கொளத்தூர் ஜவகர் நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மு.க.ஸ்டாலின், மேயர் மா.சுப்பிரமணியன் 08.08.2011 அன்று ஆய்வு செய்தனர்.
கொளத்தூர் ஜவகர் நகர் பகுதியில் உள்ள மழைநீர் வடிகால்வாய் பணிகளை, கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மு.க.ஸ்டாலின், மேயர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் இணைந்து 08.08.2011 அன்று ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது, மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
கொளத்தூர் பகுதியில் கடந்த காலங்களில், மழைக் காலத்தில் மிகுந்த வெள்ளச்சேதம் ஏற்படும் நிலை இருந்தது. இப்பகுதியில் உள்ள இடங்களில் மழைநீர் தேக்கத்தை போக்க, ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால்வாய் கட்டுவதற்கு ^29.24ஒதுக்கீடு செய்யப்பட்டது. 30 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இன்னும் 16 பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகள் அனைத்தும் மழைக் காலத்திற்கு முன்பு முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதே போல், ஜவகர் நகர் பகுதியில் தான்தோன்றி அம்மன் கோயில் குளம் ஒன்று உள்ளது. தேங்கும் மழைநீரை, இந்த குளத்தில் சென்றடையும் வகையில் மழைநீர் வடிகால்வாய் அமைத்தால் மிகவும் பயனுள்ளதாக அமையும் என இங்குள்ள ஜவகர் நகர் நலச்சங்க பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனர். அதன்படி, இத்திட்டத்தினை செயல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி தலைமை பொறியாளர் கே.விஜயகுமார், முன்னாள் எம்எல்ஏ சேகர்பாபு, ஆர்.டி.சேகர், மாலினி ரமேஷ்கண்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி தலைமை பொறியாளர் கே.விஜயகுமார், முன்னாள் எம்எல்ஏ சேகர்பாபு, ஆர்.டி.சேகர், மாலினி ரமேஷ்கண்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment