கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, August 7, 2011

பொய் வழக்கு போட்டு அராஜகம் பாளை சிறையென்றால் பயந்து விடுவோமா? : கலைஞர்




திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கலைவாணன் கைதை கண்டித்து திருவாரூரில் கண்டன பொதுக்கூட்டம் 06.08.2011 அன்று நடைபெற்றது. திமுக தலைவர்
கலைஞர் தலைமையேற்று இக்கூட்டத்தில் பேசினார்.

அதில் திமுக தலைவர் கலைஞர் பேசியதாவது:

திருவாரூரில் நடைபெறுகின்ற இந்த கூட்டம் நம்முடைய மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் மீது ஜெயா அரசு தொடர்ந்துள்ள பொய் வழக்குகளைக் கண்டித்து நடைபெறுகின்ற கூட்டமாகும். பொய் வழக்குகள் இந்த ஆட்சியில் வேகவேகமாக தொடரப்பட்டு இந்தக் கழக மாவீரர்களை சல்லடைக் கண்களாகத் துளைத்துவிடலாம் என்று எண்ணிக்கொண்டு நடத்துகின்ற அராஜகத்திற்கு பதிலடி கொடுக்க அல்ல - நாம்அதனை எப்படிப் பார்க்கிறோம் என்பதை எடுத்துச் சொல்ல இந்த கூட்டத்தைநான் பயன்படுத்த விரும்புகிறேன்.


தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நடைபெற்ற கடந்த காலங்களையும், இன்றைக்கு திமுகவை தோற்கடித்துவிட்டு ஜெயலலிதா தலைமையிலே நடைபெறுகின்ற இந்த ஆட்சியையும் தயவு செய்து நீங்கள் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறே
ன்.

பொய் வழக்குகளை கண்டிக்கிறோம் என்று இங்கு பேசினார்கள். பொய் வழக்குகள் மட்டுமல்ல; இன்று அராஜக வழக்குகளாக இன்றைக்கு தொடங்கப்படுகின்றன.

கலைவாணன் மீது முதலில் இரண்டு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் எங்கே ஜாமீன் வாங்கிவிட்டு வந்துவிடுவாரோ என்றுதான், அழுத்தம் திருத்தமாக ஆப்பு அடிக்கவேண்டும் என்று மூன்றாவது முறையாக என்ன வழக்கு போடலாம் என்று யோசித்து பார்த்து, தங்களையே ஒரு முறை கண்ணாடியில் பார்த்துக்கொண்டு குண்டர் சட்டம் என்ற ஒரு சட்டத்தை இன்றைக்கு தம்பி கலைவாணன் மீது ஏவியிருக்கிறார்கள்.


ஏறக்குறைய மரண தண்டைக்கு ஒப்பானதுதான், தூக்கு தண்டனைக்கு ஒப்பானதுதான் குண்டர் சட்டம்.
கலைவாணனை பார்த்தால் அவர் குண்டர் இல்லை. நாட்டுலே உள்ள குண்டர்களையெல்லாம் விட்டுவிட்டு கலைவாணன் மீது குண்டர் சட்டமா?


நாட்டிலே குண்டர்களாக இருப்பவர்களையெல்லாம் விட்டுவிட்டு, கலைவாணனை இந்தச் சட்டத்திலே மாட்டியிருப்பதற்கு என்ன காரணம். அவரை பார்த்து மற்றவர்கள் பயப்பட வேண்டும். வெறுக்க வேண்டும். கலைவாணனை வெறுப்பதன் மூலம் இந்தக் கழகத்தையே வெறுக்க வேண்டும். அதன் காரணமாக கழகம் பலவீனப்பட வேண்டும் என்ற இவ்வளவு சதித் திட்டங்களை மனதிலே வைத்துக்கொண்டு, இந்தச் சட்டத்தை பிரயோகித்திருக்கிறார்கள் கலைவாணன் மீது.


