கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, October 5, 2010

உதவிகள், சலுகைகள் வழங்குவதை கடமையாக கொண்டு அரசு செயல்படுகிறது -


முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கை:
சாதிவாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்தி பா.ம.க. ஆர்ப்பாட்டங்களும், பொதுக்கூட்டங்களும் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறதே?
சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது திராவிடர் இயக்கமான தி.மு.க.வுக்கோ அல்லது தி.மு.க. ஆட்சிக்கோ உடன்பாடில்லாத ஒன்று என்பது போல கற்பனை செய்து கொண்டு, கிளர்ச்சிகளில் ஈடுபடும் போக்கினை யார் கடைபிடிக்கிறார்கள் அல்லது எந்தக் கட்சி கடைபிடிக்கிறது என்பதை மக்கள் நன்றாகவே அறிவார்கள்.
2011 ஜூன் சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடங்கும் என்று மத்திய அரசே அறிவித்திருக்கிறது. சோனியா காந்தி எனக்கு எழுதியுள்ள கடிதத்தில் அதுபற்றி உறுதிபடத் தெரிவித்திருக்கிறார். இந்தச் செய்திகள் எல்லா ஏடுகளிலும் வெளிவந்திருக்கின்றன. இதற்கிடையே, தி.மு.க. ஆட்சியை எதிர்த்து ஏதாவது கிளர்ச்சி செய்ய வேண்டும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று எண்ணுகிறார்கள். மக்களைத் தூண்டி விடுகிற தோரணையில் வெளியிடுகிற கிளர்ச்சி அறிவிப்பு எதனையும் எந்த மக்களைக் கவர்வதற்காக செய்யப்படுகிறதோ, அந்த மக்களே, அதன் உள்நோக்கத்தை உணர்ந்து நடந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப இருக்கிறது.
தனியார் பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றனவே?
2006ல் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதற்குப் பிறகு, இதுவரை அரசு போக்குவரத்துக் கழகங்களில் பேருந்து கட்டணம் எந்த நிலையிலும் உயர்த்தப்படவில்லை. இதுகுறித்து அவ்வப்போது அரசு சார்பில் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. எனினும், ஒரு சில நாளேடுகள், தனியார் பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகச் சொல்ல வரும் போது, ஏதோ அரசுப் பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு விட்டது போன்ற தோற்றத்தை உள்நோக்கத்தோடு ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்கின்றன.
தனியார் பேருந்துகள் கட்டணத்தை உயர்த்துவதைத் தடுப்பதற்கு அவ்வப்போது போக்குவரத்துத் துறை அதிகாரிகளால் திடீர்த் தணிக்கைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதிக கட்டணம் வசூல் செய்தது தொடர்பாக, சட்டப்படி பேருந்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அபராதம் விதித்தல், உரிமத்தை இடைநீக்கம் செய்தல் போன்ற தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சென்னைத் துறைமுக இணைப்புச் சாலைத் திட்டம் கைவிடப்பட்டதாகவும், அதற்காக ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளதே?
சென்னைத் துறைமுக இணைப்புச் சாலைத் திட்டம் கைவிடப்படவில்லை. ஆர்ப்பாட்டத்திற்கென அறிவிக்கப்பட்டுள்ள காரணம் அடிப்படையற்றது. எண்ணூர் மற்றும் சென்னை துறைமுகங்களை இணைக்கின்ற நான்கு சாலைகளை விரிவுபடுத்தி மேம்படுத்தும் திட்டம் ஸீ600 கோடி மதிப்பீட்டில் மத்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினால் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தினைச் செயல்படுத்திட தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தமிழக அரசு, சென்னை துறைமுகக் கழகம், எண்ணூர் துறைமுக நிறுவனம் ஆகியோரைப் பங்குதாரர்களாகக் கொண்ட சென்னை எண்ணூர் துறைமுகச் சாலை நிறுவனம் ஏற்படுத்தப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தத் திட்டத்தில் சாலைகளை விரிவுபடுத்தத் தேவைப்படும் நில எடுப்புப் பணிகளும், ஆக்கிரமிப்புகளை அகற்றுதலும், குடிநீர்க் குழாய்கள் மற்றும் மின் கம்பங்களை மாற்றியமைக்கின்ற பணியும் நடைபெற்று முடிவடையும் தருவாயில் உள்ளன. கடலோரங்களில் ஏற்படுகிற நில அரிப்பைத் தடுப்பதற்காகவும், மறுகுடியமர்த்தல், சாலைப் பராமரிப்பு ஆகிய இதர பணிகளுக்காகவும், இதுவரை எண்ணூர் துறைமுகச் சாலை நிறுமத்தால் இத்திட்டத்திற்காக ஸீ101 கோடி செலவிடப்பட்டுள்ளது.
