கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, October 23, 2010

3 லட்சம் கான்கிரீட் வீடுகள் டிசம்பர் மாதம் இறுக்குள் திறக்கப்படும் - துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்3 லட்சம் கான்கிரீட் வீடு கள் டிசம்பர் மாதம் இறுக்குள் திறக்கப்படும் என்று துணை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

விழுப்புரம் மாவட் டம் கல்லக்குறிச்சியை சேர்ந்த தே.மு.தி.க. நிரு வாகிகள் அந்த கட்சியில் இருந்து விலகி தி.மு.க .வில் இணையும் நிகழ்ச்சி சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் 19.10.2010 அன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு துணை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் முன்னிலை வகித் தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் நேரத்தில் விதவிதமான கட்சிகள் எல்லாம் நாட்டிலே தோன்றும். அப்படி உருவாகும் கட்சிகளுக்கு கொள்கை என்ன லட்சியம் என்ன என்ப தைத்தான் நாம் எண் ணிப்பார்க்கவேண்டும். நீங்கள் இதுவரை ஏற்றுக் கொண்டிருந்த கட்சி யின் தலைவரின் எண் ணம் என்ன? கட்சி தொடங்கியதும் நான் தான் முதல்-அமைச்சர் என்று ஆரூடம் பார்த்து தொடங்கிய கட்சி அந்தக் கட்சி.

அதற்கெல்லாம் விதி விலக்காக, எடுத்துக் காட்டாக இன்றைக்கு சமுதாயத்தின் பணியை லட்சியமாக கொண்டு பாடுபடக்கூடிய ஒரே இயக்கம் நமது தலைவர் கலைஞர் தலைமையில் பீடுநடைபோடக்கூடிய தி.மு.க.தான்.

1949 ஆம் ஆண்டு தி.மு.க. தோன்றியது. உட னடியாக தேர்தல் களத் தில் இறங்கியதா என்று கேட்டால் இல்லை. 1957 ஆம் ஆண்டுதான் முதல் முதலாக தேர்தல் களத் தில் இறங்கியது. அப் போது 15 இடங்களில் நாம் வெற்றிபெற்றோம். இந்த 15 தொகுதிகளில் குளித்தலை சட்டமன்ற தொகுதியில் இருந்து வெற்றிபெற்றவர்தான் இன்று தமிழகத்தின் முதலமைச்சராக இருக் கும் நமது தலைவர் கலைஞர். அதில் இருந்து இதுவரை தோல்வி என்பதையே அறியாமல் ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்ற ஒரே தலைவர் கலைஞர்தான்.

13 ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு 1989 ஆம் ஆண்டு மீண் டும் ஆட்சிக்கு வந்தோம். இதன்பிறகு 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வி அடைந்தோம். 1996 ஆம் ஆண்டு மீண்டும் வெற்றி பெற்றோம். 2001ஆம் ஆண்டில் தோல்வி அடைந்தோம். 2006ஆம் ஆண்டு வெற்றி பெற்று 5-ஆவது முறை யாக இன்று உலகமே பாராட் டும் வகையில் தலைவர் கலைஞர் இன்று ஆட் சியை நடத்திக்கொண்டு இருக்கிறார்.

இதை நான் ஏன் வரிசைப்படுத்தி பட்டிய லிட்டு குறிப்பிட்டு காட்டுகிறேன் என்றால் வெற்றி பெறும் நிலையை பார்த்து நாம் வெறி கொண்டு அலைந்து கொண்டு இருக்கவில்லை. இடையில் தோல்வி அடைந்ததால் துவண்டு, முடங்கிப்போய் முலை யில் உட்காரவில்லை.

வெற்றியையும், தோல்வியையும் ஒன்றாக கருதி இந்த நாட்டுக்காக உழைத்துக்கொண்டு இருக்கும் உண்மையான இயக்கம் தி.மு.க. என் பதை நாம் நிலைப் படுத்திக்கொண்டு இருக் கிறோம். உலக அளவில் கலைஞர் இன்று பல் வேறு சாதனைகளை நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறார். சிறு பான்மை மக்களுக்காக தொடர்ந்து பல்வேறு திட்டங்களை நிறை வேற்றிக்கொண்டு இருக்கிறோம்.

தேர்தலில் அளித்த அத்தனை உறுதி மொழி களையும் நிறைவேற்றி உள்ள ஆட்சிதான் கலை ஞர் ஆட்சி என்பதை நாம் நிரூபித்துக் கொண்டு வருகிறோம். தமிழ்நாட்டில் குடி சைகளே இருக்கக் கூடாது என்பதற்கு மாற் றாக கான்கிரீட் வீடு களை கட்டித்தரும் ஒரு அற்புதமான திட்டம் தான் கலைஞர் வீடுவழங் கும் திட்டம். கலைஞர் வீடு வழங்கும் திட்டத் தின் மூலம் 6 ஆண்டு களில் 21 லட்சம் வீடு களை கட்டி முடிக்க வேண்டும் என்று அறி வித்து, முதல் ஆண்டு 3 லட்சம் வீடுகள் கட்டப் படும் என்றும் தெரிவித் தோம்.

முதல் கட்டமாக இந்த 3 லட்சம் வீடுகளும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் திறந்து வைக்கப்பட இருக்கிறது. தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்கள் மட்டும் அல்ல தேர்தல் நேரத்தில் சொல்லாத அறிவிப்பு களையும் நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறோம். இப்படிப்பட்ட அற்புத மான ஆட்சிக்குத்தான் நாம் துணை நிற்க வேண்டும் என்ற உணர் வோடு தி.மு.க.வில் இணைந்துள்ள உங் களை இன்முகத்தோடு வரவேற்கிறேன்.

-இவ்வாறு துணை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் பேசினார்.

No comments:

Post a Comment