
தமிழ்நாட்டில் தொ ழில் முதலீடுகளை ஈர்ப்ப தற்காக துணை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான உயர் நிலைக்குழு, சீனா, தென் கொரியா ஆகிய நாடு களுக்கு 6 நாள்கள் அரசு முறை பயணமாக கடந்த மாதம் 27 ஆம் தேதி சென் னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டது. இந்த குழுவில், தொழில்துறை முதன்மை செயலர் ராஜீவ்ரஞ்சன், தொழில் வழிகாட்டு நிறுவன துணைத்தலைவர் வேல்முருகன், துணை முதலமைச்சரின் முதன் மை செயலாளர் கே.தீன பந்து ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். கடந்த 28 ஆம் தேதி பயணத்தைத் தொடங்கிய இந்த உயர்நிலைக் குழு வினர், சீனாவில் உள்ள பல்வேறு நகரங்களுக்கு சென்று தொழில் அதிபர் களை சந்தித்து பேசினார் கள். அப்போது துணை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின், தொழிலதிபர்களி டம் பேசுகையில், தமிழ் நாட்டில் தொழில் முதலீட் டிற்கு உகந்த சூழ்நிலை இருப்பதையும், தமிழக அரசின் ஆதரவு, வெளி நாட்டு முதலீட்டாளர் களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் ஆகியவற்றை யும் விரிவாக எடுத்துக் கூறினார். சீனா, தென்கொரியா நாடுகளில் வெற்றிகரமாக சுற்றுப்பயணத்தை முடித் துக்கொண்டு துணை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் நேற்றிரவு (05.10.2010) விமானம் மூலம் சென்னை திரும்பி னார். அவருடன் அவர் மனைவி துர்கா ஸ்டாலி னும் வந்தார். விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலினை அமைச் சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ. அன்பரசன், செல் வராஜ், மேயர் மா.சுப்பிர மணியன், தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், சென்னை புறநகர் காவல்துறை ஆணையர் ஜாங்கிட் ஆகியோர் வரவேற்றனர். பின்னர், விமான நிலை யத்தில் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- சீனா, தென் கொரியா ஆகிய நாடு களுக்கு மேற் கொண்ட ஒரு வார காலம் சுற்றுப்பயணம் பயனுள்ள தாக இருந்தது. பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழகத் துக்கு வரக்கூடிய வகையில் அமைந்து இருந் தது. சீனாவில் ஷாங்காய் நகரில் உலகத் தொழில் வர்த்தக கண்காட்சி நடந்தது. அதில், நகர்ப்புற கட்ட மைப்பு, புதிய தொ ழில் அமைப்பு, தொழில் நுட்பம் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெற்று இருந்தன. இதை நம் நாட்டில் செயல்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. அதில், இந்தியாவின் சார்பில் ஒரு அரங்கம் அமைந்துள்ளது. அது பாராட்டும் வகையில் இருந்தது. இந்த கண்காட்சி, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, தொழில் வளர்ச்சியை ஏற்படுத்து வது, தகவல் தொழில் நுட்பத்தில் நவீன உத்தி களை ஏற்படுத்துவது ஆகி யவற்றை அறிந்து கொள்ள நல்ல ஒரு வாய்ப்பாக அமைந்தது. சீனாவில் ஷாங்காய் நகரில் உள்ள ஒரு பன் னாட்டு தகவல் தொழில் நுட்ப நிறுவனம், இந்தி யாவில் தொழில் தொடங்க ஆர்வமாக உள் ளது. அதை தமிழகத்தில் தொடங்க வலியுறுத்தி உள்ளோம். ஏற்கனவே, நோக்கியா, மோட்டரோலா போன்ற நிறுவனங்களும் தமிழகத் தில் சிறப்பாக செயல் படுவதாக கூறியுள்ளோம்.. இவ்வாறு மு.க. ஸ்டாலின் கூறினார். |
No comments:
Post a Comment