தற்பொழுது இந்தத் திட்டத்தை நிறைவேற்ற திருத்திய மதிப்பீட்டிற்கான ஒப்புதலை அதனுடைய பங்குதாரர்கள் வழங்கியுள்ளனர். அதன்படி சாலை விரிவுபடுத்தும் பணிகளுக்கான திட்ட மதிப்பீடு ஸீ270 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு, ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படும் நிலையில் உள்ளன. இந்தத் திட்டத்தை வேகமாக நிறைவேற்றுவதற்காக, தமிழக அரசு மத்திய அரசோடு ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது என்பதை மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் அண்மையில் குறிப்பிட்டுள்ளார். இந்தத் திட்டத்திற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரி, பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன என்பதைத் தெரிந்து கொண்டே, சென்னைத் துறைமுக இணைப்புச் சாலைத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறுவதும், அதற்காகப் போராட்டம் என்று அறிவிப்பதும், நான் உட்கார்ந்ததினால்தான் பனம் பழம் விழுந்தது என்று காக்கை சொன்ன கதையாகத்தான் இருக்க முடியும்.
விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் வழங்குவதில் ஏதோ பின்னடைவு ஏற்பட்டு விட்டதாக ஒரு நாளேட்டில் செய்தி வெளியாகி இருக்கிறதே?
தமிழக விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில், 2006ம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்றவுடன், முதல் நடவடிக்கையாக விவசாயிகளின் கடன் சுமையை நீக்கிடும் வகையில் ஸீ7 ஆயிரம் கோடி அளவுக்கு கூட்டுறவுக் கடன்களை முற்றிலுமாக ரத்து செய்தது.
கூட்டுறவு நிறுவனங்களுக்குத் தேவையான நிதி உதவி அளித்து, விவசாயிகள் தொடர்ந்து பயிர்க்கடன் பெறுவதையும் அரசு உறுதி செய்துள்ளது. கூட்டுறவு வங்கிகளில், 2006, 2007ம் ஆண்டில் 6 லட்சத்து 31 ஆயிரத்து 283 விவசாயிகளுக்கு ஸீ1250 கோடியே 62 லட்சம், 2007, 2008ம் ஆண்டில் 6 லட்சத்து 48 ஆயிரத்து 397 விவசாயிகளுக்கு, ஸீ1393 கோடியே 97 லட்சம், 2008, 2009ம் ஆண்டில் 6 லட்சத்து 91 ஆயிரத்து 192 விவசாயிகளுக்கு, ஸீ1570 கோடியே 99 லட்சம், 2009, 2010ம் ஆண்டில் 8 லட்சத்து 98 ஆயிரத்து 540 விவசாயிகளுக்கு, ஸீ2169 கோடியே 48 லட்சம் பயிர்க் கடன்கள் வழங்கப்பட்டன. 2010, 2011ம் ஆண்டில் ஸீ 2500 கோடி பயிர்க் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, முறையாகவும் எளிமையாகவும் கடன் வழங்கப்படுவதை இந்த அரசு கண்காணித்து வருகிறது. 22&9&2009 வரையிலான காலத்திற்கு, சென்றாண்டு வழங்கப்பட்ட பயிர்க்கடன் ஸீ850 கோடியே 89 லட்சம். இந்த ஆண்டு 22&9&2010 வரை வழங்கப்பட்டுள்ள பயிர்க்கடன் ஸீ1186 கோடியே 50 லட்சம். கூட்டுறவுப் பயிர்க்கடன்களை முறையாகத் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியை முற்றிலும் ரத்து செய்யும் புரட்சிகரமான திட்டத்தை 2009, 2010ம் ஆண்டிலிருந்து இந்தியாவிலேயே முதன்முதலாகச் செயல்படுத்தி வருவது திமுக அரசுதான் என்பதை தமிழக விவசாயப் பெருமக்கள் நன்றாகவே அறிவார்கள். எனவே, பயிர்க்கடன் வழங்குவதில் பின்னடைவு என்ற பேச்சுக்கே இடமில்லை.
இடஒதுக்கீடு கோரி வன்னியர் சார்பாக நடத்தப்பட்ட போராட்டத்தில் உயிர்நீத்த குடும்பத்தினருக்கு நீங்கள் செய்த உதவியை எல்லோரும் மறந்து விட்டார்களே?
இடஒதுக்கீடு கோரி, 1987ம் ஆண்டு நடந்த போராட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் உயிர்நீத்த 24 பேரின் குடும்பங்களுக்கு 11 ஆண்டுகள் கழித்து திமுக ஆட்சியில்தான், 1998ல் தலா ஸீ3 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
அத்துடன், 24 தியாகிகளின் வாரிசுகளுக்குக் குடும்ப ஓய்வூதியமாக மாதம் ஸீ1500 அனுமதிக் கப்பட்டது. அந்த குடும்ப ஓய்வூதியமும் மீண்டும் திமுக ஆட்சியில்தான், 2006 நவம்பர் முதல், மாதம் ஸீ1,500 லிருந்து ஸீ2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
திமுக அரசு உதவிகள் செய்வதையும், சலுகைகள் வழங்குவதையும் கடமையாகக் கொண்டு ஆற்றி வருகிறது. இதனை சிலர் மறந்திருக்கலாம். மனசாட்சி உள்ள எவரும் எளிதில் மறந்துவிட முடியாது. மறந்து விட்டார்கள் என்பது உண்மையானால் மறந்தோர் செயலை நாமும் மறப்போம்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment