம்பத், நயினார்கோவில் ஒன்றிய செயலாளர் திவாகர், முன்னாள் எம்எல்ஏக்கள் காதர்பாட்சா என்ற வெள்ளைச்சாமி, முருகவேல், மாவட்ட துணை செயலாளர் அகமது தம்பி, ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், கதிரவன், சங்கு என்ற முத்துராமலிங்கம், நாகு, ரவி, மண்டபம் ஒன்றிய தலைவர் கலைமதிராஜா, கண்ணகி, ஒன்றிய கவுன்சிலர் கனகராஜன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் செந்தூர்பாண்டி, ராமர், கீழக்கரை நகராட்சி தலைவர் பஷீர், நகர் செயலாளர் கருணாநிதி, இளைஞர் அணியைச் சேர்ந்த துரைச்சாமி, நாகநாத சேதுபதி, பிரபாகர், பகவதி செல்வராஜ், நகராட்சி கவுன்சிலர்கள் கார்மேகம், மில்லர், மஞ்சுளா, மாவட்ட கவுன்சிலர் சுஜாதா, மகளிர் அணி செல்வமேரி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி அளிக்காததால் அனைவரையும் கைது செய்து வேனில் ஏற்ற போலீசார் முயன்றனர். நூற்றுக்கணக்கான தொண்டர்கள் இருந்ததால் போலீஸ் வேனில் ஏற மறுத்து ஊர்வலமாக கோட்டைவாசல் விநாயகர் கோயில் வரை சென்றனர். அங்கு 16 பெண்கள் உட்பட 726 பேரை கைது செய்து, டெலிபோன் அலுவலகம் அருகில் உள்ள மஹாலில் தங்க வைத்தனர்.
மேலும் முன்னாள் எம்பி பவானி ராஜேந்திரன், நகர் செயலாளர் ரெத்தினம், ஒன்றிய செயலாளர் நல்லசேதுபதி, நகராட்சி கவுன்சிலர் நாகஜோதி, வாணி கருணாநிதி, முன்னாள் நகராட்சி கவுன்சிலர் சுபாஷ் சந்திரபோஸ், வக்கீல் கேசவன் உட்பட 58 பேரை கைது செய்து கேணிக்கரை அருகே உள்ள மஹாலில் தங்க வைத்தனர். பின்னர் மதியம் அனைவரையும் போலீசார் விடுவித்தனர்.
No comments:
Post a Comment