கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, October 29, 2010

காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறந்து விட சட்டப்படி அணுகுவோம் - முதல்வர் கருணாநிதி


காவிரி பிரச்னையில் கர்நாடக அரசின் முடிவை சட்டப்படி அணுகுவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பின்படி தமிழகத்துக்கு கர்நாடக அரசு ஆண்டுதோறும் 205 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். இந்த ஆண்டு இதுவரை 83 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே காவிரி நீர் தமிழகத்திற்கு வந்துள்ளது. மீதமுள்ள தண்ணீரை தமிழகத்துக்கு வழங்குமாறு முதல்வர் கருணாநிதி வலியுறுத்தி வந்தார். கர்நாடக அரசுக்கு கடிதமும் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் வழங்க இயலாது என்று கர்நாடக அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியிருந்தார். இது குறித்து முதல்வர் கருணாநிதியிடம் நேற்று (28.10.2010) நிருபர்கள் கேட்டனர். அப்போது அவர் அளித்த பேட்டி:
கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரியிலிருந்து தண்ணீர் விடமாட்டோம் என்று சொல்லியிருக்கிறார்களே?
பத்திரிகைகளிலே வரும் செய்திகளை வைத்துக் கொண்டு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. பத்திரிகைகளிலே வரும் செய்திகளினால், நான் சொல்கிற பதில்களினால் இரண்டு மாநிலங் களுக்கும் இடையிலே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு நான் இடம் தர விரும்பவில்லை. சட்டப்படி நமக்கு வந்து சேர வேண்டிய தண்ணீருக்காக தொடர்ந்து நாம் வாதாடுவோம்; நடவடிக்கை எடுப்போம்.
கர்நாடகாவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்திருக்கிறது. அதில் தமிழகத்திற்குத் தண்ணீர் தரக்கூடாது; அணை நிரம்பியதற்குப் பிறகுதான் தண்ணீர் கொடுக்கலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறதே?
நீங்கள் சொல்கிற செய்திகளையெல்லாம் நான் பத்திரிகைகளிலே பார்க்கவில்லை; பார்த்த பிறகு சொல்கிறேன்.
இது தொடர்பாக பிரதமருக்கு நீங்கள் கடிதம் எழுதுவீர்களா?
பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேரடியாகவே இது குறித்து சொல்லியிருக்கிறோம். அதனால் கடிதம் எழுதத் தேவையில்லை. அவருக்குத் தெரியும். உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு இருக்கிறது. அது குறித்து சட்டப்படி நாங்கள் அணுகுவோம்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.

No comments:

Post a Comment