கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, August 8, 2011

பொய்செய்தி வெளியிடுவோர் மீது சட்டபடி நடவடிக்கை : மு.க.அழகிரி அறிக்கை


என் குடும்பத்தினர் மீது அவதூறு பரப்பும் பொய்ச் செய்திகளை வெளியிடும் வாரப்பத்திரிகைகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவுள்ளேன் என தென்மண்டல திமுக அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் 07.08.2011 அன்று வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் இருந்து வெளிவரும் சில வாரப்பத்திரிக்கைகள் எனது நற்பெயரையும் புகழையும் கெடுக்கும் விதத்தில் பொய்ச்செய்திகளை வெளியிட்டு வீண் வதந்திகளை பரப்பி வருகின்றன. குறிப்பாக என மனைவி மீதும் என் பிள்ளைகள் மீதும் அவதூறுகளை பரப்பும் வகையில் சமீப காலமாக அந்த பத்திரிகைகள் தொடர்ந்து பொய்ச்செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இந்த பொய்ச் செய்திகளை சில ஊடகங்களும் எடுத்து வெளியிடுகின்றன.
என் குடும்பத்தினர் வாங்கியுள்ள எந்த சொத்துக்களும் சட்டத்திற்கு உட்பட்டு நியாயமாக வாங்கப்பட்டவைதான். அதற்கு முறைப்படி உரிய கணக்கும் காட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த பத்திரிகைகள் பொய்ச் செய்திகளை வெளியிடுவது உள்நோக்கத்தோடு என் புகழை சீர் குறைக்க நடத்தப்படும் திட்டமிட்ட சதியாகவே நான் கருதுகிறேன்.
இப்படி என் குடும்பத்தினர் மீது அவதூறு பரப்பும் பொய்ச்செய்திகளை வெளியிடும் வாரப்பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்க உள்ளேன். ஆகவே இந்த பொய்ச் செய்திகளை பொதுமக்கள் யாரும் நம்பவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment