சென்னை விமான நிலையத்தில் 21.10.2010 அன்று மத்திய அமைச்சர் மு.க. அழகிரி அளித்த பேட்டி:
டில்லியில் மத்திய அமைச்சர் ராசாவுக்கும் உங்களுக்கு ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறதே?
அதில் எந்தவித உண்மையும் இல்லை. முழுக்க முழுக்க தவறான பொய் தகவல். நானும் ராசாவும் இப்போது ஒரே விமானத்தில் தோளில் கைபோட்டுக் கொண்டு ஒன்றாக பேசி சிரித்தபடிதான் வந்தோம். சந்தேகமாக இருந்தால், நீங்களே அவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள். இது யாரோ திட்டமிட்டு பரப்பும் பொய் செய்தி. அந்த அம்மையார் தான் தூண்டிவிட்டு இந்த கேள்வியை கேட்கச் சொன்னார்களா?
மதுரை அதிமுக கூட்டத்தில் ஜெயலலிதா பேசியதை பற்றி?
இந்த கேள்விக்கு நான் ஏற்கனவே பதில் கூறி விட்டேன். நீங்கள் கேட்பதால் மீண்டும் கூறுகிறேன். யாரோ தவறாக எழுதி கொடுத்ததை சரிதானா என்று கூட விசாரிக்காமல், அந்த அம்மையார் பேசியுள்ளார். அவர் பேசியதில் சிறிது கூட உண்மையில்லை. என் பெயரை சொல்லி சொல்லி, பொது மேடைகளில் பேசி என்னை பிரபலப்படுத்தும் பிரசார பணியில் ஈடுபட்டுள்ளாரோ என்ற சந்தேகம் தோன்றியுள்ளது என்றார்.
No comments:
Post a Comment