கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, October 23, 2010

இரண்டு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்க உடனடி நடவடிக்கை முதலமைச்சர் கலைஞர் உத்தரவு


இலவச மின்சாரம் கோரி யுள்ள 2 லட்சம் விவசாயி களுக்கு இலவச மின்னி ணைப்பை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை உட னுக்குடன் நிறைவேற் றுங்கள் என்று வேளாண் துறை அதிகாரிகளுக்கு, முதலமைச்சர் கலைஞர் அறிவுரை வழங்கினார்.

தமிழக அரசு 19.10.2010 அன்று வெளியிட்டுள்ள செய்தி யில் கூறப்பட்டு இருப்ப தாவது:-

தமிழக முதலமைச்சர் கலைஞர், தமிழகத்தில் வேளாண்துறை செயல் படுத்திவரும் திட்டங்கள் குறித்த ஆய்வினை வேளாண்துறை அமைச் சர், செயலாளர் உள் ளிட்ட அதிகாரிகள் முன் னிலையில் 19.10.2010 அன்று ஆய்வு செய்தார். உணவு உற்பத் திக்கு மிகுந்த முக்கியத் துவம் அளித்துவரும் இந்த அரசு, கடந்த 5 ஆண்டு காலத்தில் 7 ஆயி ரத்து 437 கோடியே 22 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, 304 லட்சம் மெட் ரிக் டன் உணவுப் பொருள்களை உற்பத்தி செய்து சாதனை படைத் துள்ளது.

தொடர்ந்து உணவு உற்பத்தியைப் பெருக் கிடத் தேவையான இடு பொருள்களான விதை, உரம், பூச்சி மருந்துகள் விவசாயிகளுக்கு தங்கு தடையில்லாமல் கிடைப் பதற்கேற்ப இப்பொருள் களின் இருப்பினை கண் காணித்து சீராக விநி யோகம் செய்திட அதி காரிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றும், ``ராஜராஜன் 1000'' தொழில் நுட்பத் தைக் கடைப்பிடித்தால் எக்டேருக்கு சராசரியாக 7 ஆயிரம் கிலோ முதல் 8 ஆயிரம் கிலோ வரை நெல் விளைச்சல் கிடைக் கும் என்பதால், இத் தொழில்நுட்பத்தைக் கடைப்பிடிப்பதற்கு இதுவரை வழங்கப்பட் டுள்ள 2.43 லட்சம் மார்க்கர்கள், 3.63 லட்சம் கோனா, களை எடுக்கும் கருவிகள் ஆகியவை தேவைப்படும் விவசாயி களுக்கு உடனடியாக வழங்கிட ஆவன செய் திட வேண்டுமென்றும் அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.

எண்ணெய் வித்துக் கள் உற்பத்தியை அதி கரிக்க தேவையான நட வடிக்கைகளுக்கு ஊக்க மளிக்க வேண்டுமென் றும்; துல்லிய பண்ணைப் பயிர்த் திட்டம் மேலும் பல மாவட்டங்களுக்கு விரிவுபடுத்திட வேண்டு மென்றும்; குறிஞ்சி, முல்லை, மருதம், நெய் தல், பாலை எனும் அய் வகை மரபணு பூங்காக் கள் அந்தந்த நிலப்பகுதி களுக்குரிய அரிய வகைத் தாவரங்களைப் பாது காப்பதுடன், அந்தந்த பகுதி விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம் படுத்தும் வகையிலும் அமைக்கப்பட வேண்டு மென்றும் முதலமைச்சர் கலைஞர் அறிவுறுத்தி னார்.

இந்த அரசு விவசாய பம்பு செட்டுகளுக்கு ஏற் கெனவே இலவச மின் சாரம் வழங்கிய திட்டத் தில் 21 லட்சத்து 98 ஆயி ரத்து 790 விவசாயிகள் பயனடைந்துவரும் நிலை யில், சுயநிதி அடிப்படை யில் மின் இணைப்புப் பெற்றுள்ள 40 ஆயிரம் பம்பு செட்டுகளுக்கு ஆண்டுதோறும் இலவச மின்சாரம் வழங்கப்படு வதையும், இலவச மின் சாரம் கோரி தற்போது நிலுவையில் உள்ள 2 லட் சம் விவசாயிகளுக்கும் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளதையும் நினைவுகூர்ந்த முதல மைச்சர், இத்திட்டப் பணிகளைச் சுணக்கம் இல்லாமல் உடனுக்கு டன் நிறைவேற்றி விவ சாயப் பணிகள் தொய் வின்றி நடைபெறவும், விவசாயிகளின் வாழ்க் கைத் தரம் உயரவும் மிகுந்த பொறுப்போடு பணியாற்றிட வேண்டு மென அதிகாரிகளுக்கு ஆணைகள் பிறப்பித்தார். இந்த ஆய்வின் தொடக் கத்தில், கேரள மாநிலத் தில் உரித்த தேங்காய் கொள்முதல் செய்வதில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறைகள் குறித்து அறிந்து வந்து அரசுக்கு அறிக்கை தர அமைக்கப்பட்ட குழு வின் அறிக்கையை முதலமைச்சரிடம், வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வழங்கினார். இந்த ஆய்வின்போது, வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம், தலை மைச் செயலாளர் சு. மாலதி, நிதித்துறை முதன் மைச் செயலாளர் க.சண் முகம், வேளாண்மை உற் பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செய லர் பா.ராம்மோகனராவ், வேளாண்மைத்துறை ஆணையர் சி.கோசலரா மன், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை இயக்குநர் டாக்டர் பி.சந்திரமோகன் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணி கத்துறை ஆணையர் அதுல் ஆனந்த், சர்க்க ரைத்துறை ஆணையர் விக்ரம் கபூர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

- இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment