அதிமுக அரசை கண்டித்து, விருதுநகரில் திமுக சார்பில் தடையை மீறி ஆர்ப்பாட் டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட 48 பெண்கள் உட்பட 2,074 பேர் கைது செய்யப்பட்டனர்.
பொய் வழக்குகள் பதிவுசெய்து திமுகவினரை கைது செய்யும் அதிமுக அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் ஆக.1ல் ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், விருதுநகர் தேசபந்து மைதானத்தில் மாவட்ட திமுக சார்பில் 01.08.2011 அன்று தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். தங்கம் தென்னரசு எம்எல்ஏ முன்னிலை வகித்தார். மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் காலை 8 மணி முதல் தேசபந்து மைதானத்தில் குவிய துவங்கினர். ஆர்ப்பாட்டத்தை தடுக்கும் வகையில், விருதுநகர் டி.எஸ்.பி. ராமமூர்த்தி தலைமையில் சுமார் 400 போலீசார் குவிக்கப்பட்டனர்.
சாத்து�ர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு எம்எல்ஏ தலைமையில் தொண்டர்கள் அணிவகுத்து தேசபந்து மைதானம் வழியாக மேடை நோக்கி சென்றனர். டிஎஸ்பி ராமமூர்த்தி இடைமறித்து, `ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியில்லை. மேடை ஏறி கோஷம் போடவும் அனுமதியில்லை’ என தெரிவித்தார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. திமுகவினர், அதிமுக அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். பொய் வழக்கு போட்டு கைது செய்தல், சமச்சீர் கல்வியை அமல்படுத்தாததை கண்டித்து கோஷமிட்டனர். பின்னர் சாத்தூர் ராமச்சந்திரன் போலீசாரிடம், `கைதுசெய்து கொள்ளுங்கள்’ என தெரிவித்தார். இதையடுத்து தொண்டர்கள் அணி, அணியாக போலீஸ் வாகனங்களை நோக்கிச் சென்றனர். ஆர்ப்பாட்டத் தில் கலந்து கொண்ட 48 பெண்கள் உட்பட 2 ஆயிரத்து 74 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாத்தூர் ராமச்சந்திரன் கூறுகையில், `அதிமுக அரசின் அராஜகத்தையும், பொய் வழக்கு போடப்படுவதையும் கண்டித்து, ஜனநாயக முறையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு, அனுமதி அளிக்கப்படவில்லை. மாவட்ட திமுக சார்பில் 5 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்’ என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், வி.பி.ராஜன், விஜயகுமார், இலக்கிய அணி மாநில செயலாளர் அமுதன், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் கடற்கரைராஜ், அருப்புக்கோட்டை ஓன்றிய சேர்மன் சுப்பாராஜ், மாநில நெசவாளர் அணி செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட துணைச் செயலாளர் ரூபசுந்தரி, நகராட்சி தலைவர் சிவப்பிரகாசம், நகரச் செயலாளர்கள் தனபாலன், மணி, குருசாமி, முனியாண்டி, சிவகுமார், செந்தில், முருகேசன், ஒன்றிய செயலாளர்கள் சின்னராஜ், வனராஜா, சண்முகச்சாமி, சாகுல்ஹமீது, முருகேசன், சிவராஜ், தனுஷ்கோடி, பொன்னுத்தம்பி, போஸ், பொதுக்குழு உறுப்பினர் லிங்கசாமி, மாவட்ட அவைத்தலைவர் பாண்டியன், மாவட்ட விவசாய அணி ராஜமாணிக்கம், மாவட்ட இளைஞரணி உதயசூரியன், தங்கராஜ், கந்தசாமி, மாவட்ட தொண்டரணி இணைச் செயலாளர் பிச்சை நாதன், விருதுநகர் இளைஞரணி மனோகரன், மதியழகன், ரமேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். கைதானவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
கைது எண்ணிக்கையை குறைக்க போலீசார் `தில்லாலங்கடி’ வேலை :
* ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கைதானவர்கள் போலீஸ் வேன், அரசு பஸ்களில் ஏற்றப்பட்டு, திருமண மண்டபங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். கைது எண்ணிக்கையை குறைக்கும் வகையில் போலீசார் திமுகவினர், பலரை பழைய பஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று இறக்கிவிட்டனர். `அரெஸ்ட் எதுவும் இல்லை. பஸ் ஏறி ஊருக்கு போங்கள்’ என தெரிவித்துள்ளனர். இதையறிந்த மாவட்ட செயலாளர் சாத்து�ர் ராமச்சந்திரன் போலீஸ் உயர் அதிகாரிகளிடம், `இந்த நடைமுறை சரியில்லை’ என தெரிவித்தார்.
* கைதான தொண்டர்கள் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள 3 மண்டபங்களில் வைக்கப்பட்டனர். பின்னர் அனைவரையும் ஒரே மண்டபத்தில் அடைப்பதாக கூறி, அருப்புக்கோட்டை ரோட்டில் உள்ள ஒரு மண்டபத்திற்கு அழைத்துச்சென்று போலீசார் அலைக்கழித்தனர்.
* ஆர்ப்பாட்டம் துவங்குவதற்கு முன்பு கூட்டத்தை பத்திரிக்கை கேமிராமேன்கள் படம் எடுத்துக் ��ண்டிருந்தனர். அப்போது தொண்டர்கள் உற்சாக மிகுதியில் தொடர்ந்து கோஷமிட்டனர். இதில் கலக்கமடைந்த போலீசார், திமுக நிர்வாகிகளிடம் ஓடிச்சென்று, `கோஷம் போடுவதை நிறுத்தச் சொல்லுங்கள்’ என கெஞ்சினர். நிர்வாகிகள் தலையிட்டதை அடுத்து தொண்டர்கள் அமைதி அடைந்தனர்.
No comments:
Post a Comment