கலைவாணன் என்றதும் எனக்கு மறைந்த நம்முடைய நகைச்சுவை மன்னர் என்.எஸ்.கிருஷ்ணன் நினைவும் வருகிறது. நான் தம்பி கலைவாணனுக்கு அந்தப் பெயர் வைத்தபோதே என்.எஸ்.கிருஷ்ணனுடைய ஞாபகத்திலே தான் அந்தப் பெயரை வைத்தேன். நீங்கள் தான் எனக்குப் பெயர் வைத்தீர்கள் என்று என்னிடத்திலே கலைவாணன் சிரித்துக் கொண்டு சொன்னபோது, நான் பெயர் வைத்த பாவம், நீ இன்றைக்கு குண்டர் சட்த்தில் அடைக்கப்பட்டுக்கொண்டாயே என்று தான் நினைத்துக்கொண்டேன்.


ஆனால், குண்டர் சட்டம் எப்போது பாயும் என்பது அரசியல்வாதிகள் அனைவருக்கும், சாதாரண அரசியல் தெரிந்தவர்களுக்குக் கூட புரிந்த ஒன்றுதான். இதை பயன்படுத்துவதன் மூலம், ஒரு பயங்கரமான ஆட்சியை நான் நடத்துகிறேன் பார் என்று அம்மையார் ஜெயலலிதா நாட்டுக்குத் தெரிவித்துக்கொண்டிருக்கிறார் என்றுதான் பொருள்.



திமுகவை அடியோடு வீழ்த்திவிட வேண்டும் என்று ஒரு கூட்டம் துடிக்கிறது. திமுகவை அழித்துவிட்டால், தாராளமாக ஆட்சிநடத்தலாம். எவனையும் வாடா போடா என்று பேசலாம் என்றூ நினைக்கிறார்கள்.


அதிமுக என்ன சொல்லி ஆட்சிக்கு வந்தது? திமுக அரசு ஸீ1லட்சம் கோடி கடன் வைத்துள்ளது என்று ஊர் ஊராக கூட்டம் போட்டும் சொன்னார்கள். அரசு செலவினங்களுக்காக, திட்டங்களுக்காக, மக்கள் பிரச்னைகளை அணுகுவதற்காக கடன் வாங்குவது அரசின் கடமை. 2006ல் அதிமுக ஆட்சி முடியும்போது தமிழக அரசின் கடன் சுமை ஸீ57ஆயிரத்து 457 கோடி. 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் ஸீ43 ஆயிரத்து 892 கோடி கடன்தான் பெறப்பட்டது. ஆனால் ஆட்சிக்கு வந்த மூன்றே மாதத்தில் அதிமுக ஸீ1லட்சத்து 18 ஆயிரத்து 802 கோடி கடன் என்கிறது. அதாவது பொறுப்பேற்ற 3 மாதத்தில் ஸீ17ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கியுள்ளது.

பட்ஜெட் என்றால் நல்ல நோக்கில் திட்டங்களை தயாரிக்க வேண்டும். திமுக ஆட்சியில் போட்ட திட்டங்கள் அனைத்தும் எதிர்க்கட்சிகளுடன் கலந்து பேசி எண்ணங்களை பரிமாறி அதற்கேற்ப வடித்தெடுத்த திட்டங்கள். எடுத்துக் காட்டு இலவச வண்ண தொலை காட்சி வழங்கும் திட்டம். நானோ என்னுடன் இருப்பவர்களோ அமர்ந்து பேசி யாருக்கு தரலாம் என்று முடிவு செய்யவில்லை. ஒவ்வொரு முறை டெண்டர் விடும் போதும் நாமக்கல் மாளிகை சென்று & அதுவும் நான் கட்டியதுதான்; ஜெயா அங்கெல்லாம் போகிறார், கூட்டம் நடத்துகிறார் & அந்த மாளிகைக்கு சென்று அனைத்துக் கட்சி தலைவர்களுடனும் கலந்து பேசி டெண்டர் விடுவது நடைபெறும். இன்று என்ன நடக்கிறது என்பதை பார்க்கிறீர்கள். எப்படியோ வந்து விட்டார்கள். வந்தவர்களுக்கு வாழ்த்து கூறுவோம். நான் இங்கே நன்றி கூற வந்தபோதுகூட யாரையும் புண்படுத்தி பேசவில்லை. பண்படுத்தி பேச வேண்டும் என்பதுதான் அண்ணா கற்றுத் தந்த பாடம். கலைவாணன் என்ன தவறு செய்தார்.
கலைவாணர் மீது ஒரு காலத்தில் கொலை வழக்கு போடப்பட்டது. பெரியார் அண்ணா, நாங்கள் எல்லாம் கூட்டம் போட்டு பொய் வழக்கை வாபஸ் பெற கேட்டு புரட்சி செய்தோம். இங்கிலாந்து வரை சென்று வழக்காடி, வெற்றி பெற்று பாகவதரையும் கலைவாணரையும் மீட்டோம்.
இன்று இந்த கலைவாணனை மீட்டு கொடுக்குமாறு உங்களை கேட்டுக் கொள்ள வந்துள்ளேன். கலைவாணன் செய்த குற்றம் என்ன? ஸ்டாலினுடன் ஒரே வேனில் சென்றாராம். பெரிய குற்றம், செல்லலாமா? ஒரு கட்சியின் பொருளாளர் வரும்போது, மாவட்டச் செயலாளர் போகலாமா? அதற்கு ஒரு வழக்கு. அதை தடுத்த ஸ்டாலின் கைது. பிறகு, கலைவாணன் மீது இன்னொரு வழக்கு சமச்சீர் கல்விக்காக. சிறுவன் பலியில் குற்றத்தை கலைவாணன் மீது சுமத்தி பாளையங்கோட்டை சிறைக்கு அனுப்பினார்கள். பாளையங்கோட்டை சிறையை நாங்கள் பார்க்காதவர்களா? பாளை சிறை என்றால் பயந்து விடுவோமா? ஒரு கலைவாணனை அடக்கினால், அவன் ஒரு துளி ரத்தம் சிந்தினால், அதில் ஆயிரக்கணக்கான கலைவாணன்கள் முளைப்பார்கள்.
கலைவாணன் கைதான அதே நாளில் சென்னையில் தென்சென்னை மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.அன்பழகன் கைது செய்யப்பட்டார். யாரோ புகார் கொடுத்ததாக வீட்டில் தூங்கி கொண்டிருந்தவரை அவசரமாக போலீசார் கைது செய்து 8 பிரிவுகளின் கீழ் வழக்கு போட்டப்பட்டுள்ளது.
புகார் கொடுத்தவரின் லட்சணம் தெரியுமா? 2009ல் நலிவடைந்த ஆலையை போலி ஆவணம் தயாரித்து விற்று மோசடி செய்து கைது செய்யப்பட்டார். வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. அவர் கொடுத்த புகார் உண்மையா என்பதை போலீசார் அறியாமல் ஒரு சட்டமன்ற உறுப்பினரை அவசரமாக கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?
இதுபோல சேலத்து சிங்கம் வீரபாண்டி ஆறுமுகம் மீது யாரோ ஒருவர் புகார் கொடுத்தார். கையெழுத்து போட வந்தவரை கைது செய்தனர். முதலில் கைது, அப்புறம் சிறை, பின்னர் ஜாமீன், இப்போது மீண்டும் கைது. இது நாடா? அல்லது கடும் புலிகள் வாழும் காடா? இரவில் படுத்தால் காலையில் யார் முகத்தில் விழிப்போம் என்பது தெரியவில்லை. போலீஸ் முகத்திலா? ஐஜி, டிஐபி முகத்திலா? மக்கள் சுதந்திரமாக வாழ்கிறோம் என்று எண்ண முடியுமா? சுதந்திரம் பறிபோகும் ஆட்சி இன்று நடக்கிறது.
திமுக ஆட்சியில் அம்மையாரை சிறையில் அடைத்தது நானல்ல. நீதிமன்றம் ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியது. அதனால் கைது செய்யப்பட்டார். ஆனால் பெண்ணுக்குரிய உரிமை சிறிதளவும் குறையாமல் பார்த்துக்கொண்டோம். இப்போது அவருக்கு அதிக கோபம் வர காரணம் பெங்களூர் வழக்கு. இதுவரை 130 முறை வாய்தா வாங்கி இருக்கிறார். சுப்பனோ குப்பனோ 2 தடவை வாய்தா தவணை கேட்டால் இந்த போலீஸ் ராஜ்யத்தில் சும்மா விடுவார்களா?
ஆனால் கிட்டத்தட்ட 12 ஆண்டு காலம் வழக்கு சமாளித்து வருவதற்கு என்ன காரணம்? நூல்தான். அம்மையார் உயர் ஜாதியில் பிறந்து விட்ட காரணத்தால். அவர் 13, 14 ஆண்டுகாலமா�க இந்த வழக்கை இழுத்தடிக்க முடிகிறது. அதுபற்றி பத்திரிகைகாரர்கள் பேசவில்லை. வாயில் கோந்து போட்டு ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். பேனா முனையை உடைத்து விட்டார்கள். கல்மாடி மீது புகார் என்றால் பேனாவை எடு, எழுத்தை கொட்டு, முதல் பக்க தலைப்பு செய்தி போடு. திமுகவில் உள்ளவர்கள் மீது குற்றம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒன்றை இரண்டாக்கி, இரண்டை இருபதாக்கி, இருபதை இருநூறாக்கி கதை கட்டுகிறார்கள். திமுகவை அழித்து விடலாம் என நினைக்கிறார்கள்.
இது ஏழைகளுக்காக பாடும் படும் கட்சி. தொழிலாளர்களுக்கு பாடும்படும் கட்சி. குடிசைகளில் வாழும் மக்களுக்கான கட்சி என்பதற்காக அல்ல. திராவிட உணர்வை தமிழகத்தில் தட்டி எழுப்பும் கட்சி என்பதற்காகத்தான். திராவிட உணர்வு திமுக தவிர வேறு எந்த கட்சி தட்டி எழுப்புகிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இனம் இந்த திராவிட இனம். இந்த திராவிட உணர்வை தாங்கி கொண்டிருக்கிற கட்சி திமுகதான்.
திமுகவை அழித்துவிட்டால் தாராளமாக நடைபோடலாம், ஆட்சி நடத்தலாம், யாரையும் வாடா& போடா என்று அழைக்கலாம். எவருக்கும் சமச்சீர் கல்வி இல்லை என்று சொல்லாம். நாம்தான் படிக்கவேண்டும். அவன் சூத்திரன், அவன் கீழ்த்தரமானவன், அவனை இதோடு இணைக்க கூடாது என்று பணக்காரர்களும், பார்ப்பனத்தில் நம்பிக்கை உள்ளவர்களும் தங்களது எண்ணங்களை மேலும் கொடூரமாக்கி கொண்டு, அந்த கூட்டம் திமுகவை அழிக்க நினைக்கிறது. இந்த கழகத்தை எவராலும் அழிக்க முடியாது. யாராலும் அழிக்கமுடியாது. திராவிட யாராலும் பட்டுப் போக செய்யமுடியாது. யார் யாரோ தண்டிக்கப்படுகிறார்கள். ஆனால் ஒரு அம்மையார் உயர் ஜாதியிலே பிறந்துவிட்டதால் அவருடைய வழக்கு கிட்டத்தட்ட 14 வருடங்களாக நடைபெற்று வருகின்றன.

