
அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்காக தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள 98 நூலகர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங் கினார் முதல்வர் கலை ஞர். இது குறித்து தமிழக அரசு வெளீயிட்டுள்ள செய்திக்குறிப்பில், முத லமைச்சர் கலைஞரின் கனவுத் திட்டமாக அழ கிய வடிவமைப்புடன் கட்டப்பட்டுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் 15.9.2010 அன்று திறந்து வைக்கப்பட்டுச் சிறப்போடு செயல்பட்டு வருகிறது. இந்நூலகத்திற்காக முதலமைச்சர் கலைஞர் புதிதாக அனுமதித்துள்ள பணியிடங்களுள் 99 நூல கர் பணியிடங்கள், தமிழ் நாடு அரசின் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் போட்டித் தேர்வுகள் முறையில் தேர்ந்தெடுக் கப்பட ஏற்கெனவே ஆணை யிடப்பட்டிருந்தது. அந்த ஆணையின் படி, நூலகர் மற்றும் தகவல் அலுவலர்கள் 9 பேர்; உதவி நூலகர் மற் றும் தகவல் அலுவலர் கள் 17 பேர்; நூலகர் மற்றும் முதல் நிலை தகவல் உதவியாளர்கள் 36 பேர்; நூலகர் மற்றும் இரண்டாம்நிலை தக வல் உதவியாளர்கள் 36 பேர் - என மொத்தம் 98 பேர் புதிதாகத் தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ளனர். இந்த 98 நூலகர்களுக் கும் உரிய பணி நியமன ஆணைகளை வழங்குவ தன் அடையாளமாகச் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நேற்று (5.10.2010) நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச் சர் கலைஞர் 10 நூலகர் களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்துகள் கூறினார். இந்நிகழ்வின்போது, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென் னரசு, தமிழ்நாடு ஆசிரி யர் தேர்வு வாரியத்தின் தலைவர் முனைவர் பி. இராமையா, பள்ளிக் கல் வித் துறைச் செயலாளர் தேவ ஜோதிஜெகராஜன், பொது நூலக இயக்கு நர் க.அறிவொளி ஆகி யோர் உடனிருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. |
No comments:
Post a Comment