கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, October 31, 2010

பசும்பொன்னில் தேவர் குருபூஜை : துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி


முத்துராமலிங்கத்தேவரின் 103&வது ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் மாவட்ட செயலாளர்கள் தளபதி, மூர்த்தி எம்எல்ஏ.


மதுரை வந்த அவரிடம் “அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மதுரையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கூடிய கூட்டத்தின் மூலம் தேர்தலில் திருப்புமுனை ஏற்படும் என பிரசாரம் செய்து வருகிறாரே? என்று நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

மதுரையில் ஜெயலலிதா பேசியது பொய் பித்தலாட்டமானது. தேர்தல் நெருங்குவதால், மக்களை ஏமாற்றும் நாடகத்தை தொடர்ந்து நடத்தி கொண்டு இருக்கிறார். இதை நாங்கள் மட்டுமல்ல பொது மக்களும் கூர்ந்து கவனித்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவரது பொய் பிரசார நாடகம் மக்களிடம் எடுபடாது. இதற்கு தேர்தலில் மக்கள் நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பார்கள்.
அவரது பொய் பிரசார நாடகத்திற்கு ஒரு உதாரணத்தை கூறுகிறேன். கலைஞர் வீட்டு வசதி திட்டத்தில் தி.மு.க.வினருக்கு முன்னுரிமையுடன் ஒப்பந்தம் அளித்து இருப்பதாக பொறுப்புள்ள எதிர் கட்சி தலைவர் ஜெயலலிதா கூறியது வெட்ககேடானது அபாண்டமான இந்த குற்றச்சாட்டுக்கு மறு நாளே நான் பதில் கூறினேன்.
அதை நிரூபித்தால், நானே முழு பொறுப்பேற்பதாக தெரிவித்தேன். ஜெயலலிதாவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அவரது குற்றச்சாட்டுகள் எல்லாம் இப்படி அபாண்டமான பொய் பிரசாரமாகத்தான் தான் இருக்கும்.
இவ்வாறு மு.க.ஸ்டா லின் கூறினார்.


பசும் பொன் கிராமத்தில் நேற்று (30.10.2010) நடந்த முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் அஞ்சலி செலுத்தினார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் னில் முத்துராமலிங்கத்தேவரின் 103வது ஜெயந்திவிழா மற்றும் 43வது குருபூஜை விழா கடந்த 28ம் தேதி துவங்கியது. 2ம் நாள் விழா வில் தேவர் நினைவிடம் அருகே ஆயிரக்கணக்கானோர் மொட்டை போட் டனர்.
மூன்றாவது நாளான நேற்று (30.10.2010) குருபூஜையும், ஜெயந்தி விழாவும் நடந்தது. மகாஅபிஷேகத்துடன் விழா துவங்கியது. காலை நினைவிட பொறுப்பாளர் காந்திமீனாள் நட ரா ஜன் தலைமையில் கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் சிறப்பு பூஜைகளை நடத்தினார்.
திமுக சார்பில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் காலை 9.50 மணிக்கு தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அவருடன் சபாநாயகர் ஆவுடையப்பன், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், சுப.தங்கவேலன், தமிழரசி மற்றும் ரித்தீஸ் எம்பி, எம்எல்ஏ முருகவேல், மதுரை மாவட்ட செயலாளர்கள் தளபதி, மூர்த்தி, தேனி மூக்கையா, மதுரை துணை மேயர் மன்னன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

சாயல்குடி திமுக சார்பில் பசும்பொன் கிராமத்தில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒன்றிய செயலர் சுப்பிரமணியம் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் நகர் செயலர் பால்காளை, விவசாய தொழிலாளர் அணி முத்துராமலிங்கம், கலைஞர் பகுத்தறிவு பாசறை ஒன்றிய செயலர் தமிழ்செழியன், ஒன்றிய அவைத்தலைவர் சீனி பாண்டியன், துணை செயலர்கள் செந்தூர்காந்தன், முனியசாமி, தொண்டரணி தர்மலிங்கம், மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜேந்திரன், இலக்கிய அணி முருகேசன், சாயல்குடி ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தூர் பாண்டியன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
இதில் மாவட்ட பிரதிநிதி அப்துல்சுக்கூர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயபாலன், ஊராட்சி தலைவர்கள் பாலகிருஷ்ணன் (எஸ்.வாகைக்குளம்), ராஜாங்கத்தேவர் (மாரியூர்), பாலகிருஷ்ணன் (உச்சிநத்தம்), அமானுல்லாகனி (அவத்தாண்டை), ஜெயபாலன் (கொத்தங்குளம்), ராமலட்சுமி லிங்கராஜ் (செஞ்சடைநாதபுரம்), வஹிதாசகுபர் (வாலிநோக்கம்), முனியசாமி (டி.எம்.கோட்டை), முத்துக்கானி தனுஷ்கோடி (டி.வேப்பங்குளம்), செந்தூர் பாண்டியன் (கொண்டுநல்லான்பட்டி), தட்சிணாமூர்த்தி (வீ.சேதுராஜபுரம்), மங்களேஸ்வரி மங்களசாமி (இதம்பாடல்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



தேவர் குருபூஜையை முன்னிட்டு கமுதி அருகே பசும்பொன்னில் நடந்த அன்னதானத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். உடன் அமைச்சர் சுப.தங்கவேலன், மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார்.
பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா தேர்தல் வரும் போதெல்லாம் இங்கு வருவதுபோல் அல்லாமல், நாங்கள் தேவருக்கு செலுத்த வேண்டிய மரியாதையை ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆண்டுதோறும் செலுத்தி வருகிறோம்.
மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்ட மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 6வது முறையாக மீண்டும் முதல்வர் கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைவது உறுதி. எங்கள் கூட்டணி பலமாக உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் முக்கிய தொழிற்சாலைகள் அமைக்க பல்வேறு சலுகைகள் அளித்து வருகிறோம் என ஸ்டாலின் கூறினார்.

No comments:

Post a Comment