ஜெயலலிதாவுக்கு அதிக கோபம் இருக்கிற காரணம் என்னவென்றால் - பெங்களூரில் ஒரு வழக்கு நடக்கிறது. அந்த வழக்கில் இதுவரையில் 130 தடவை வாய்தா வாங்கி விட்டார். அந்த வழக்கிற்கு பெயர் சொத்து குவிப்பு வழக்கு. அதை சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் வாய்தா வழக்கு.


இங்கே இருக்கிற குப்பனோ, சுப்பனோ கோர்ட்டுக்கு வா என்றால் - அவன் இரண்டு நாள் தவணை கேட்டால் முடியாது வா என்று கையிலே விலங்கு மாட்டுகிற இந்த போலீஸ் ராஜ்ஜியத்தில் 130 தடவை கிட்டத்தட்ட 12 ஆண்டு காலம் ஒரு வழக்கை சமாளித்துக்கொண்டே, அதைப் பற்றி கவலைப்படாமல் ஒரு அம்மையார் இருக்கிறார் என்றால், அதற்கு என்ன காரணம்? நூல் என்றால் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.


உச்சநீதிமன்றம் வரையிலே இன்றைக்கு நடக்கின்ற வழக்குகள் எல்லாம் யார் யாரோ இன்றைக்கு சிறைப்படுகிறார்கள். வழக்குகளை சந்திக்கின்றார்கள். யார் யாரோ தண்டிக்கப்படுகிறார்கள். ஆனால் ஒரு அம்மையார் உயர் ஜாதியிலே பிறந்துவிட்ட காரணத்தால், அவர்களால் இன்னமும் கிட்டத்தட்ட 13, 14 ஆண்டு காலமாக ஒரு வழக்கை இழுத்தடிக்க முடிகிறது.

நான் எவ்வளவு நாளைக்கு இருப்பேனோ என்று தெரியாது. நான் இருக்கும் வரைக்கும் சரி, எனக்குப்பின்னும் யாராலும் திமுகவை அழிக்க முடியாது.

இவ்வாறு கலைஞர் பேசினார்.
உள்பாவாடை காணாமல் போய்விட்டால் கூட எங்கள் மீது கேஸ் போடுகிறான் - கே.என்.நேரு பேச்சு :

திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கலைவாணன் கைதை கண்டித்து திருவாரூரில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. திமுக தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கே.என்.நேரு கலந்துகொண்டு பேசினார்.

அவர், ’’அதிமுக அரசு போடப்படுகின்ற வழக்குகளில் முதன் முதலில் ஆரம்பித்தது திருச்சியில்தான்.

நீதிமன்றங்களில் தீர்ப்பு உங்களுக்கு எதிராகவும், எங்களுக்கு சாதகமாகவும் வரும் காலம் வரும்.

சினிமாவில், ’’உள்பாவாடை காணாமல் போய்விட்டால் கூட எங்கள் மீது கேஸ் போடுகிறான்’’ என்று சொல்லுவான். அது மாதிரி நீங்கள் உண்மை நிரூபிக்கப்படாமல் யார் மீதும் அபாண்டமாக குற்றம் சுமத்தி வழக்கு போடுகிறார்கள்.

அதனால்தான், இவர்களுக்கு வேறு வேலையே இல்லையா? இதுதான் வேலையா? என்று மக்கள் கேட்கிறார்கள்.

திமுக அரசை நசுக்க பார்க்கிறீர்கள். எவ்வளவுக்கு எவ்வளவு எங்களை நசுக்குகிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு பந்து போல எழுந்திருப்பான் திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவன்’’ என்று பேசினார்.


இந்த
கூட்டத்தில் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், வேலு, நேரு, கோ.சி.மணி, அழகு.திருநாவுக்கரசு, பொன்முடி, மதிவாணன், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, எம்பி ஏ.கே.எஸ்.விஜயன், நடிகர் வாகை சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment