கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, October 11, 2010

கவிதை,கட்டுரை, பேச்சு போட்டி மாணவ, மாணவிகளுக்கு பரிசு - துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற உயர்நிலை, மேல்நிலை பள்ளி மாணவ மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட வாரியாக பரிசு வழங்கப்படும் விவரத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
துணை முதல்வரும் தி.மு.க. இளைஞரணி அறக்கட்டளை நிறுவனருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:
அண்ணாவின் 102ம் பிறந்த நாளை முன்னிட்டு, தி.மு.க. இளைஞரணி அறக்கட்டளை சார்பில் உயர்நிலை, மேல்நிலை பள்ளி மாணவ மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. மாநில அளவிலான இறுதிக்கட்ட போட்டிகள் வரும் 23, 24 தேதிகளில் திருவண்ணாமலையில் நடைபெறுகிறது. மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு அந்த அந்த மாவட்டங்களிலேயே இளைஞர் அணி துணை செயலாளர்கள் மூலம் பரிசு தொகை, சான்றிதழ்கள் வழங்கப்படும்.
முதல் பரிசு ஸீ10 ஆயிரம், 2ம் பரிசு ஸீ5 ஆயிரம், 3ம் பரிசு, ஸீ3 ஆயிரம் ஆறுதல் பரிசாக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 10 பேர் வீதம் ஸீ1000 வழங்கப்படும். ஒரு மாவட்டத்துக்கு 39 பேருக்கு ஸீ84 ஆயிரம் வீதம் புதுவை உள்பட 36 மாவட்டங்களில் 1404 மாணவ மாணவிகளுக்கு ஸீ30 லட்சத்து 24 ஆயிரம் வழங்கப்படும். மேயர் வரும் 16ம் தேதி காலையில் வடசென்னை. மாலையில் தென்சென்னையிலும் 17ம் தேதி காலை திருவள்ளூர், மாலையில் காஞ்சிபுரத்தில் பரிசுகள் வழங்குவார்.
சுகவனம் எம்.பி. 16ம் தேதி காலை வேலூர், மாலை திருவண்ணாமலை, 17ம் தேதி காலை சேலம், மாலை தர்மபுரி தெற்கு, தர்மபுரி வடக்கு, கிருஷ்ணகிரியில் பரிசுகள் வழங்குவார். ஆர்.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., 16ம் தேதி காலை நீலகிரி, கோவை, மாலை திருப்பூர், ஈரோடு, 17ம் தேதி காலை மதுரை மாநகர், புறநகர், தேனி, மாலையில் நாமக்கல்லில் பரிசுகள் வழங்குவார். சுப.த.சம்பத் 16ம் தேதி காலை கன்னியாகுமரி, திருநெல்வேலி, மாலை தூத்துக்குடி 17ம் தேதி காலை விருதுநகர், சிவகங்கை, மாலையில் ராமநாதபுரத்தில் பரிசுகள் வழங்குவார்.
சுபா.சந்திரசேகர் 16ம் தேதி காலை அரியலூர், பெரம்பலூர், மாலையில் கரூர், 17ம் தேதி காலை திண்டுக்கல், திருச்சி, மாலையில் புதுக்கோட்டையில் பரிசுகள் வழங்குவார்.
அசன்முகமது ஜின்னா 16ம் தேதி காலை தஞ்சை, திருவாரூர், மாலை நாகை, 17ம் தேதி காலை கடலூர், மாலை புதுவை மாநிலம், விழுப்புரத்தில் பரிசுகள் வழங்குவார். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்

No comments:

Post a Comment