கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, October 20, 2010

அர்ச்சகர், பூசாரிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் கலைஞர்

தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் கோயில் பூசாரிகள், அர்ச்சகர்களுக்கு ரூ.2.78 கோடியில் இலவச சைக்கிள்களை முதல்வர் கருணாநிதி 18.10.2010 அன்று வழங்கினார்.
தமிழக அரசு சார்பில் ஒரு கால பூஜை திட்டத்தில் பயன்பெறும் கோயில்களின் பூசாரிகள் அர்ச்சகர்கள் குறித்த நேரத்தில் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்ய இலவச சைக்கிள் வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறநிலைய துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது அறிவிக்கப்பட்டது.
அதன்படி தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் பூசாரிகள், அர்ச்சகர்களுக்கு ரூ.2.78 கோடியில் இலவசமாக சைக்கிள்கள் வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி தலைமை செயலகத்தில் 18.10.2010 அன்று நடந்தது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களை சேர்ந்த 200 அர்ச்சகர்களுக்கு முதல்வர் கருணாநிதி இலவச சைக்கிள்கள் வழங்கினார். மஞ்சள் கலரில் வழங்கப்பட்ட இந்த சைக்கிளின் மதிப்பு ரூ.2779.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கீதாஜீவன், பொங்கலூர் பழனிச்சாமி, பெரியகருப்பன், அறநிலையத் துறை செயலர் சிவகுமார், ஆணையர் சம்பத், சீர்காழி சிவசிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சைக்கிள் பெற்றுக் கொண்ட முத்துசேகர குருக்கள் (சென்னை) கோபாலகிருஷ்ணன் (வேலூர்) கூறுகையில், “எங்களுக்கு இலவசமாக சைக்கிள் வழங்கிய முதல்வருக்கு நன்றி. இந்த சைக்கிளை பயன்படுத்தி நாங்கள் குறித்த நேரத்தில் கோயில் சென்று வழிபாடு நடத்த முடியும் என்றனர்.
சிட்டிபாபு (தாம்பரம்) வேலாயுதம் (சென்னை) நடராஜன் (காஞ்சிபுரம்) ஆகியோர் கூறும் போது முதல்வர் சைக்கிள் வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. கோயிலுக்கும் வீட்டிற்கும் இடையே அதிக தூரம் இருப்பதால் சைக்கிளில் எளிதில் செல்ல முடியும் என்றனர்.

No comments:

Post a Comment